இந்த ஆண்டு ஐபிஎல் மெகா ஏலத்தில் ஆர்சிபி அணி ஒரு குறிப்பிட்ட இந்திய வீரரை வாங்காதது அவர்களுக்கு சிறந்ததாக அமைந்துவிட்டது என ஏபி டிவில்லியர்ஸ் கூறியிருந்தார். தற்போது அவரது கருத்துக்கு எதிராக ஆர்சிபி தலைமை பயிற்சியாளர் ஆன்டி பிளவர் பேசியிருக்கிறார்.
ஐபிஎல் தொடரில் 17 வருடங்களாக ஆர்சிபி அணியால் கோப்பையை வெல்ல முடியாதது வெளியில் நிறைய விமர்சனங்களையும் கிண்டல்களையும் உருவாக்கி இருந்தது. இந்த நிலையில் அதையெல்லாம் உடைத்து முதல் முறையாக இந்த வருடம் ஐபிஎல் பட்டத்தை ஆர்சிபி அணி வென்றிருக்கிறது.
ஏபி டிவில்லியர்ஸ் கருத்து
இந்த நிலையில் நடந்து முடிந்த ஐபிஎல் மெகா ஏலத்தின் 23.50 கோடி ரூபாய் வரைக்கும் வெங்கடேஷ் ஐயருக்காக ஆர்சிபி அணி நிர்வாகம் சென்று இருந்ததை ஏபிடி வில்லியர்ஸ் குறிப்பிட்டு, அவரை வாங்கி இருந்தால் அதற்கடுத்து பில் சால்ட் ஜோஸ் ஹேசில்வுட் மற்றும் ஜிதேஷ் சர்மா ஆகியோரை வாங்கி இருக்க முடியாது என்று குறிப்பிட்டிருந்தார்.
மேலும் அவர் தான் விளையாடிய பொழுதும் தனக்கு ஆர்சிபி அணியில் நிறைய தொகையை சம்பளமாக கொடுத்தார்கள் என்றும், ஆனால் தற்போது வாங்கப்பட்ட சிறந்த வீரர்கள் யாருமே 15 கோடியை தாண்டி கிடையாது என்பதையும் சுட்டிக் காட்டி இருந்தார். ஒருவேளை வெங்கடேஷ் ஐயரை வாங்கி இருந்தால் மேட்ச் வின்னிங் வீரர்கள் சிலரை வாங்க முடியாமல் போய் இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
சிறந்த சீசன் அமைந்திருக்கும்
இந்த நிலையில் ஏபி டிவில்லியர்ஸ் கருத்துக்கு அப்படியே நேர் எதிராக ஆர்சிபி அணியின் தலைமை பயிற்சியாளர் ஆன்டி பிளவர் பேசியிருக்கிறார். வெங்கடேஷ் ஐயரை ஆர்சிபி அணி வாங்கி இருந்தால் அவருக்கு சிறந்த ஐபிஎல் சீசன் அமைந்திருக்கும் என்று கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : ஐபிஎல் 2025.. லக்னோ அணியின் மெண்டர் பதவியிலிருந்து ஜாகிர் கான் நீக்கப்பட வாய்ப்பு.. காரணம் என்ன?
இந்த நிலையில் இது குறித்து பேசி உள்ள ஆன்டி பிளவர் கூறும் பொழுது “நாங்கள் வெங்கடேஷ் ஐயரை மிகவும் மதிப்பிட்டோம். எனவே ஏலத்தில் நாங்கள் அவருக்காக மிகவும் கடுமையாக முயற்சி செய்தோம். எங்கள் அணியில் மிகவும் வலிமையான இந்திய வீரர்கள் கொண்ட அமைப்பை வைத்திருப்பதை நாங்கள் விரும்பினோம். மேலும் எங்கள் அணியில் சில இளம் வீரர்களையும் டாப் ஆர்டரில் ஒரு இடதுகை இந்திய பேட்ஸ்மேனையும் விரும்பினோம். எங்களால் அவரை வாங்க முடியவில்லை. ஒருவேளை நாங்கள் அவரை வாங்கி இருந்தால், அவருக்கு இந்த ஆண்டு சிறந்த ஐபிஎல் சீசன் அமைந்திருக்கும்” என்று கூறியிருக்கிறார்.






