ஐபிஎல் வரலாற்றில் முதல் பவுலராக சாதனை.. பும்ரா, ரஷித் கானை வீழ்த்தி நம்பர் 1 இடத்தில் ஹர்ஷல் பட்டேல்.. ஐபிஎல் 2025

0
291

நடப்பு ஐபிஎல் கிரிக்கெட் லீக் தொடரின் 61வது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயின்ஸ் அணிகள் விளையாடி வருகின்றன.

இதில் சன்ரைசர்ஸ் அணியின் பந்துவீச்சாளர் ஹர்ஷல் பட்டேல் தனது பந்து வீச்சின் மூலமாக சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

- Advertisement -

லக்னோ ஐதராபாத் மோதல்

லக்னோவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது. இதன்படி பேட்டிங் விளையாடிய லக்னோ அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்புக்கு 205 ரன்கள் குவித்தது. லக்னோ அணியை பொறுத்தவரை தொடக்க வீரர்களான மிச்சல் மார்ஸ் மற்றும் எய்டன் மார்க்ரம் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்கள். மார்ச் 39 பந்துகளில் 65 ரன்கள் மற்றும் மார்க்ரம் 38 பந்துகளில் 61 ரன்கள் குவித்தார்.

இதில் சன்ரைசர்ஸ் அணி தரப்பில் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட்ட ஈசன் மலிங்கா 4 ஓவர்களில் 28 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 2 முக்கிய விக்கெட்டுகள் கைப்பற்றினார். இதில் ஹர்ஷல் பட்டேல் 4 ஓவர்கள் பந்துவீசி 49 ரன்கள் விட்டுக் கொடுத்து 1 விக்கெட் கைப்பற்றினார். இதன் மூலமாக அவர் 150 விக்கெட்டுகள் வீழ்த்தி சிறப்பான சாதனை ஒன்றை படைத்திருக்கிறார்.

- Advertisement -

சாதனை படைத்த ஹர்ஷல் பட்டேல்

அதாவது ஐபிஎல் தொடரில் ஹர்சல் பட்டேல் குறைந்த பந்துகளில் 150 விக்கெட்டுகள் கைப்பற்றிய முதல் வீரர் என்கிற வரலாற்றுச் சாதனையை படைத்திருக்கிறார். அதாவது 150 விக்கெட்டுகள் வீழ்த்துவதற்கு 2381 பந்துகள் மட்டுமே வீசி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு அடுத்ததாக இரண்டாவது இடத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியின் முன்னாள் பந்துவீச்சாளர் மலிங்கா 2444 பந்துகள் வீசி இந்த சாதனை படைத்திருக்கிறார்.

இதையும் படிங்க:இவரா இப்படி பேசுறாரு.? 2026ல் தோனி ஆடுவாரா.? செய்தியாளரின் கேள்விக்கு கோச் பிளமிங் வினோத பதில்.. ரசிகர்கள் ஆச்சரியம்

இந்தப் பட்டியலில் 2543 பந்துகள் வீசி பஞ்சாப் கிங்ஸ் வீரர் உஸ்வேந்திர சஹால் மூன்றாவது இடத்திலும், 2656 பந்துகள் வீசி முன்னாள் சிஎஸ்கே வீரர் பிராவோ நான்காவது இடத்திலும் இருக்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்கவிதமாக இந்தியாவின் நம்பர் ஒன் பவுலர் பும்ரா இந்த பட்டியலில் 2832 பந்துகள் வீசி ஐந்தாவது இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் ரஷித் கான் 2863 பந்துகள் வீசி ஆறாவது இடத்திலும் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வெற்றி இலக்கை நோக்கி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி களம் இறங்கி விளையாடி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

- Advertisement -