U19 உலககோப்பை.. அரையிறுதி போட்டி அட்டவணை.. இந்தியா பாகிஸ்தான் போட்டிக்கான வாய்ப்பு.. முழு தகவல்கள்

0
366
U19wc

தற்பொழுது தென் ஆப்ரிக்காவில் 19 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு நடைபெற்று வரும் ஒரு நாள் கிரிக்கெட் வடிவிலான உலகக் கோப்பை தொடர் நாக் அவுட் சுற்றுக்கு வந்திருக்கிறது.

இரண்டு லீக் சுற்றுக்களுக்கு முடிவில் அரை இறுதி சுற்றுக்கு நான்கு அணிகள் தகுதி பெற்று இருக்கின்றன. முதல் இரண்டாவது குரூப்பில் இருந்து ஆஸ்திரேலியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் அரை இறுதிக்கு தகுதி பெற்றன.

- Advertisement -

நேற்று பாகிஸ்தான் அணி பங்களாதேஷ் அணியை வீழ்த்தியதின் மூலம் முதல் குரூப்பில் இருந்து இரண்டாவது இடத்தை பிடித்து அரை இறுதிக்கு முன்னேறி இருக்கிறது. மேலும் முதல் குரூப்பில் முதலிடத்தை பிடித்த இந்திய அணி முன்பே அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியா, பாகிஸ்தான், ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்கா என நான்கு அணிகள் தற்போது அரை இறுதி சுற்றுக்கு தகுதி பெற்று இருக்கின்றன. இதில் இந்தியாவும் ஆஸ்திரேலியாவும் தோற்கடிக்கப்படாத அணிகளாக இருக்கின்றன.

முதல் குரூப்பில் முதல் இடம் பிடித்த இந்தியா, இரண்டாவது குரூப்பில் இரண்டாம் இடம் பிடித்த தென் ஆப்பிரிக்காவை பிப்ரவரி ஆறாம் தேதி முதல் அரை இறுதியில் சந்தித்து விளையாடுகிறது.

- Advertisement -

இரண்டாவது குரூப்பில் முதல் இடம் பிடித்த ஆஸ்திரேலியா, முதல் குரூப்பில் இரண்டாவது இடம் பிடித்த பாகிஸ்தான் அணியை எதிர்த்து பிப்ரவரி எட்டாம் தேதி இரண்டாவது அரைஇறுதியில் விளையாடுகிறது.

இந்திய அணி சந்திக்கும் தென் ஆப்பிரிக்க அணியில், அண்டர் 19 உலகக்கோப்பை ஒரே தொடரில் மூன்று முறை ஐந்து விக்கெட்டுகளை கைப்பற்றிய க்வானா மாபாக இந்திய அணிக்கு அச்சுறுத்தலாக இருப்பார்.

அதே சமயத்தில் தென் ஆப்பிரிக்காவில் மெதுவான ஆடுகளத்தில் இந்திய சுழற் பந்துவீச்சாளர்கள் ஆதிக்கம் செலுத்தக் கூடியவர்களாக இருப்பார்கள். குறிப்பாக சவுமை பாண்டே இந்த உலகக் கோப்பை தொடரில் மிகச் சிறப்பான இடது கை சுழற் பந்துவீச்சாளராக இருக்கிறார்.

இந்திய அணியின் பேட்டிங் யூனிட் பொருத்தவரையில் ஆதர்ஸ் சிங், அர்சின் குல்கர்னி, முசிர் கான், கேப்டன் உதய் சகரன் மற்றும் சச்சின் தாஸ் என முதல் ஐந்து பேட்ஸ்மேன்களும் இந்த உலகக் கோப்பை தொடரில் சதம் அடித்து நல்ல ஃபார்மில் இருக்கிறார்கள். எனவே இந்த முறை இந்திய அணி அண்டர் 19 உலகக் கோப்பையை கைப்பற்றும் என எதிர்பார்க்கலாம்.

இதையும் படிங்க : “ரோகித் அவுட்டானது கஷ்டமான பந்து கிடையாது.. அந்த ஆற்றலே இல்லை” – பார்த்திவ் படேல் விமர்சனம்.

அரையிறுதில் இந்தியா மற்றும் பாகிஸ்தான் இரண்டு அணிகளும் வென்றால் இறுதிப்போட்டியில் மோதிக்கொள்ளும்!