கங்குலி டிராவிட் இல்லை.. எங்கள் ஆல் டைம் பேவரைட் இந்திய வீரர் இவர்தான்.. முன்னணி ஆஸி வீரர்கள் தேர்வு

0
660

இந்திய கிரிக்கெட் அணி ஆஸ்திரேலியாவில் 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிற நிலையில் முதல் போட்டியில் இந்திய அணியும் இரண்டாவது போட்டியில் ஆஸ்திரேலிய அணியும் வெற்றி பெற்ற தற்போது தொடரை சமன் செய்துள்ளன.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா முன்னணி கிரிக்கெட் வீரர்கள் தங்களுக்கு பிடித்தமான இந்திய வீரரை தேர்வு செய்து இருக்கிறார்கள்.

- Advertisement -

இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் கிரிக்கெட்

இந்தியா ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் செய்து பார்டர் கவாஸ்கர் டிராபி டெஸ்ட் தொடரில் விளையாட வருகிற நிலையில் முதல் போட்டியில் பும்ரா தலைமையில் வெற்றியும், இரண்டாவது போட்டியில் ரோஹித் சர்மா தலைமையில் தோல்வியையும் சந்தித்துள்ளது. இதில் குறிப்பாக இரண்டாவது போட்டியில் இந்திய அணிக்கு எப்போதுமே பெரிய தலைவலியாக இருக்கக்கூடிய டிராவிஸ் ஹெட் சிறப்பாக விளையாடி சதம் அடித்ததோடு இந்திய அணியின் தோல்விக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தார்.

இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களான டிராவிஸ் ஹெட், ஸ்டீவ் ஸ்மித் மற்றும் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் ஆகியோர் தங்களுக்கு எப்போதுமே ஆல் டைம் இந்திய ஃபேவரிட் வீரராக சச்சின் டெண்டுல்கரைத் தேர்வு செய்து அதற்கான காரணத்தை கூறி இருக்கிறார்கள். இந்திய அணியில் தலைமுறை தலைமுறையாக நட்சத்திர சிறந்த கிரிக்கெட் வீரர்கள் வந்து கொண்டே இருந்தாலும் சச்சின் டெண்டுல்கர் என்ற பெயருக்கான கவர்ச்சி எப்போதுமே குறையாத ஒன்றாக இருக்கிறது.

- Advertisement -

ஆஸ்திரேலிய வீரர்களின் ஆல் டைம் ஃபேவரைட் இந்தியர்

இந்த சூழ்நிலையில் டிராவிஸ் ஹெட் சச்சின் டெண்டுல்கர் குறித்து கூறும் போது “என்னுடைய ஆல் டைம் பேவரைட் இந்திய வீரராக சச்சின் டெண்டுல்கரை தேர்வு செய்வேன். ஏனென்றால் நாங்கள் டிவியில் அதிகம் பார்த்தது அவருடைய பேட்டிங் தான். காரணம் அவரைப்போல வேறு யாரும் அதிக நேரம் பேட்டிங் செய்ய மாட்டார்கள்” என்று கூறி இருக்கிறார். மற்றொரு ஆஸ்திரேலிய வீரர் ஸ்மித் கூறும் போது “சச்சின் டெண்டுல்கர் ஒரு ஸ்டைலான கிரிக்கெட் வீரர். சிறந்த ஷாட் விளையாட கூடியவர் மேலும் சிறந்த கிரிக்கெட் வீரர்களின் ஒருவர்” என்று கூறி இருக்கிறார்.

இதையும் படிங்க:23.75 கோடிக்கு வாங்கிட்டீங்க.. அப்டியே எனக்காக இதையும் செய்ங்க.. கேகேஆர் அணிக்கு வெங்கடேஷ் ஐயர் பரிந்துரை

மேலும் ஆஸ்திரேலியா அணியின் கேப்டன் கம்மின்ஸ் சச்சின் டெண்டுல்கரை பிடித்ததற்கான காரணம் கூறும் போது “சச்சின் டெண்டுல்கர் அவரைப் பார்த்தே அவர் வளர்கிறார் என்பது வெளிப்படையான விஷயம்” என்று கூறி இருக்கிறார். இந்தியாவில் கங்குலி மற்றும் டிராவிட் என சிறந்த கிரிக்கெட் வீரர்கள் இருந்த போதும் இந்த முன்னணி ஆஸ்திரேலியா வீரர்கள் சச்சின் டெண்டுல்கரின் பெயரை தேர்வு செய்து இருக்கிறார்கள்.

- Advertisement -