ஆஸ்திரேலியா அணி இரண்டே பந்துவீச்சாளர்களை மட்டுமே பார்த்து பயப்பட்டு தான் பார்த்திருப்பதாகவும், அதில் ஒருவர் பும்ரா எனவும் பாகிஸ்தான் முன்னாள் வீரர் பசித் அலி கூறியிருக்கிறார்.
தற்போது இந்திய அணி ஆஸ்திரேலிய சென்று ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடிக் கொண்டு வருகிறது. இதுவரையில் இரண்டு டெஸ்ட் போட்டியில் 3 இன்னிங்ஸ்களில் பும்ரா மட்டும் 11 விக்கெட் கைப்பற்றி இருக்கிறார்.
க்ளூ இல்லாமல் வெளியேறிய ஆஸ்திரேலியா வீரர்கள்
முதல் டெஸ்ட் போட்டியில் அறிமுக வீரரான மெக்ஸ்வீனி மட்டும் இல்லாமல், நட்சத்திர பேட்ஸ்மேன்கள் லபுசேன் மற்றும் ஸ்மித் இருவரும் உம்ரா பந்துவீச்சை எப்படி எதிர்கொள்வது என்கின்ற எந்தவித க்ளுவும் இல்லாமல் சாதாரண பேட்ஸ்மேன்கள் போல ஆட்டம் இழந்து வெளியேறினார்கள். பும்ராவின் இந்த அதிரடி பந்துவீச்சு இந்திய அணியின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணமாக இருந்தது.
முதல் டெஸ்டின் இரண்டு இன்னிங்ஸ்களிலும் ஸ்மித் டிக்கெட்டை பும்ரா கைப்பற்றி இருந்தார். இதற்கு அடுத்து இரண்டாவது டெஸ்டின் முதல் இன்னிங்ஸில் ஸ்மித் விக்கெட்டை மீண்டும் கைப்பற்றினார். இவருடைய விக்கெட்டை தொடர்ந்து மூன்று முறை கைப்பற்றிய ஒரே பந்துவீச்சாளராக பும்ரா சாதனை படைத்திருக்கிறார்.
ஆஸ்திரேலியா பயப்படும் இரண்டாவது பவுலர்
இதுகுறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் பசித் அலி பும்ராவின் பந்துவீச்சை பெரிய அளவில் பாராட்டி கூறியிருக்கிறார். பாகிஸ்தான் அணியின் லெஜன்ட் வாசிம் அக்ரமுக்கு பிறகு ஆஸ்திரேலியா அணி பும்ராவை பார்த்து பயப்படுவதாக அவர் கூறியிருக்கிறார்.
இதையும் படிங்க : பிங்க் பந்து பற்றி இந்திய பவுலர்களுக்கு இது தெரியல.. இதை செய்யுங்க விக்கெட் கிடைக்கும் – சுனில் கவாஸ்கர் அறிவுரை
இதுகுறித்து பசித் அலி கூறும் பொழுது “ஆஸ்திரேலியா அணி பும்ரா மீது தனி கவனம் செலுத்துகிறது. ஆஸ்திரேலியா அணியினர் பும்ராவுக்கு எதிராக தைரியமாக விளையாட செல்ல மாட்டார்கள். வாசிம் அக்ரமுக்கு பிறகு ஆஸ்திரேலியா பார்த்து பயப்படும் ஒரே பந்துவீச்சாளர் பும்ராதான். அவருக்கு எதிராக வாய்ப்பை பெற்று விளையாட முன்வரவில்லை. எதிர் முனையில் பந்து வீசக்கூடிய பவுலரைதான் குறி வைத்தார்கள்” என்று கூறி இருக்கிறார்.






