கிரிக்கெட் போட்டிகளில் அனைத்து ரசிகர்களையும் அசரவைத்த 7 ஸ்கோர் கார்டுகளின் பட்டியல்

0
6945
Scorecards in Cricket

கிரிக்கெட் போட்டியை பொறுத்தவரையில் எந்த நேரத்தில் போட்டி எந்தவிதமாக மாறும் என்பதை யாராலும் கணிக்க முடியாது. ஒரு அணி தோற்பது போல் தெரியும் கடைசியில் வென்றுவிடும், அதேபோல மறுமுனையில் ஒரு அணி ஜெயிப்பது போல் தோன்றும் ஆனால் கடைசியில் அது தோல்வி அடையும். 

இதுமாதிரியான திருப்பங்களும் ஆச்சரியங்களும் கிரிக்கெட் போட்டியில் எப்போதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கும். அப்படி பட்ட திடீர் திருப்பங்களும் ஆச்சரியங்களும் ஏற்பட்ட ஒரு சில கிரிக்கெட் போட்டிகளின் ஸ்கோர் கார்டு பட்டியலை குறித்து தற்போது பார்ப்போம்.

- Advertisement -

1. கே சி காந்தி மற்றும் ஆர்யா குருக்கள் அணிகள்

இந்திய ரசிகர்கள் அனைவரும் பிரணவ் தனவடே என்கிற பெயரை மறந்திருக்க மாட்டார்கள். உள்ளூர் போட்டிகளில் கேசி அணிக்காக விளையாடியவர் பிரணவ், அவர் ஆரிய குருக்கள் அணைக்கு எதிராக ஒரு முறை 1009 ரன்களை ஒரே இன்னிங்சில் அடித்தார்.

முதலில் பேட்டிங் ஆடிய ஆரிய குருக்கள் அணி தனது முதல் இன்னிங்சில் வெறும் 33 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதன்பின்னர் பிரணவ் அதிரடியாக விளையாடி 1009 குவிக்க, கே சி காந்தி அணி முதல் இன்னிங்ஸில் முடிவில் 1465 ரன்கள் குவித்தது அதன் பின்னர் 2-வது இன்னிங்சை விளையாடிய ஆரிய குருக்கள் அணி இரண்டாவது இன்னிங்சில் வெறும் 52 ரன்கள் மட்டும் தான் குவித்தது. இதன் மூலம் ஒரு இன்னிங்ஸ் வித்தியாசம் மட்டுமல்லாமல் 1382 ரன்கள் வித்தியாசத்திலும் கே சி காந்தி அணி வெற்றி பெற்றது. நடந்து முடிந்த இப்போட்டியில் ஸ்கோர் கார்டை தற்பொழுது பார்த்தாலும் அனைவருக்கும் தலை சுற்றி போகும்.

2. ராஜ்சாகி டிவிஷன் மற்றும் சிட்டகாங் டிவிஷன் 

பங்களாதேஷில் நடந்த ஒரு உள்ளூர் போட்டியில் ராஜ்சாகி டிவிஷன் மற்றும் அணிகள் மோதிக்கொண்டன. இதில் ராஜசேகர் டிவிஷன் முதல் இன்னிங்ஸில் பேட்டிங் விளையாடியபோது ஓபனிங் வீரர்கள் மட்டுமல்லாமல் மிடில் ஆர்டர் வீரர்களும் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை பறிகொடுத்தனர். ஒரு கட்டத்தில் அணி 77 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை பறிகொடுத்து பரிதாப நிலையில் இருந்தது.

- Advertisement -

அதன் பின்னர் ஏழாவது வீரராக களமிறங்கிய ஃபார்ஹத் ரேசா 259 ரன்கள் குவித்தார் அதற்கு அடுத்தபடியாக 8வது வீரராக களமிறங்க சுன்மயல் இஸ்லாம் 172 ரன்களையும் 9வது வீரராக களமிறங்கிய முக்டர் அலி 162 ரன்கள் குவிக்க அந்த அணி இறுதியாக 675 ரன்களை குவித்தது. 6 விக்கெட்டுகள் போன பின்னரும் இவ்வளவு ரன்களை அந்த அணியின் ஸ்கோர் கார்டு இன்று வரை அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் 

3. தென் ஆப்ரிக்கா மற்றும் பெர்முடா பெண்கள் அணி 

2008 ஆம் ஆண்டு பெண்கள் உலகக் கோப்பைக்கான தகுதி சுற்று போட்டியில் தென்ஆப்பிரிக்க மற்றும் பெர்முடா அணிகள் மோதியது. அந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த பெர்முடா 18 ஓவர்களில் தங்களது அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து மொத்தமாகவே வெறும் 13 ரன்களை மட்டும்தான் குவித்தது. அந்த அணையில் 7 பேர் ரன்கள் எதுவும் எடுக்காமல் டக் அவுட் ஆகினர். பேட்ஸ்மேன்கள் மொத்தமாகவே 3 ரன்கள் மட்டும் தான் எடுத்தனர், எக்ஸ்டார் ரன்களாக பத்து ரன்கள் சேர அந்த அணைக்கு 13 ரன்கள் கிடைத்தது.

- Advertisement -

அதன் பின்னர் களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி வெறும் 4 பந்துகளில் அந்த இலக்கை எட்டி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

4. வொர்செஸ்டர்ஷைர் மற்றும் கிலாமோர்கன் அணிகள்

1977ஆம் ஆண்டு இங்கிலாந்து உள்ளூர் போட்டிகளில் ஒரு முறை வொர்செஸ்டர்ஷைர் மற்றும் கிலாமோர்கன் அணிகள் மோதிக்கொண்டன. அதில் வொர்செஸ்டர்ஷைர் அணி முதலில் பேட்டிங் செய்தது. அதன் ஓபனிங் டர்னர் 141 ரன்கள் எடுத்து ஆட்டம் முடியும் வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆனால் அவருக்கு அடுத்ததாக விளையாடிய 9 வீரர்களும் 10 ரன்களுக்கு மேல் எடுக்க முடியாமல் அவுட் ஆகினர். அந்த அணியின் மொத்த ஸ்கோர் 169 ஆகும்.

ஒரே ஒரு வீரரை வைத்து மட்டும் 169 ரன்களை குவித்ததும், ஒரே ஒரு வீரரை மட்டும் அடிக்க பின்னர் வந்த அனைத்து வீரர்களும் சொற்ப ரன்களில் அடுத்தடுத்து ஆட்டம் இழந்ததும் இன்று வரை மிக ஆச்சரிய பட வைக்கும் போட்டியாக அமைந்துள்ளது.

5. ராஜஸ்தான் மற்றும் ஹைதராபாத் அணி

Deepak Chahar Domestic

2010 ஆம் ஆண்டு ராஜஸ்தான் மற்றும் ஐதராபாத் அணிகள் உள்ளூர் போட்டி ஒன்றில் மோதிக்கொண்டன. அந்த போட்டியில் ராஜஸ்தான் அணிக்காக முதன் முதலாக தீபக் சஹர் களமிறங்கினார். அந்த போட்டியில் 7.3 ஓவர்களை வீசி மொத்தமாக 10 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 8 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

அவருடைய அதிரடி பவுலிங்கில் தாங்கமுடியாமல் ஹைதராபாத் அணி சிறிது நேரத்திலேயே தங்களது அனைத்து விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. தீபக் சஹர் வீசிய அந்த பந்துவீச்சு அட்டவணையை தற்பொழுது பார்த்தாலும் அனைவரும் ஆச்சரியப்படுவார்கள்.

6. கர்நாடகா மற்றும் உத்தர் பிரதேஷ்

2016 ரஞ்சிப் போட்டியில் காலிறுதி சுற்றில் கர்நாடக மற்றும் உத்தர பிரதேஷ் அணிகள் மோதிக்கொண்டன அந்த போட்டியில் முதல் இன்னிங்ஸில் கர்நாடக அணி பேட்டிங் செய்தது. பேட்டிங் ஆடிய கர்நாடக அணி வீரர்களான ராபின் உத்தப்பா கரண் நாயர் மற்றும் சிஎம் கௌதம் மூன்று பேரும் சதம் அடித்து அசத்தினார்.

மறு முனையில் கே எல் ராகுல், மனிஷ் பாண்டே, அமர்நாத், சரத் மற்றும் ஸ்ரேயாஸ் கோபால் டக் அவுட் ஆகி ஏமாற்றம் அளித்தார். ஒரே போட்டியில் 4 பேர் டக் அவுட் ஆனதும் 3 பேர் சதம் அடித்ததும் மிக வித்தியாசமாக பார்க்கப்பட்டது. அந்தப் போட்டியின் ஸ்கோர் கடையைத் எப்பொழுது பார்த்தாலும் அனைவருக்கும் வித்தியாச உணர்வைத் தரும்.

7. மோகன் பெஹன் மற்றும் பி என் ஆர் அணிகள்

பெங்காலியில் நடந்த ஒரு டி20 கிரிக்கெட் போட்டியில், மோகன் பெஹன் மற்றும் பி என் ஆர் அணிகள்

மோதிக் கொண்டனர் இதில் முதலில் விளையாடிய பி என் ஆர் 151 ரன்கள் அடித்தது. 152 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய 

மோகன் பெஹன் அணியின் தொடக்க ஆட்டக்காரர் விருத்திமான் சஹா வெறும் 20 பந்துகளில் 100 ரன்கள் அடித்தார். இதற்கு முன்னால் கிறிஸ் கெயில் தான் டி20 கிரிக்கெட் போட்டியில் 30 பந்துகளில் 100 ரன்களை அடித்திருந்தார். அவரை மிஞ்சும் அளவுக்கு சஹா அந்த போட்டியில் விளையாடினார்.

விருத்திமான் சஹா அதிரடியாக விளையாட, வெறும் ஏழு ஓவர்களிலேயே 10 விக்கெட் வித்தியாசத்தில் மோகன் பெஹன் அணி அபாரமாக வெற்றி பெற்றது. அந்தப் போட்டியின் ஸ்கோர் கார்டு பார்த்தால் சஹாவின் ஆட்டம்தான் அனைவரையும் ஆச்சரியப்படுத்தும்.