இந்தியாவுக்கு எதிரா ஆடுவது உணர்ச்சி வசமாக இருக்கும்.. சூரியகுமாரை அப்பவே தெரியும் – அமெரிக்க நெட்ரவால்கர் பேச்சு

0
417
Netrawalkar

நடப்பு டி20 உலகக்கோப்பையில் அமெரிக்க அணி பாகிஸ்தான் அணியை வீழ்த்தி ஆச்சரியம் அளித்தது. இந்த வெற்றியில் இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் விளையாடி அமெரிக்காவுக்காக தற்போது விளையாடும் சவுரப் நெட்ரவால்கர் முக்கிய பங்கை வகித்தார். இவர் அடுத்து இந்தியாவுக்கு எதிராக விளையாட இருக்கும் போட்டி குறித்து பேசி இருக்கிறார்.

தற்பொழுது 32 வயதான இவர் இடதுகை வேகப் பந்துவீச்சாளர். இந்திய உள்நாட்டு கிரிக்கெட்டில் மும்பை மாநில அணிக்காக மூன்று வடிவ கிரிக்கெட்டிலும் விளையாடியிருக்கிறார். மேலும் மும்பை அணிக்காக விளையாடிய பொழுது இந்திய வீரர் சூரியகுமார் யாதவ உடன் இணைந்து விளையாடி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் 2010 ஆம் ஆண்டு அண்டர் 19 உலகக்கோப்பை தொடரில் கே எல் ராகுல் மற்றும் மயங்க் அகர்வால் ஆகியோருடன் சேர்ந்து விளையாடி இருக்கிறார். பிறகு இந்திய அணியில் சரியான வாய்ப்புகள் இல்லாத காரணத்தினால் அமெரிக்கா சென்று, அந்த அணிக்காக 2019 ஆம் ஆண்டு முதல் விளையாடி வருகிறார்.

தற்பொழுது இந்திய அணிக்கு எதிரான போட்டி குறித்து பேசி இருக்கும் அவர் “இந்திய அணியில் அனைவரையும் எனக்கு தெரியும். நானும் சூரியகுமார் யாதவும் மும்பை அணிக்காக 15 முதல் 19 வயதுக்கு உட்பட்ட 3 அணிகளிலும் விளையாடியிருக்கிறோம். சூரியகுமார் சாதித்துள்ளதை பார்ப்பதற்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவரை மீண்டும் சந்திப்பது நன்றாக இருக்கும். மேலும் இந்தியாவுக்கு எதிராக விளையாடுவது உணர்ச்சிபூர்வமான ஒன்று!

நான் விளையாடும் பொழுது எப்பொழுதும் அழுத்தத்தை உணர்ந்தது கிடையாது. நீங்கள் எதையாவது நேசிக்கும் பொழுது அது உங்களுக்கு ஒரு வேலையாக இருக்காது. நான் பந்து வீசும் பொழுது பேட்டரை அவுட் திங் செய்ய வைப்பதில் முயற்சி செய்ய விரும்புகிறேன். நான் இப்படி செய்வதால் இது எனக்கு எப்போதும் ஒரு வேலையாகவும் இருக்காது. அதனால் அழுத்தமும் இருக்காது.

- Advertisement -

இதையும் படிங்க : எங்க தோல்விக்கு.. எங்க நாலு பேர் பண்ண காரியம்தான் முக்கிய காரணம் – இலங்கை கேப்டன் ஹசரங்கா பேட்டி

நாங்கள் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை முடித்துக் கொண்டு டல்லாஸில் இருந்து நியூயார்க்கிற்கு பறந்தோம். உண்மையைச் சொல்ல வேண்டும் என்றால் இது மிக அதிகமாக இருந்தது. ஆனால் ஒவ்வொருவரும் செயல்பட்ட விதத்திற்கு நான் அவர்களுக்கு நன்றி சொல்ல விரும்புகிறேன். மேலும் நான் ஆசீர்வதிக்கப்பட்டவனாக உணர்கிறேன்” என்று கூறியிருக்கிறார்.