நம்ப முடியல.. 10 விக்கெட்ல இருந்தாங்க இப்ப எப்படி 3 விக்கெட்.. சச்சின் டெண்டுல்கர் கேள்வி

0
515

இந்திய அணி முதல் டெஸ்டின் மிக மோசமான தோல்விக்குப் பிறகு இரண்டாவது டெஸ்டில் கட்டாயம் வெற்றி பெற்றாக வேண்டிய சூழ்நிலையில் களமிறங்கியது. நினைத்தது போலவே முதல் இன்னிங்ஸில் பதிலடி கொடுத்த இந்திய அணி, சிராஜின் அபாரமான பந்துவீச்சால் தென்ஆப்பிரிக்க அணியை 55 ரன்களில் சுருட்டி வீசியது.

அபாரமாக பந்து விஷய சிராஜ் ஒன்பது ஓவர்களில் 3 ஓவர்கள் மெயிடனுடன் 15 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து ஆறு விக்கெட்டுகளை அள்ளினார். இது இவரது சிறந்த பந்துவீச்சாக அமைந்தது. இதற்கு கம்பெனி கொடுக்கும் விதமாக பும்ரா மற்றும் முகேஷ் குமார் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

- Advertisement -

பிறகு முதலில் இன்னிங்ஸில் இறங்கி கடினமான ஸ்கோரை செட் செய்ய நினைத்த இந்திய அணிக்கு 153 ரன்கள் வரை பெரிய பாதிப்பு இருந்ததாக தெரியவில்லை. அதுவரை சிறிது தடுமாறிக் கொண்டிருந்த தென்னாப்பிரிக்கா பவுலர்கள் இக்கட்டான நேரத்தில் வீறு கொண்டு எழுந்து ஜீரோ ரன்னுக்குள் ஆறு விக்கெட்டைகளை வீழ்த்தினார்கள். அந்த அணியின் ரபாடா,பர்கர் மற்றும் இன்கிடி ஆகியோர் தலா மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றி இந்திய அணியின் வீழ்ச்சிக்கு பெரும்பங்காற்றினார்.

பின்னர் 98 ரன்கள் பின் தங்கி இருந்த நிலையில் இரண்டாவது இன்னிங்ஸ் தொடங்கிய தென் ஆப்பிரிக்க அணி மேலும் மூன்று விக்கெட்டுகளை 62 ரன்களுக்குள் இழந்துள்ளது. மார்க்கம் மட்டுமே 36 ரன்கள் உடன் களத்தில் நீடிக்கிறார். இன்னும் நான்கு நாட்கள் ஆட்டம் எஞ்சியிருக்கும் நிலையில் ஒரே நாளில் இந்த ஆடுகளத்தில் 23 விக்கட்டுகள் வீழ்த்தப்பட்டிருக்கிறது.

இதற்கு பல முன்னால் வீரர்கள் தங்களது அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர். இது குறித்து சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஆகாஷ சோப்ரா தங்களது ட்விட்டர் பக்கத்தில் கருத்துக்களை தெரிவித்து இருக்கின்றனர். இதுகுறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில்,

- Advertisement -

“2024 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் கிரிக்கெட்டில் 23 விக்கெட்டுகள் வீழ்ந்து இருக்கிறது. தென் ஆப்பிரிக்கா அணி ஆல் அவுட் ஆனபோது விமானத்தில் ஏறினேன். நான் வீட்டிற்கு வந்து பார்த்தபோது தென்னாபிரிக்க அணியே திரும்பவும் மூன்று விக்கெட்டுகளை இழந்திருந்ததை தொலைக்காட்சியில் பார்த்தேன். நான் எதைத் தவற விட்டேன் என்று புரியவில்லை” என்று பதிவிட்டு இருக்கிறார்.

இது குறித்து ஆகாஷ் சோப்ரா கூறுகையில்
“ஒரே நாளில் 23 விக்கெட்டுகள் வீழ்ந்திருக்கும் போது யாரும் ஆடுகளத்தை பற்றி குறை கூற மாட்டார்கள்” என்று தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இன்று இரண்டாம் நாள் ஆட்டம் நடைபெற இருக்கும் நிலையில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரை சமன் செய்யுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.