அவர கேலி பண்ணுங்க.. ஆனா பெரிய மேட்ச்ல விளையாடவே பெஸ்ட்ட ஒளிச்சு வச்சிருக்கார் – இந்திய வீரருக்கு முன்னாள் இந்திய வீரர் ஆதரவு!

0
763
ICT

இந்திய அணி நேற்று மிக முக்கியமான பாகிஸ்தானுக்கு எதிரான ஆசிய கோப்பை போட்டியில் முதல் நான்கு விக்கெட்டுகளை சொற்ப ரன்களுக்கு இழந்து தத்தளித்தது.

நெருக்கடியான நேரத்தில் இந்திய அணியின் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியா இளம் வீரர் இசான் கிஷான் உடன் சேர்ந்து அவரை வழிநடத்தி 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் வருவதற்கு மிக முக்கிய காரணமாக தனது அனுபவத்தை காட்டி நின்றார்!

- Advertisement -

இந்த ஆசியக் கோப்பை தொடருக்கு முன்பாக இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப்பயணத்தில் ஒருநாள் கிரிக்கெட் மற்றும் டி20 கிரிக்கெட் தொடர்களில் விளையாடி மிக சுமாரான செயல்பாட்டியை வெளிப்படுத்தியது.

இந்த இரு தொடர்களிலும் கேப்டனாக செயல்பட்ட ஹர்திக் பாண்டியாவின் கேப்டன்சி பலராலும் விமர்சிக்கப்பட்டது. மேலும் பரவலாக கேலி செய்யப்பட்டார். தற்பொழுது உடனே அதிலிருந்து மீண்டு வந்து பெரிய போட்டியில் நெருக்கடியான நேரத்தில் ரன்கள் எடுத்து, தன்னுடைய தரம் எப்படியானது என்பதை காட்டியிருக்கிறார்.

இதுகுறித்து இந்திய அணியின் முன்னாள் வீரர் ஆகாஷ் சோப்ரா கூறும் பொழுது ” ஹர்திக் பாண்டியாவின் கதை மிகவும் நன்றாக இருக்கிறது. அவரை நான் உணர்கிறேன். அவர் செய்யும் செயல்களுக்கு நாம் அதிக மதிப்பளிக்க வேண்டும். அவர் பெரிய போட்டிக்காக தனது சிறந்ததை சேமித்து வைத்துக் கொண்டிருக்கிறார். அது நாம் அனைவரும் பாராட்டப்பட வேண்டிய மற்றும் ஒப்புக்கொள்ள வேண்டிய விஷயம்.

- Advertisement -

நீங்கள் அவரை எவ்வளவு வேண்டுமானாலும் கேலி செய்யலாம். ஆனால் அவர் பாகிஸ்தான் அணிக்கு எதிராக விளையாடும் போதெல்லாம், அது 2017 சாம்பியன்ஸ் டிராபி, கடைசி ஆசியக் கோப்பை, கடைசி டி20 உலகக் கோப்பை என அழுத்தம் பெரிய அளவில் இருந்த பெரிய போட்டிகளில் எல்லாம், இந்திய அணி மிக நெருக்கடியான சமயத்தில் இருந்த போது எல்லாம் அவர் மிகச் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்.

இந்தப் போட்டியிலும் இந்திய அணி சிக்கிக் கொண்டது. இன்னொரு விக்கெட் விழுந்து இருந்தால் என்ன நடக்கும் என்று நமக்குத் தெரியும். இஷான் கிஷான் மற்றும் ஹர்திக் பாண்டியா இருவரும் ஆட்டம் இழந்ததும் சைக்கிள் ஸ்டாண்டில் சைக்கிள் விழுவது போல விழுந்தார்கள். இவர்களால் 50 ஓவர் விளையாடி இருக்க முடியாது.

எனவே இவர்கள் முன்னதாக ஆட்டம் இழந்து இருந்தால் 35 ஓவர்கள் இவ்வளவு ஏன் 28 ஓவர்களில் கூட இந்திய அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து சுருண்டு இருக்கும். அது ஒரு பிரச்சினையாக மாறி இருக்கும். ஆனால் ஹர்திக் பாண்டியா மிக புத்திசாலித்தனமாக இருந்தார்!” என்று கூறியிருக்கிறார்!