உண்மைய ஒத்துக்கிறேன்.. நாங்க பெஸ்ட் கிடையாது.. ODI ரேங்கில் NO.1 ஆனது இப்படிதான்.. பாகிஸ்தான் கோச் ஓபன் டாக்!

0
2584
Babar

நடப்பு ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடரில் பாகிஸ்தான் அணிக்கு அரை இறுதிக்கு ஒரு சதவீத வாய்ப்பு மட்டுமே ஒட்டிக்கொண்டு இருக்கிறது.

இதற்கு பாகிஸ்தான் தனக்கு அடுத்து வரவிருக்கின்ற மூன்று போட்டிகளையும் வெல்ல வேண்டும். இன்று பாகிஸ்தான் அணி உலகக் கோப்பையில் பங்களாதேஷ் அணியை எதிர்த்து விளையாட இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

இந்த நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட்டில் தற்பொழுது சூறாவளி அடித்துக் கொண்டிருக்கிறது. தலைமைப் பொறுப்பில் இருந்த இன்சமாம் உல் ஹக் தற்பொழுது பதவி விலகி இருக்கிறார். இன்னொரு பக்கம் பாபர் அசாமின் கேப்டன் பதவியின் மேல் கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறது. மேலும் அணிக்குள்ளும் ஒற்றுமை காணப்படவில்லை.

இந்த நிலையில் அணியை ஏதாவது செய்து கட்டுக்குள் கொண்டு வந்து வெற்றிக்கு திரும்ப வேண்டியது மிகவும் அவசியமான ஒன்றாக இருக்கிறது. இதன் காரணமாக பாகிஸ்தான் அணியின் தலைமை பயிற்சியாளர் கிராண்ட் பிராட்பர்ன் பத்திரிக்கையாளர் சந்திப்பை எதிர்கொண்டு, மிகவும் எதார்த்தமான பேச்சை வெளிப்படுத்தி இருக்கிறார். இந்த முறை அணியின் டைரக்டர் மிக்கி ஆர்தர் வரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அவர் பேசும் பொழுது “இந்த உலகக் கோப்பை தொடரில் மொத்தம் பத்து அணிகளும் 150 சிறந்த வீரர்களும் இருக்கிறார்கள். இதில் யார் பேவரைட்? என்று எப்படி சொல்ல முடியும். அப்படியெல்லாம் சொல்ல முடியாது.

- Advertisement -

ஐசிசி தர வரிசையை பொறுத்தவரை நாங்கள் கீழே இருப்பதை அறிவோம். நாங்கள் இதற்கு முன் இந்தியாவுக்குள் வந்து விளையாடியது இல்லை. மேலும் நாங்கள் பெரிய நாடுகளுக்கு எதிராக விளையாடியதும் இல்லை.

ஐசிசி தரவரிசையில் ஏப்ரல் மாதத்தில் நாங்கள் ஐந்தாவது இடத்தில் இருந்தோம். உலகக் கோப்பை தொடர்க்கும் முன்பாக நாங்கள் முதல் இடத்திற்கு வந்தோம். இந்த இடத்தில்தான் நீங்கள் எங்களை பேவரைட் என்று சொன்னீர்கள். ஆனால் நாங்கள் எதார்த்தமாகவே இருக்கிறோம். நாங்கள் இதுவரையில் உலகில் சிறந்தவர்களாக இருக்கவில்லை.

தற்போது நாங்கள் இந்த உலகக்கோப்பை தொடரில் இருக்கிறோம். எங்களால் யாரையும் வென்று விட முடியும் என்பது கிடையாது. நாங்கள் தரமான கிரிக்கெட் விளையாடுவதோடு மூன்று துறைகளையும் ஒருங்கிணைக்க வேண்டும்.

எங்களுடைய சிறந்த கிரிக்கெட் மூலமாக எங்களுடைய தேசத்திற்கு மகிழ்ச்சியை கொண்டு வர நாங்கள் விரும்புகிறோம். எங்கள் கிரிக்கெட் அணி பற்றி தேசம் பெருமைப்பட வேண்டும் என்பதில் நாங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கிறோம்.

கடந்த நான்கு போட்டிகளில் நாங்கள் மூன்று துறைகளையும் ஒருங்கிணைக்க வில்லை என்பதை அறிந்திருக்கிறோம். அதே சமயத்தில் அந்த நான்கு தோல்விகள் தான் நாங்கள் யார் என்பதும் கிடையாது. எங்களால் மீண்டு வர முடியும்!” என்று கூறியிருக்கிறார்!