இந்திய கிரிக்கெட் அணி அடுத்ததாக ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ள நிலையில் அதற்கு தகுந்தவாறு ஆஸ்திரேலிய அணி மிகத் தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்த சூழ்நிலையில் ஆஸ்திரேலியா கிரிக்கெட் வீரரான ட்ராவிஸ் ஹெட் ஆஸ்திரேலியா அணியின் தனது பேட்டிங் நிலை குறித்து சில முக்கிய கருத்துக்களை கூறியிருக்கிறார்.
இந்தியா ஆஸ்திரேலியா டெஸ்ட் தொடர்
ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியை பொறுத்தவரை அதிரடி ஆட்டக்காரர் டேவிட் வார்னர் சமீபத்தில் ஓய்வு பெற்றதை தொடர்ந்து அவருக்கு பதிலாக தொடக்க இடத்தில் ஸ்டீவ் ஸ்மித் தொடக்க இடத்தில் இறங்கி விளையாடி வந்தார். இந்த சூழ்நிலையில் சமீபத்தில் ஆஸ்திரேலியா ஆல் ரவுண்டர் கேமரூன் கிரீன் காயம் காரணமாக வெளியேற அவருக்கு பதிலாக தற்போது நான்காவது இடத்தில் ஸ்மித் விளையாட வேண்டிய சூழ்நிலையில் இருக்கிறார்.
இந்த நிலையில் இந்திய அணிக்கு எதிராக அடுத்தது பார்டர் கவாஸ்கர் டிராபி தொடர் இருப்பதால் உஸ்மான் காஜா உடன் தொடக்க இடத்தில் ஆஸ்திரேலிய அணியின் அதிரடி ஆட்டக்காரர் ட்ராவிஸ் ஹெட் களமிறங்குவது குறித்து பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த சூழ்நிலையில் முதல் இடம், ஏழாவது இடம் அல்லது ஒன்பதாவது இடம் என எந்த இடத்தில் களமிறங்கினாலும் எனக்கு கவலை இல்லை எனவும் அணிக்காக சிறப்பாக விளையாட வேண்டும் என்பதை எனது நோக்கம் என்று கூறி இருக்கிறார்.
ட்ராவிஸ் ஹெட்டின் பேட்டிங் நிலை
இது குறித்து ஹெட் கூறும்போது “இது ஒரு பழங்கால முறையாக இருக்கும் என்று நினைக்கிறேன். அடுத்த இரண்டு வாரங்களில் எல்லோரும் என்ன நினைக்கிறார்கள் என்பதை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். என்னைப் பொருத்தவரை எனக்கு பிடித்தமான நிலை என்று எதுவுமே கிடையாது. அணிக்கு சிறந்த மற்றும் என்னிடமிருந்து அணிக்கு என்ன தேவை என்பது மட்டுமே எனது நோக்கமாக உள்ளது. நான் முதலிடத்தில் இருந்து ஏழாவது இடம் வரை பேட்டிங் செய்தால் அல்லது ஒன்பதாவது இடத்தில் பேட்டிங் செய்தால் கூட எனக்கு கவலை இல்லை.
இதையும் படிங்க:ஆஸி தொடர்.. சர்பராஸ் கானுக்காக பண்ட் கிரவுண்டுக்கு வெளில இந்த உதவியை பண்றார்.. மிகப்பெரிய விஷயமா இருக்க போகுது.. சூரியகுமார் பேட்டி
கடந்த காலங்களில் ஆஸ்திரேலியா அணியில் எந்த பதவியிலும் விளையாட விரும்புகிறேன் என்று ஏற்கனவே கூறியுள்ளேன். எனவே எனக்கு எந்த நிலையில் களமிறங்கினாலும் எனக்கு கவலை இல்லை” என்று கூறி இருக்கிறார். இந்திய அணிக்கு எதிராக 5 டெஸ்ட் போட்டிகள் நடைபெற இருக்கும் நிலையில் முதல் டெஸ்ட் போட்டி நவம்பர் 22ஆம் தேதி பெர்த்தில் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.