இந்திய அணியில் மூன்று ஆண்டுகளுக்கு பின்னால் வாய்ப்பு பெற்றிருக்கும் சுழல் பந்துவீச்சாளர் வருண் சக்கரவர்த்தி தன்னுடைய பந்துவீச்சில் செய்திருக்கும் மாற்றம் குறித்து கூறியிருக்கிறார்.
2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை இந்திய அணியில் வாய்ப்பு பெற்ற அவருக்கு அதற்கு பிறகு மூன்று ஆண்டுகளாக வாய்ப்பு கிடைக்கவில்லை. அந்த வருடம் இந்திய அணி தோற்று முதல் சுற்று உடன் வெளியேறி வந்தது. இவரது கிரிக்கெட் வாழ்க்கையையும் தனிப்பட்ட முறையில் பாதித்தது.
இரண்டு ஆண்டுகளாக ஐபிஎல் மற்றும் டிஎன்பிஎல்
கடந்த இரண்டு ஆண்டுகளாக வருண் சக்கரவர்த்தி தன்னுடைய பந்துவீச்சில் சில மாறுதல்களை செய்து தன்னை மிகவும் முன்னேற்றி வந்திருக்கிறார். ஐபிஎல் தொடரிலும் மற்றும் தமிழ்நாடு டிஎன்பிஎல் தொடரிலும் அவருடைய பந்துவீச்சு மிகவும் சிறப்பாகவும் கூர்மையானதாகவும் மாறி இருந்தது.
வருண் சக்கரவர்த்தி பந்துவீச்சை பார்க்கும் பொழுது அவர் பந்து வீசும் வேகம், கூக்ளி மற்றும் லென்த் மிகவும் சிறப்பானதாக மாறி இருப்பதை உணர முடிந்தது. ஆனால் அவர் இதை தாண்டி ஒரு முக்கிய மாற்றத்தை செய்திருப்பதை தற்போது கூறி இருக்கிறார். அதுவே அவருடைய பந்துவீச்சின் வெற்றிக்கான ரகசியமாகவும் இருக்கிறது.
ஒரு நிமிட வேலைக்கு இரண்டு வருடங்கள்
இதுகுறித்து வருண் சக்கரவர்த்தி கூறும் பொழுது “நான் முதலில் சைடு ஸ்பின் பந்துவீச்சை செய்து வந்தேன். தற்பொழுது ஓவர் ஸ்பின் பந்துவீச்சுக்கு மாறி இருக்கிறேன். இது ஒரு நிமிட தொழில்நுட்ப அம்சம்தான். ஆனால் எனக்கு இரண்டு வருடங்களுக்கும் மேலாக எடுத்தது. நான் இதை டிஎன்பிஎல் மற்றும் ஐபிஎல் தொடரில் தொடர்ந்து பரிசோதித்து மேம்படுத்தி வந்தேன். இதில் மனஅம்சமும் வேலை செய்ய வேண்டி இருந்ததால் எனக்கு காலம் எடுத்தது”
இதையும் படிங்க : நான் பண்ணையில் கிரிக்கெட் விளையாடி வளர்ந்தேன்.. டிராவிட் சார் பெரிய விஷயத்தை கற்றுக்கொடுத்தார் – முகேஷ் குமார் பேட்டி
“இந்திய அணி அறிவிக்கப்படும் பொழுதெல்லாம் என் பெயர் இல்லாததை பார்த்து நான் ஏமாற்றம் அடைந்தேன். மீண்டும் அணிக்குள் நான் வரவேண்டும் என்கின்ற உந்துதலை இது எனக்கு கொடுத்தது. தற்பொழுது அணியில் நிறைய போட்டி இருக்கவே செய்கிறது. ஆனாலும் கூட ரவி பிஸ்னாய் என்னிடம் நிறைய செய்திகளை கூறினார். எனக்கு களத்தில் ஏதாவது சொல்லிக் கொண்டே இருந்தார். இதற்கு மேல் நான் வேறு என்ன கேட்க முடியும்?” என்று கூறி இருக்கிறார்.






