வங்கதேச கிரிக்கெட் அணி துபாயில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் நேற்று நடைபெற்ற இரண்டாவது டி20 போட்டியில் துபாய் அணி சிறப்பான வெற்றியை பதிவு செய்துள்ளது.
இந்த வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்த ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அணியின் துவக்க ஆட்டக்காரர் கேப்டன் முகமது வாசிம் 82 ரன்கள் குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தார்.
துபாய் பங்களாதேஷ் டி20
வங்கதேச அணி துபாயில் சுற்றுப்பயணம் செய்து இரண்டு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வந்த நிலையில் 27 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேச அணி முதலாவது டி20 போட்டியில் வெற்றி பெற்றது. இந்த சூழ்நிலையில் சார்ஜாவில் நேற்று நடைபெற்ற இந்த இரண்டு அணிகளுக்கு இடையேயான 2வது போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. இந்த அணியை பொறுத்தவரை துவக்க ஆட்டக்காரர் தன்ஷித் ஹாசன் சிறப்பாக விளையாடி 33 பந்துகளை எதிர்கொண்டு 59 ரன்கள் குவித்தார்.
மற்றொரு துவக்க ஆட்டக்காரரான கேப்டன் லிட்டன் தாஸ் 32 பந்துகளை எதிர்கொண்டு 40 ரன்கள் குவித்தார். இதில் மிடில் வரிசை பேட்ஸ்மேன் தவ்ஹீத் 24 பந்துகளை எதிர்கொண்டு 45 ரன்கள் எடுக்க வங்கதேச அணி துபாய் அணிக்கு சவாலான ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது. வங்கதேச அணியைப் பொறுத்தவரை அதிகபட்சமாக முகமது ஜவாதுல்லா 3 விக்கெட்டுகள் கைப்பற்றினார்.
துபாய் அணி சிறப்பான வெற்றி
இதில் வெற்றி இலக்கை நோக்கி துபாய் அணி களம் இறங்கியது. வங்கதேச அணி எளிதாக வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் துவக்க வீரர்களான முகமது ஜோஹாய்ப் மற்றும் கேப்டன் முகமது வாசிம் அதிரடியான துவக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்கள். முகமது ஜோஹாயிப் 38 ரன் எடுத்த நிலையில் வெளியேற, கேப்டன் வெற்றி இலக்கை நோக்கி போராடினார்.
இதையும் படிங்க:ஐபிஎல் வரலாற்றில் முதல் பவுலராக சாதனை.. பும்ரா, ரஷித் கானை வீழ்த்தி நம்பர் 1 இடத்தில் ஹர்ஷல் பட்டேல்.. ஐபிஎல் 2025
பின்னால் வந்த பேட்ஸ்மேன்கள் சிறிது நேரம் கேப்டனுக்கு ஒத்துழைப்பு அளிக்க, கேப்டன் 42 பந்துகளில் 82 ரன்கள் குவித்து துபாய் அணியின் வெற்றிக்கு முக்கிய பங்காற்றினார். இதில் 9 பவுண்டரி மற்றும் 5 சிக்சர் அடங்கும். 19 ஓவர்கள் முடிவில் 194 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கடைசி ஓவரில் 11 ரன்கள் தேவைப்பட துருவ் பராசரின் சிக்ஸரால் துபாய் அணி ஒரு பந்தை மீதும் வைத்து இரண்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. வங்கதேச அணிக்கு எதிராக முதல் வெற்றியை பதிவு செய்த துபாய் அணியின் கேப்டன் முகமது வாசிம் குவித்த 88 ரன்கள் சேசிங்கில் ஒரு துபாய் வீரரின் அதிகபட்ச ரன்னாக அமைந்தது.