நான் இப்போ செம பார்ம்..140கிமீ வேகத்தில் பந்துவீசியும் அணியில் இடம் தராதது ஏன்? சிஎஸ்கே வீரர் தேஷ்பாண்டே வருத்தம்

0
3960

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே துலிப் கோப்பை தொடருக்கான அணியில் இடம் பெறாதது ரசிகர்களிடையே அதிர்ச்சியில் ஏற்படுத்தி இருக்கிறது.ரஞ்சி கோப்பைக்கு பிறகு இந்திய கிரிக்கெட்டில் மிக முக்கியமான தொடர் என்றால் அது துலிப் கோப்பை தான்.

நாட்டில் உள்ள பகுதிகளை பிராந்தியங்களாக பிரித்து தெற்கு அணி, வடக்கு அணி, கிழக்கு அணி என 6 அணிகள் பங்கேற்கும் டெஸ்ட் போட்டிகள் தான் துலிப் கோப்பை. இதில் மும்பை, மகாராஷ்டிரா, மத்திய பிரதேஷ், குஜராத் பற்றிய ரஞ்சி அணிகளில் சிறப்பாக விளையாடும் வீரர்கள் மேற்கு பிராந்திய அணியில் இடம் பெறுவார்கள்.

- Advertisement -

இதில் மும்பை சேர்ந்த வேகப்பந்து வீச்சாளர் துஷார் தேஷ்பாண்டே இடம்பெறவில்லை. ரஞ்சி கிரிக்கெட்டில் சிறப்பாக செயல்பட்டு உள்ள அவர் 6 போட்டியில் விளையாடி 23 விக்கெட்டுகளை கைப்பற்றி இருக்கிறார். அதனை விட ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றார்.

தேஷ் பாண்டே,  நடந்து முடிந்த ஐபிஎஸ் சீசனில் 21 விக்கெட்டுகளை சாய்த்தார். துஷார் தேஷ்பாண்டேவின் சிறப்பான செயல்பாடு சென்னை அணியின் வெற்றிக்கு ஒரு காரணமாக அமைந்தது. இந்த நிலையில் துலிப் கோப்பையில் தமது பெயர் இடம் பெறாதது அதிர்ச்சி அளிப்பதாக தேஷ்பாண்டே கூறியுள்ளார்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர் நான் இப்போது டாப் ஃபார்மில் இருக்கிறேன். தொடர்ந்து 140 கிலோ மீட்டர் வேகத்தில் பந்துகளை வீசி வருகிறேன். அத்துடன் பல விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறேன்.

- Advertisement -

இந்த நிலையில் என்னுடைய பெயர் துலீப் கோப்பையில் இடம் பெறாதது, எனக்கு மட்டுமல்ல பலருக்கும் அதிர்ச்சியாகவே இருக்கிறது. என் பெயர் துலீப் கோப்பையில் இருக்கும் என பலரும் எதிர்பார்த்தார்கள். ஆனால் தேர்வு குழுவின் இந்த முடிவு எனக்கு அதிர்ச்சி அளிக்கிறது.

எனக்கு பேச வார்த்தையே இல்லை. எனினும் தொடர்ந்து உழைத்து சிறப்பாக செயல்பட முயற்சி செய்வேன் என்று தேஷ்பாண்டே கூறியுள்ளார். மேற்கு பிராந்திய அணியில் ஏற்கனவே ஜெய்ஸ்வால், சப்ராஸ்கான், ஷாம் முலானி பிரித்திவிஷா என நான்கு மும்பை அணி வீரர்கள் இடம் பெற்றிருக்கிறார்கள்.

மேலும் தேஷ்பாண்டே பதில் குஜராத்தை சேர்ந்த அர்சான் நாக்வஸ்வாலா  என்ற வேகப்பந்துவீச்சாளருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதேபோன்று பரோடாவை சேர்ந்த அதீத் சேத் என்ற கடந்த ரஞ்சி தொடரில் ஒரே ஒரு போட்டியில் விளையாடி நான்கு விக்கெட்டுகளை வீழ்த்திய ஆல்ரவுண்டருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. இதனால் தேஷ்பாண்டே எப்படி தேர்வு குழுவினர் எடுக்காமல் விட்டிருக்கிறார்கள் என்று ரசிகர்கள் கேள்வி கேட்டு வருகிறார்கள்.