விக்கெட் எடுத்தபின் வாயில் டேப் ஒட்டிக்கொண்ட யுஎஸ்ஏ வீரர்… உலகக்கோப்பை குவாலிபயர் போட்டியில் அரங்கேறிய சம்பவம்!

0
487

உலகக்கோப்பை குவாலிஃபயர் லீக் போட்டியில் அமெரிக்க வீரர் அலி கான், நெதர்லாந்து பேட்ஸ்மேனின் விக்கெட் வீழ்த்திய பிறகு வாயில் டேப் ஒட்டிக்கொண்ட நிகழ்வு கிரிக்கெட் உலகில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கான காரணம் என்ன என்பதை பின்வருமாறு காணலாம்.

தற்போது ஜிம்பாப்வேயில் உலகக்கோப்பை குவாலிபயர் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு தலா ஐந்து அணிகள் என மொத்தம் பத்து அணிகள் இந்த குவாலிபர் போட்டிகளில் விளையாடி வருகின்றன.

- Advertisement -

குரூப் பி பிரிவில் இடம்பெற்றுள்ள நெதர்லாந்து மற்றும் யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா ஆகிய இரு அணிகளும் ஒன்பதாவது லீக் போட்டியில் இன்று மோதினர். இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த யுனைடெட் ஸ்டேட்ஸ் ஆஃப் அமெரிக்கா அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 211 ரன்கள் மட்டுமே அடித்தது.

இதனை சேஸ் செய்த நெதர்லாந்து அணி 43.2 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் மட்டுமே இழந்து இலக்கை கடந்தது. ஐந்து விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றது. அமெரிக்கா அணி பந்து வீசியபோது அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் அலி கான் செய்த செயல் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

அமெரிக்க அணியின் வேகப்பந்து பேச்சாளர் ஆலி கான், லீக் சுற்றில் நடந்த ஒரு போட்டியில் எதிரணி வீரருடன் விதிகளை மீறி சண்டையில் ஈடுபட்டதால், ஐசிசி அவரை ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடை விதித்தது.

- Advertisement -

தடை முடிந்து நெதர்லாந்து அணிக்கு எதிரான லீக் போட்டியில் விளையாடியபோது, போட்டியின் நான்காவது ஓவரே நெதர்லாந்து அணியின் துவக்க வீரர் விக்ரம்ஜித் சிங் விக்கெட்டை பந்துவீசி கேட்ச் எடுத்து அவுட்டாக்கினர். விக்கெட் வீழ்த்தியதற்கு கொண்டாடும் விதமாக பாக்கெட்டில் வைத்திருந்த டேப் எடுத்து தனது வாயில் ஒட்டிக்கொண்டபடி நடந்து சென்றார். ஒரு போட்டியில் விளையாடுவதற்கு தடை விதிக்கப்பட்டது எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அலி கான் இப்படி செய்தார் என பேசப்பட்டு வருகிறது.