“நேற்று மாலையே இந்திய அணி பயப்பட ஆரம்பிச்சிடுச்சு.. நாங்க ஜெயிக்க முடியும்” – அலைஸ்டர் குக் பேச்சு

0
190
Cook

இந்திய இங்கிலாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்று வரும் இரண்டாவது டெஸ்ட் போட்டி பரபரப்பான நிலையை எட்டி இருக்கிறது.

போட்டியில் நான்காவது நாளான இன்று 332 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கையில் 9 விக்கெட்டுகளை வைத்துக்கொண்டு இங்கிலாந்து அணி தற்பொழுது விளையாடி வருகிறது.

- Advertisement -

இந்திய அணி 143 ரன்கள் முன்னிலை பெற்றதோடு இரண்டாவது இன்னிங்ஸில் 255 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் காரணமாக ஒட்டுமொத்தமாக இங்கிலாந்து அணிக்கு 399 ரன்கள் இலக்கு கொடுக்கப்பட்டது.

சமீப காலத்தில் இங்கிலாந்து அணி டெஸ்ட் கிரிக்கெட் அணுகுமுறையை மிக அதிரடியாக ஒருநாள் கிரிக்கெட் போல மாற்றி இருக்கிறது. அணியில் உள்ள எல்லா வீரர்களும் ஒரே மனநிலையில் விளையாடுகிறார்கள்.

இதனால் இந்த இலக்கை கூட இங்கிலாந்து அணியால் எட்ட முடியும் என்கின்ற நம்பிக்கை இங்கிலாந்து அணியை தாண்டி வெளியில் இருப்பவர்களுக்கும் இருக்கிறது. அப்படியான ஒரு எண்ணத்தை அவர்கள் உருவாக்கி இருக்கிறார்கள். நேற்று மாலை இந்திய சுழற் பந்துவீச்சாளர்களுக்கு ரோகித் சர்மா அட்டாக்கிங் பீல்டிங் வைக்கவில்லை என்பது உதாரணம்.

- Advertisement -

இதுகுறித்து இங்கிலாந்து முன்னாள் கேப்டன் குக் கூறும் பொழுது “இந்தியாவில் இதுவரை எந்த அணியும் இந்த இலக்கை நெருங்கியது கிடையாது. பென் ஸ்டோக்ஸ் தன் தலைமையில் ஏற்படுத்தியுள்ள மாற்றம்தான், தற்போது இந்த ஸ்கோரையும் இங்கிலாந்து அணி எட்டும் என்கின்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது. அதனால்தான் நாம் அதைப் பற்றி பேசுகிறோம்.

இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் 6.. ரச்சின் ரவீந்தரா 4.. 240 ரன்.. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிராக நியூசிலாந்து ரன் குவிப்பு

சுப்மன் கில் வெற்றி சதவீதம் 70 க்கு 30 என்று கூறியிருந்தார். பாஸ்பால் ஏற்படுத்தியுள்ள தாக்கத்தால்தான் இங்கிலாந்து அணிக்கும் வெற்றி வாய்ப்பு இருக்கிறது என்று அவர் கூறுகிறார். நேற்று மாலை இந்திய ஸ்பின்னர்கள் பந்து வீசும் பொழுது பேட்ஸ்மேனை சுற்றி எந்த ஃபீல்டர்களும் வைக்கப்படவில்லை. அந்த அளவிற்கு பாஸ் பால் மற்றவர்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.