டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் சர்ச்சைக்குரிய விதத்தில் டிக்ளேர் செய்யப்பட்ட டாப் 5 இன்னிங்ஸ்

0
3716
Rahul Dravid and Sachin Tendulkar

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை மன ரீதியாக ஒரு சில சமயங்களில் விளையாட வேண்டும். முடிந்தவரை ஒவ்வொரு அணிகளும் தங்களது அணியின் ஸ்கோர் அதிகமாக இருக்கும் நிலையில் எதிர் அணியை பேட்டிங் செய்ய தங்களது போட்டியை டிக்ளேர் செய்யும்.

இப்படி செய்வதன் ஒரே நோக்கம் எதிரணியை அதிக நேரம் விளையாட விட்டு முடிந்தவரை குறைந்த ரன்களுக்குள் சுருட்ட வேண்டும் என்பதற்காகவே, குறிப்பாக இரண்டாவது இன்னிங்ஸ் விளையாடும் அணி மிகப்பெரிய டார்கெட்டை சீக்கிரமாக அமைத்து விட்டு தங்களது ஆட்டத்தை டிக்ளேர் செய்துவிடும்.

- Advertisement -

ஒரு சில சமயங்களில் கேப்டன் அணியின் நலன் கருதி, வெற்றி பெற வேண்டும் என்ற ஒரே நோக்கத்தில் ஆட்டத்தை ஒரு கட்டத்தில் டிக்ளேர் செய்வார். ஆனால் அவர் அப்படி செய்யும் பொழுது பின்னர் ஒரு சில சமயங்களில் சர்ச்சைகளில் சிக்கிக் கொள்வார். அப்படி சர்ச்சைக்குரிய வகையில் டிக்ளேர் செய்யப்பட்ட டாப்பை இன்னிங்ஸ்களை பற்றி தற்போது பார்ப்போம்.

5. டேவிட் வார்னர் 335* (ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் 2019)

2019ஆம் ஆண்டு நடந்த டெஸ்ட் தொடரில் ஆஸ்திரேலியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிக்கொண்டன. அடிலெய்டு ஓவல் மைதானத்தில் நடைபெற்ற ஆட்டத்தில் டேவிட் வார்னர் மிக சிறப்பாக விளையாடி 335 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். அப்போது ஆஸ்திரேலிய அணியின் கேப்டன் டிம் பெயின் ஆட்டத்தை டிக்ளேர் செய்தார்.

இன்னும் சிறிது ஓவர்கள் விளையாடி இருந்தால் நிச்சயமாக டேவிட் வார்னர் பிரைன் லாரா சாதனை 400 ரன்களை நிச்சயமாக கடந்த இருப்பார். இருப்பினும் ஆஸ்திரேலிய அணியின் வெற்றியை கருதி அவ்வாறு இன்னிங்சை டிக்ளேர் செய்து கொண்டதாக பின்னர் ஆஸ்திரேலிய அணி கேப்டன் பெயின் விளக்கம் அளித்தார்.

- Advertisement -

ஆனால் போட்டி நான்கு நாட்களுக்குள்ளேயே முடிந்துவிட்டது. எனவே நிச்சயமாக டேவிட் வார்னர் இன்னும் கொஞ்ச நேரம் விளையாட இருந்திருக்கலாம் என்று ஆஸ்திரேலிய ரசிகர்கள் கூறினர். கூறியது மட்டுமல்லாமல் ஆஸ்திரேலிய ரசிகர்கள் அனைவரும் அவரை சகட்டுமேனிக்கு திட்டி தீர்த்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

4. இங்கிலாந்து 551/6 (ஆஷஸ் 2006-07)

2006 மற்றும் 2007ம் ஆண்டில் நடந்த ஆஷஸ் தொடரில் 2வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி முதலில் பேட்டிங் விளையாடியது. மிகச் சிறப்பாக விளையாடி 551 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அந்த அணி டிக்ளேர் செய்தது. இங்கிலாந்து அணியில் காலிங்வுட் 206 மற்றும் பீட்டர்சன் 158 ரன்கள் எடுத்து அசத்தினார்.

- Advertisement -

பின்னர் ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்சில் விளையாட தொடங்கியது. ஆஸ்திரேலிய அணி முதலில் 65 ரன்களுக்கு 3 விக்கெட் இழந்தது. அதன் பின்னரே 88 ரன்கள் எடுத்திருந்த நிலையில், ரிக்கி பாண்டிங் கேட்சை இங்கிலாந்து வீரர் கில்ஸ் பிடிக்க தவறினார். இதை சாதகமாக எடுத்துக் கொண்ட ரிக்கி பாண்டிங் மிகச் சிறப்பாக விளையாடி 142 ரன்கள் எடுத்தார். அதேசமயம் மைக்கேல் கிளார்க் 124 ரன்கள் எடுக்க, ஆஸ்திரேலியா அணி முதல் இன்னிங்சில் 513 ரன்கள் எடுத்தது.

அதன் பின் இரண்டாவது இன்னிங்சில் இங்கிலாந்து 129 ரன்களுக்கு ஆட்டமிழக்க, ஆஸ்திரேலிய அணி 178 ரன்களை இலக்காக எடுத்துக் கொண்டு மிக நிதானமாக விளையாடி ஐந்தாம் நாள் ஆட்ட முடிவில் வெற்றி பெற்றது. மிக சிறப்பாக விளையாடிய இங்கிலாந்து அணி எப்படி தோற்றுப் போனது என்று எல்லோரும் யோசித்தார்கள். சில இங்கிலாந்து ரசிகர்கள் இங்கிலாந்து அணி நிச்சயமாக முதல் இன்னிங்சில் இன்னும் சற்று ரன்கள் குவித்து இருந்திருக்க வேண்டும். அவசரப்பட்டு சீக்கிரமாக டிக்ளேர் செய்து விட்டனர் என்று கூறியது குறிப்பிடத்தக்கது.

3. இந்தியா 306/6 (இந்தியா மற்றும் மேற்கிந்தியத் தீவுகள் 1976)

இந்திய அணி மேற்கிந்திய தீவுகள் 976 ஆம் ஆண்டு நான்கு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாட சென்றிருந்தது. முதல் மூன்று போட்டி முடிவில் இரண்டு அணிகளும் 1-1 என்கிற கணக்கில் சரி சமமாக இருந்தனர். 4வது போட்டி வெற்றியை தீர்மானிக்கும் போட்டு என்பதால் இந்திய அணி மிக நிதானமாக விளையாட தொடங்கியது.

முதல் இன்னிங்சில் இந்திய அணி மிகச் சிறப்பாக விளையாடிக் கொண்டிருந்த வேளையில், மேற்கு இந்திய தீவுகள் அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் அனைவரும் மிக வேகமாக தங்களது பந்துகளை வீசினார்.

இதற்கு மிக முக்கிய காரணம் கிளைவ் லாய்ட் தலைமையில் விளையாடிய மேற்கிந்திய தீவுகள் அணி அதற்கு முன்னர் நடந்த டெஸ்ட் போட்டி தொடரில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக தோல்வியடைந்து இருந்தது . எனவே இந்திய அணியை எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் மிக வெறிகொண்டு மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சாளர்கள் அந்தப் போட்டியில் செயல்பட்டனர்.

அதன் காரணமாக, அனுஷ்மான் கெய்க்வாட் 81 ரன்கள் எடுத்த நிலையில் ஓய்வு எடுத்துக்கொண்டார், மேலும் பிரிஜிஷ் பட்டேல் 14 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஓய்வு எடுத்துக்கொண்டார். அதுமட்டுமின்றி பல இந்திய வீரர்கள் அந்த போட்டிகள் காயமடைந்தனர், இதன் காரணமாக பல இந்திய வீரர்கள் இரண்டாவது இன்னிங்சில் விளையாட முடியாமல் போனது. போட்டியின் முடிவில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.

பின்னர் மேற்கிந்திய தீவுகள் அணியை சேர்ந்த முர்ரே இந்திய வீரர்கள் பந்து வீச்சின் வேகத்தை தாங்க முடியாமல் தாமாக முன்வந்து டிக்ளேர் செய்து விட்டனர் என்று நக்கலடித்தார். அதற்கு பதில் கூறும் வகையில் இந்திய கேப்டன் பேடி நாங்கள் பயந்து டிக்ளேர் செய்யவில்லை பேட்டிங் வீரர்கள் அடிப்படையில் முழுவதுமாக விளையாடிவிட்டு தான் டிக்ளேர் செய்தோம் என்று விளக்கம் அளித்தார்.

2. தென்னாபிரிக்கா 248/8 (தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து 1999 – 200)

1999 மற்றும் 2000ஆம் ஆண்டுகளில் தென்னாபிரிக்கா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்றது. முதல் நான்கு போட்டி முடிவில் தென் ஆப்பிரிக்கா 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகித்தது. கடைசி போட்டியில் முதல் நாள் முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 150 ரன்கள் எடுத்திருந்தது. அதன் பின்னர் மூன்று நாட்கள் முழுவதும் மழை பேய்ந்து ஆட்டத்தை நடத்த முடியாமல் போனது.

ஐந்தாம் நாள் ஆட்டம் தொடங்கிய உடன் தென்னாப்பிரிக்கா முதல் இன்னிங்சில் 248 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மேலும் இரண்டாவது இன்னிங்சில் விளையாட போவதில்லை என்றும் கூறியது. இங்கிலாந்துக்கு சாதகமாக விளையாடுவதாக கூறிக்கொண்டு கேப்டன் கிரொஞ்சி சமரசம் பேசி 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை இங்கிலாந்து அணிக்கு கொடுத்தார். பின்னர் விளையாடிய இங்கிலாந்து அணி மிகச் சிறப்பாக விளையாடி கடைசி நாளில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தென்னாபிரிக்க அணி டெஸ்ட் தொடரை 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது.

கிரொஞ்சி இதற்காக இப்படி டில்லேர் செய்தார் என்று அனைவரும் அவரை தங்கள் ஆதங்கத்தை கூறினார்கள். அதன் பின்னர்தான் தெரியவந்தது, அவர் ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் டாலருக்கு விலைபேசி அந்த போட்டியை டிக்ளேர் செய்தார் என்று. விலைபேசி இவ்வாறு டெஸ்ட் கிரிக்கெட் போட்டி வரலாற்றிலேயே டெஸ்ட் போட்டியை விளையாடியது இதுவே முதல் முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

1. சச்சின் டெண்டுல்கர் 194 (இந்தியா மற்றும் பாகிஸ்தான் 2003 – 04)

பாகிஸ்தானுக்கு எதிராக மூன்று டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரை இந்திய அணி விளையாட 2003 ஆம் ஆண்டு பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மிக அபாரமாக விளையாடி கொண்டிருந்தது. குறிப்பாக அந்த போட்டியில் முதல் இனிங்ஸில் விளையாடிய விரேந்திர சேவாக் 300 ரன்களை குவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மறுபக்கம் சச்சின் டெண்டுல்கர் மிக அற்புதமாக விளையாடிக் கொண்டிருந்தார். 194 ரன்கள் எடுத்த சச்சின் விளையாடிக் கொண்டிருக்கும் பொழுது ராகுல் டிராவிட் எதிர்பாராதவிதமாக ஆட்டத்தை டிக்ளேர் செய்தார். இன்னும் சில ஓவர்கள் ஆடி இருந்தால் நிச்சயமாக சச்சின் டெண்டுல்கர் இரட்டைச் சதம் விளாசி இருப்பார். ஆனால் அவர் அப்படி செய்யவில்லை, மேலும் வெற்றி பெறும் நோக்கத்துடன் தான் அப்படி டிக்ளேர் செய்ததாக விளக்கம் அளித்தார்.

இது பற்றி சச்சின் டெண்டுல்கர் தனது சுயசரிதையில், அந்த போட்டியில் இன்னும் 15 ஓவர்கள் எடுத்துக்கொண்டு இரட்டை சதம் அடித்து விடுமாறு எனக்கு சொன்னார்கள். அதன்படி 14 ஓவர்கள் முடிந்த வேளையில் 15வது ஓவரை யுவராஜ் சிங் மேற்கொண்டார். அதன் காரணமாக தனக்கு போதுமான பந்துகள் கிடைக்கவில்லை என்று கூறியிருந்தார். மேலும் குறைந்தது 3-5 ஓவர்கள் இருந்திருந்தால் நிச்சயமாக இரட்டை சதம் விளாசி இருந்திருப்பேன் என்று கூறியிருந்தார். ராகுல் டிராவிட் அப்படி செய்தது எனக்கு முதலில் அதிருப்தியை ஏற்படுத்தியது. டிரெஸ்ஸிங் ரூம் வந்து நான் சிறிது நேரம் தனியாக அமர்ந்து இருந்தேன் என்று கூறினார்.

அதன் பின்னர் இந்திய அணியின் வெற்றிக்காகவே அவர் அப்படி செய்துள்ளார், அதுவே முக்கியம் என்று நான் எடுத்துக் கொண்டேன் என்றும் விளக்கம் அளித்திருந்தார்.