இன்று இந்திய அணி ஜிம்பாப்வே அணிக்கு எதிரான நான்காவது டி20 போட்டியில் விளையாடுகிறது. இந்த போட்டியில் மும்பை மாநில அணிக்காகவும் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காகவும் விளையாடும் துஷார் தேஷ்பாண்டே அறிமுகமானார். இந்திய அணிக்காக அறிமுகமாகும் உணர்வு எப்படி இருக்கிறது? என்பது குறித்து அவர் பேசியிருக்கிறார்.
துஷார் தேஷ்பாண்டே கிரிக்கெட் வாழ்க்கை ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்கு வந்த பிறகு ஏறுமுகத்தில் இருக்கிறது. கடந்த மூன்று ஆண்டுகளில் அவர் கொஞ்சம் கொஞ்சமாக பந்துவீச்சில் கூர்மை அடைந்து வந்தார். அதற்கான பலன் அவருக்கு உள்நாட்டு கிரிக்கெட்டிலும் கிடைத்தது.
இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக 17 விக்கெட்டுகளை 8.84 என்கின்ற எக்கனாமியில் கைப்பற்றினார். பேட்டிங் செய்வதற்கு சொர்க்கமாக ஐபிஎல் இருக்கும் நிலையில் ஓவருக்கு அவர் கொடுத்த ரன்கள் அணியில் தாக்கத்தை உருவாக்கவே செய்தது.
இந்த நிலையில் ஜிம்பாப்வே அணிக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரில் 15 பேர் கொண்ட இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டார். மேலும் இன்று ஆவேஷ் கான் இடத்தில் இந்திய அணிக்காக அறிமுகம் ஆகும் வாய்ப்பையும் பெற்றிருக்கிறார். மிகப்பெரிய வாய்ப்பை பெற்றிருக்கும் அவர் அது குறித்து பேசி இருக்கிறார்.
துஷார் தேஷ்பாண்டே பேசும்பொழுது ” இங்கு வந்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இப்பொழுது நடந்து கொண்டிருப்பதெல்லாம் என்னுடைய சிறு வயது கனவு. நீல நிற ஜெர்சியை அணிந்து இங்கே இருப்பது மிகவும் பெருமையாக இருக்கிறது. இது மிகவும் அர்த்தம் உள்ள ஒன்று. அட்மாஸ்பியர் மிகவும் அருமையாக இருக்கிறது.
இதையும் படிங்க : ஆண்டர்சனை கட்டாயப்படுத்தி அநியாயம் செஞ்சிருக்காங்க.. இதை ஏற்க முடியாது – இங்கிலாந்து டேவிட் லாயிட் விமர்சனம்
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காக விளையாடியது உதவியது. அங்கு விளையாடிய அனுபவம் எனக்கு சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு பெரிதும் உதவியாக இருக்கும். ஒட்டுமொத்த அணியின் சூழல் மிகவும் அமைதியாகவும் குளிர்ச்சியாகவும் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார். இன்று மூன்று, ஓவர்கள் பந்துவீசி அவர் 30 ரன்கள் தந்து தன்னுடைய சர்வதேச முதல் விக்கெட்டையும் கைப்பற்றி இருக்கிறார்.