இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் இளம் வீரர் சர்பராஸ்கான் அபாரமாக பேட்டிங் செய்து தனது முதல் சதத்தை பதிவு செய்து இந்திய அணி சிறப்பான ஸ்கோரை பதிவு செய்ய முக்கிய காரணமாக அமைந்தார்.
இந்த சூழ்நிலையில் சர்பராஸ்கானுக்கு ரிஷப் பண்ட் உடல் தகுதியை மேம்படுத்த எந்த அளவுக்கு உதவியாக இருந்தார் என்று இந்திய டி20 அணியின் கேப்டன் சூர்யா குமார் யாதவ் சில முக்கிய கருத்துகளை கூறியிருக்கிறார்.
சர்பராஸ்கான் அபார சதம்
இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிராக பெங்களூரில் முதலாவது டெஸ்ட் போட்டி விளையாடி வருகிறது. இதில் இந்திய அணி முதல் 46 ரன்களுக்கு ஆட்டம் இழந்தாலும் அதற்குப் பிறகு சுதாரித்து இரண்டாவது இன்னிங்சில் சிறப்பாக விளையாடி 462 ரன்கள் குவித்து நியூசிலாந்து அணிக்கு வெற்றி இலக்காக 107 ரன்களை நிர்ணயித்துள்ளது. இதன் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணியின் இளம் வீரர் 26 வயதான சர்ப்ராஸ்கான் அபாரமான சதம் அடித்து அசத்தியிருக்கிறார்.
195 பந்துகளை எதிர் கொண்ட நிலையில் 18 பௌண்டரிகள் மற்றும் மூன்று சிக்ஸர் என 150 ரன்கள் குவித்து சிறப்பான முறையில் விளையாடியிருக்கிறார். இவரது பேட்டிங் சிறந்த முறையில் இருந்தாலும் உடற் தகுதியில் சில விமர்சனங்களையும் எதிர்கொண்டு இருக்கிறார். இந்த சூழ்நிலையில் இந்திய அணியின் மற்றொரு வீரரான ரிஷப் பண்ட் சப்ராஸ்கானுக்கு உணவு முறையில் அதற்கு தகுந்த நபரை நியமித்து அவரது உடல் தகுதி சிறப்பாக இருக்க முக்கிய பங்காற்றி வருவதாக இந்திய டி20 அணியின் கேப்டன் சூரியகுமார் யாதவ் கூறி இருக்கிறார்.
ரிஷப் பண்ட்டின் உதவி
இதுகுறித்து சூரியகுமார் விரிவாக கூறும்போது “சர்பராஸ்கான் இந்திய அணியின் வலிமை மற்றும் உடற்தகுதி பயிற்சியாளர் உடன் பணியாற்றி வருகிறார். மேலும் ரிஷப் பண்ட் அவரது உணவை கவனித்துக் கொள்ளும் முறையில் சிறந்த சமையல்காரர் ஒருவரை வழங்கியுள்ளார். ஆஸ்திரேலியாவில் பார்டர் கவாஸ்கர் டிராபி நடைபெற உள்ளதால் அவரது உடல் தகுதி சிறந்த முறையில் கவனித்துக் கொள்ள வேண்டியது அவசியம். இந்த விளையாட்டில் உடல் தகுதி என்பது மிகவும் முக்கியமானது.
இதையும் படிங்க:இந்தியா ஜெயிக்கிறது சந்தேகம்தான்.. ஏன்னா ரோஹித் அணிகிட்ட முக்கியமா இந்த விஷயம் இல்லை – அஜய் ஜடேஜா கருத்து
வயதாகும் போது உடல் மாறும். அவர் இப்போது கடினமாக உழைக்கிறார் எதிர்காலத்தில் சிறந்த வீரராக இருப்பார்.அவரது உடல் அமைப்பு சற்று கொழுப்பாக இருப்பது போல் காட்டலாம். ஆனால் 450 பந்துகளில் இரட்டைச்சதம் முச்சதம் என எப்படி அடிக்கச் சொன்னாலும் விளையாடுவார். அவரிடம் அந்த திறமை இருக்கிறது. போட்டியின் நாளில் கூட அவர் பயிற்சியை தவிர்த்து அதை நான் பார்த்ததில்லை. போட்டி நடக்கும் நாளில் கூட காலை 5 மணிக்கு எழுந்து சென்று பயிற்சி செய்து விட்டு அதற்குப் பிறகு டீம் பஸ்ஸில் ஏறுவார். ஆட்டம் முடிந்து மீண்டும் பேட்டிங் செய்ய மைதானத்திற்கு செல்வார்” என்று கூறியிருக்கிறார்.