இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் 14 வயதில் மிகச் சிறப்பாக ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்காக விளையாடி அனைவரது கவனத்தையும் கவர்ந்த வைபவ் சூரியவன்சி அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடருக்கான தனது திட்டம் குறித்து பேசி இருக்கிறார்.
2025 நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி நிர்வாகம் 1.10 கோடி ரூபாய்க்கு 14 வயது இளம் இடது கை பேட்ஸ்மேன் வைபவ் சூரியவன்சியை வாங்கி இருந்தது. அவர் வெறும் 35 பந்துகளில் அதிரடியாக சதம் அடித்து பல்வேறு உலக சாதனைகளை டி20 கிரிக்கெட்டில் படைத்தார்.
என் குறிக்கோள் இதுதான்
இதுகுறித்து வைபவ் சூரியவன்சி பேசும்பொழுது “ஐபிஎல் தொடரில் விளையாடுவது அனைத்து இளம் வீரர்களுக்கும் ஒரு கனவு போன்றது. எனக்கு முதல் ஐபிஎல் தொடரில் நிறைய பாசிட்டிவான விஷயங்கள் கிடைத்திருக்கின்றன. அடுத்த சீசனில் அணிக்காக நான் என்ன செய்ய முடியும் என்பதை, தற்போது விளையாடியதில் இருந்து நிறைய கற்றுக் கொண்டிருக்கிறேன்”
“அடுத்த ஆண்டு நான் தவறு செய்த இடங்களில் நிறைய வேலை செய்வேன். மேலும் அணிக்காக இன்னும் சிறப்பாக செயல்படுவதற்கு முயற்சி செய்வேன். நான் என்ன கற்றுக் கொண்டிருக்கிறேன் என்றால், நான் இந்த வருடம் செய்ததை விட, இன்னும் இரண்டு மடங்கு சிறப்பாக செய்ய வேண்டும் என்பதைத்தான். இதனால் என்னுடைய அணி அடுத்த ஆண்டு ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடும். எனவே நான் எவ்வளவு சிறப்பாக செயல்பட முடியும் என்பதில் கவனம் செலுத்தப் போகிறேன்”
ஆயுஸ் மத்ரே கேப்டன்
“19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கான கிரிக்கெட்டில் விளையாடுவதற்காக நான் இங்கிலாந்து முதல் முறையாக செல்ல இருக்கிறேன். இது எனக்கு முற்றிலும் ஒரு புதிய அனுபவமாக இருக்கப் போகிறது. அந்த விளையாட்டு எப்படி போகிறது என்பது குறித்து நான் அறிந்து கொள்வதற்கு மிகவும் ஆவலாக இருக்கிறேன்”
இதையும் படிங்க : ஐபிஎல் ஏலத்துல அவர வாங்கி இருப்போம்.. டிவிலியர்ஸ் பேச்சுக்கு ஆர்சிபி கோச் எதிர் கருத்து – என்ன நடந்தது?
“எங்களுடைய இந்த அணிக்கு இந்த வருடம் சிஎஸ்கே அணிக்கு துவக்க ஆட்டக்காரராக விளையாடிய ஆயுஸ் மத்ரே கேப்டனாக இருக்கிறார். இந்தத் தொடருக்கான ஏற்பாடுகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இங்கிலாந்தில் விளையாடுவது மிகவும் நல்ல அனுபவமாக இருக்கும். மேலும் நாங்கள் கோப்பையுடன் திரும்புவதற்கு முயற்சி செய்வோம்” என்று கூறி இருக்கிறார்.






