111 பந்து.. தன் உலக சாதனையை தானே உடைத்த ஹெட்.. இந்திய அணிக்கு சிம்ம சொப்பனமாக அதிரடி பேட்டிங்

0
1651
Head

இந்திய அணிக்கு எதிராக சிம்ம சொப்பனமாக விளங்கி வரும் ஆஸ்திரேலியா பேட்ஸ்மேன் டிராவிஸ் மீண்டும் ஒரு மிக முக்கியமான சதத்தை அடித்து தலைவலியை ஏற்படுத்தியிருக்கிறார்.

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையே தற்போது அடிலைட் ஓவல் மைதானத்தில் இரண்டாவது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டு வருகிறது. இந்த டெஸ்ட் போட்டி பகல் இரவு டெஸ்ட் போட்டியாக நடைபெறுவது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

தொடர்ந்து சோதிக்கும் டிராவிஸ் ஹெட்

இந்த போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி வெறும் 180 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. கில், விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா மூவரும் மிக மலிவான முறையில் வைக்கட்டை கொடுத்து வெளியேறியது இந்திய அணியின் பின்னடைவுக்கு மிக முக்கிய காரணமாக அமைந்தது.

இந்த நிலையில் இந்திய அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதி போட்டி, ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை இறுதி போட்டி மற்றும் இந்த வருடம் டி20 உலகக் கோப்பை என தொடர்ந்து பேட்டிங்கில் பெரிய தலைவலியை உண்டாக்கி வரக்கூடியவராக ஹெட் அமைந்திருக்கிறார். குறிப்பாக டெஸ்ட் மற்றும் ஒரு நாள் வடிவத்தில் தனி ஒரு வீரராக இந்திய அணி இடம் இருந்து சாம்பியன்ஷிப்பை பறித்தவராக இருக்கிறார்.

- Advertisement -

தன் உலக சாதனையை தானே உடைத்த ஹெட்

முதல் டெஸ்ட் போட்டியை தோற்று இருந்த ஆஸ்திரேலியாவுக்கு இரண்டாவது டெஸ்ட் போட்டி மிக முக்கியமானதாக இருந்தது. இந்த நிலையில் மீண்டும் முக்கியமான நேரத்தில் ஹெட் சிறப்பாக திரும்பி வந்து 111 பந்தில் சதம் அடித்து இந்திய அணியின் கையில் இருந்து ஆட்டத்தை எடுத்திருக்கிறார். அதிரடியாக 141 பந்தில் 142 எடுத்து ஆட்டம் இழந்திருக்கிறார். மேலும் பகல் இரவு டெஸ்ட் போட்டியில் அதிவேக சதம் அடித்திருந்த தனது உலக சாதனையை தானே உடைத்து புது உலக சாதனை படைத்திருக்கிறார்.

இதையும் படிங்க : ஆஸி அந்த பவுலருக்குப் பிறகு.. பும்ராவை பார்த்துதான் பயப்படுறாங்க.. இது வரலாறு – பாக் பசித் அலி பாராட்டு

பகல் இரவு டெஸ்ட் போட்டியில் அதிவேக சதம் அடித்த வீரர்கள் :

டிராவிஸ் ஹெட் – 111 பந்துகள் – இந்தியா – அடிலெய்டு – 2024
டிராவிஸ் ஹெட் – 112 பந்துகள் – இங்கிலாந்து – ஹோபார்ட் – 2022
டிராவிஸ் ஹெட் – 125 பந்துகள் – வெஸ்ட் இண்டீஸ் – அடிலெய்டு – 2022
ஜோ ரூட் – 139 பந்துகள் – வெஸ்ட் இண்டீஸ் – எட்ஜ்பாஸ்டன் – 2017
அசாத் ஷபிக் – 140 பந்துகள் – ஆஸ்திரேலியா – பிரிஸ்பேன் – 2016

- Advertisement -