ஆண்டர்சனை கட்டாயப்படுத்தி அநியாயம் செஞ்சிருக்காங்க.. இதை ஏற்க முடியாது – இங்கிலாந்து டேவிட் லாயிட் விமர்சனம்

0
187
Anderson

இங்கிலாந்து மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்தின் வேகப்பந்துவீச்சாளர் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஓய்வு பெற்றார். மேலும் இங்கிலாந்து அணி நிர்வாகம் அவரை கட்டாயப்படுத்தி ஓய்வு பெற வைத்தது குறித்து இங்கிலாந்து முன்னாள் வீரர் டேவிட் லாயிட் கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார்.

ஜேம்ஸ் ஆண்டர்சன் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் சொந்த நாட்டில் துவங்குவதற்கு முன்பாக இங்கிலாந்து அணியின் கேப்டன் பயிற்சியாளர் மற்றும் இயக்குனர் ஆகியோர் தன்னை தனிப்பட்ட முறையில் ஹோட்டலுக்கு அழைத்து ஓய்வு பெறுவது குறித்து பேசினார்கள் என்று வெளிப்படையாக கூறியிருந்தார்.

- Advertisement -

இந்த நிலையில் இன்னும் வேகம், துல்லியம் மற்றும் உடல் தகுதியில் சிறப்பாக இருக்கும் ஜேம்ஸ் ஆண்டர்சனை கட்டாயப்படுத்தி ஓய்வு பெற வைத்தது மிகவும் தவறானது எனவும், இரண்டு நாட்களில் வெஸ்ட் இண்டிஸ் சுருண்டு போனது பணம் இல்லாததாலும், பெரிய கிரிக்கெட் நாடுகள் வருமானத்தை உறிஞ்சுவதால், அவர்களுடைய கிரிக்கெட் இந்த அளவிற்கு கீழே இறங்கி விட்டது எனவும் டேவிட் லாயிட் குற்றம் சாட்டியிருக்கிறார்.

இதுகுறித்து டேவிட் லாயிட் கூறும் பொழுது “வெளிப்படையாக ஒரு மிகப்பெரிய வீரர் ஓய்வு பெற்று வெளியேறியிருக்கிறார். அவரிடம் எப்போதும் போல் வேகம், துல்லியம் சகிப்புத்தன்மையெல்லாம் பந்துவீச்சில் இருக்கிறது. தன்னுடைய கடைசிப் போட்டியில் கூட சிறப்பாக விக்கெட்டுகள் கைப்பற்றினார். வருகின்ற ஆசஸ் தொடருக்கு அணியை உருவாக்குகிறேன் என அவரை கட்டாயப்படுத்தி ஓய்வு பெற வைத்திருக்கிறார்கள். சிறந்த அணியைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். ஆனால் அவரின் வயது காரணமாக அவரை கட்டாயப்படுத்தி இப்படி ஓய்வுபெற வைத்து விட்டார்கள்.

- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு நாட்களில் சுருண்டு போனது. என்னுடைய பிரச்சனை சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலுடன் இருக்கிறது. கிரிக்கெட்டில் கிடைக்கும் பணத்தை எல்லா நாடுகளும் சமமாக பகிர்ந்து கொள்ள வேண்டும். ஆனால் சிலர் மற்றவர்களை விட அதிகம் பணம் பெறுகிறார்கள். இதே வெஸ்ட் இண்டீஸ் இந்தியா இங்கிலாந்து ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் இருந்தால் அவர்கள் இதை எப்படி உணர்வார்கள்?

இதையும் படிங்க: பிசிசிஐ உடனே அந்த வீரருக்கு உதவ வேண்டும்.. அவர பார்க்கவே கஷ்டமா மனச்சோர்வா இருக்கு – கபில்தேவ் கோரிக்கை

வெஸ்ட் இண்டீஸ் எல்லா காலத்திலும் உலகத்திற்கு மிகச் சிறப்பான வீரர்களை கொடுத்து இருக்கிறது. ஆனால் அவர்களுடைய நிதிநிலைமை மோசமாக மாறிவிட்டது. நான் இந்தியா இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியா அணிகளை கேட்டுக்கொள்கிறேன், நீங்கள் ஒழுக்கமானதைச் செய்யுங்கள், வருகின்ற வருமானத்தை எல்லோரும் சமமாக பிரித்துக் கொள்வதற்கான வழிகளைப் பாருங்கள்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -