நான் பண்ணையில் கிரிக்கெட் விளையாடி வளர்ந்தேன்.. டிராவிட் சார் பெரிய விஷயத்தை கற்றுக்கொடுத்தார் – முகேஷ் குமார் பேட்டி

0
19
Dravid

இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமார் ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கு தான் தேர்வு செய்யப்படுவேனா? என்பது குறித்து கூறியிருக்கிறார்.

தற்பொழுது ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக அவர்களது மண்ணில் டெஸ்ட் தொடருக்கு செல்லும் இந்திய அணியில் நான்காவது வேகப்பந்துவீச்சாளராக யார் செல்வார்கள்? என்பதற்கான போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. மேலும் முகமது ஷமி உடல் தகுதியை எட்டவில்லை என்றால் கூடுதலாக இன்னொரு வேகப்பந்துவீச்சாளரும் தேவை.

- Advertisement -

துலீப் டிராபி – இரானி கோப்பையில் சாதித்த மகேஷ் குமார்

இந்த ஆண்டு டி20 உலகக் கோப்பை தொடருக்குப் பிறகு இந்தியாவில் நடைபெற்ற இரண்டு சிவப்பு பந்து தொடர்களில் துலீப் டிராபியில் முகேஷ் குமார் 15 விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதைத்தொடர்ந்து ஒரே ஒரு போட்டியை கொண்ட இரானி கோப்பையில் ஒரு இன்னிங்ஸில் ஐந்து விக்கெட் கைப்பற்றினார். மொத்தம் அவர் 20 விக்கெட்டுகள் தற்பொழுது வீழ்த்தி இருக்கிறார்.

அதே சமயத்தில் துலீப் டிராபியின் ஆரம்பத்திலேயே ஆகாஷ் தீப்பை இந்திய அணி நிர்வாகம் பங்களாதேஷ் டெஸ்ட் தொடருக்கு அழைத்துக் கொண்டது. ஆனால் 2023 ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணிக்கு டெஸ்ட் போட்டியில் அறிமுகமான முகேஷ் குமாரை இந்திய அணி நிர்வாகம் தேர்வு செய்யவில்லை.

- Advertisement -

நான் பண்ணையில் விளையாடி வளர்ந்தேன்

இதுகுறித்து பேசி இருக்கும் முகேஷ் குமார் கூறும் பொழுது “இப்போது நான் விளையாடும் அணியின் கேப்டன் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கையை நான் நியாயப்படுத்த வேண்டியது முக்கியம். நன்றாக செயல்பட்டு இருந்தால் நிச்சயம் என்னை தேர்வு செய்வார்கள் நடக்க வேண்டியது நடக்கும். நான் மற்ற போட்டிகளில் சிறப்பாக செயல்பட வேண்டும்”

“மூத்தவர்களுடன் இருக்கும் பொழுது ஒழுக்கத்தை கற்றுக் கொள்கிறோம். ராகுல் டிராவிட் சார் பழைய பந்துவீச்சு பயிற்சியாளர் இருவரும் நிறைய விஷயங்கள் எனக்கு கொடுத்து இருக்கிறார்கள். ராகுல் டிராவிட் சார் எனக்கு மதிப்புமிக்க பல விஷயங்களை கற்றுக் கொடுத்திருக்கிறார். அவர்களுடன் இணைந்து பணியாற்றியதில் வெவ்வேறான சூழ்நிலைகளில் நம்மை எப்படி வெளிப்படுத்துவது என்பதை கற்றுக் கொண்டிருக்கிறேன்”

இதையும் படிங்க : கம்பீர் சொன்னது சரிதான்.. ஆனா சஞ்சு சாம்சனை இதனால நீக்கிடுவாங்க – ஆகாஷ் சோப்ரா பேட்டி

“நான் விளையாட ஆரம்பித்த காலத்தில் இருந்து ஒரு பந்தை என் கையில் கொடுத்தால் நான் எல்லாவிதமான கிரிக்கெட்டிலும் விளையாட தயாராக இருந்தேன். நான் ஆரம்பத்தில் பண்ணையில் பந்துவீசி கிரிக்கெட் விளையாடி வளர்ந்தவன். அதனால் நான் விளையாடும் ஒவ்வொரு அணியையும், ஒவ்வொரு மைதானத்தையும் மதிக்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -