இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பாகிஸ்தான் அணி அடைந்த மோசமான தோல்விகளுக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டு எடுத்து வரும் அதிரடி முடிவுகள் குறித்து முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மனம் திறந்து பேசியுள்ளார்.
இங்கிலாந்துக்கு எதிரான தொடரில் பின்னடைவைச் சந்தித்ததைத் தொடர்ந்து, அணியின் கோச்சிங் செட்டப் மற்றும் ஸ்குவாட் ஆகியவற்றில் மிகப்பெரிய மாற்றங்களை செய்ய பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.
தற்போதைய அணியின் மீது நிர்வாகம் நம்பிக்கையை இழந்துவிட்டதாகவும், புதிய இளம் பிளேயர்களைக் கொண்டு எதிர்காலத்திற்கான ஒரு வலுவான அணியை உருவாக்க அவர்கள் திட்டமிட்டு வருவதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இதுகுறித்து சோயப் அக்தர் பேசும்போது “பிசிபி இந்த பிளேயர்கள் மீது மிகவும் அப்செட் ஆக இருக்கிறது. அவர்கள் இந்த பாகிஸ்தான் ஸ்குவாட் மீது எந்த எதிர்பார்ப்பும் வைக்கவில்லை. இந்த ஸ்குவாட்டை நீக்கிவிட்டு இளமையான புதிய பிளேயர்களை கொண்டு வர பிளான் செய்கிறார்கள். பாகிஸ்தானுக்காக விளையாட விரும்பும் பிளேயர்களை அவர்கள் தேடுகிறார்கள்,” என்று கூறி இருக்கிறார்.
தொடர்ந்து பேசுகையில் “இந்த ட்ரான்சிஷன் காலத்தில் ஷாஹீன் ஷா அப்ரிடி, நசீம் ஷா மற்றும் ஹாரிஸ் ரவுஃப் ஆகியோரின் கேரியரை காப்பாற்ற வேண்டும் என்று நான் விரும்புகிறேன். இந்த பிளேயர்களுக்குள் இன்னும் நிறைய கிரிக்கெட் மீதமுள்ளது. இந்த பாகிஸ்தான் டீமிடம் எந்த பைட்டிங் ஸ்பிரிட்டும் இல்லை,” என்று கூறி இருக்கிறார்.






