“பட்டையை கிளப்பிக் கொண்டிருக்கும் பஞ்சாப் அணியில் மீண்டும் இணைய இருக்கும் கில்லி” – குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் போட்டியில் விளையாடுவாரா ?

0
296

இந்தியன் பிரீமியர் லீ கிரிக்கெட் தொடர் போட்டிகள் மார்ச் மாதம் புத்தி ஒன்றாம் தேதி முதல் துவங்கிய நடைபெற்று வருகின்றன. ஐபிஎல் 16 வது சீசனில் இதுவரை நடைபெற்ற 9 ஆட்டங்களில் குஜராத் டைட்டன்ஸ் மற்றும் பஞ்சாப் கிங்ஸ் அணி தலா நான்கு புள்ளிகளுடன் முதல் இரண்டு இடங்களை வகிக்கிறது.

மும்பை மற்றும் டெலியை தவிர மற்ற அணிகள் அனைத்தும் ஒரு வெற்றிகளுடன் தங்களது கணக்கை துவங்கியிருக்கின்றன . இன்று நடைபெறும் பத்தாவது போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் லக்னோ சூப்பர் ஜெயன்ஸ் அணியும் மோத இருக்கின்றது .

- Advertisement -

எந்த வருடமும் இல்லாத அளவிற்கு இந்த வருடம் ஐபிஎல் போட்டி தொடர்களில் அதிகமான அளவு வீரர்கள் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகி உள்ளனர் . இதனால் எல்லா அணிகளுமே சரிசமமாக பாதிக்கப்பட்டுள்ளன

இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே முதல் போட்டியில் நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் பில்டிங்கின் போது படுகாயம் அடைந்து தற்போது மூட்டு அறுவை சிகிச்சைக்கு தயாராகி வருகிறார். இதனால் அவர் 2023 ஆம் ஆண்டு 50 ஓவர் உலகக் கோப்பையில் இருந்து உலக வேண்டிய சூழ்நிலைக்கு தள்ளப்பட்டு இருக்கிறார் . பெங்களூர் அணியின் முதல் போட்டியில் அந்த அணியின் வேகப்பந்து வீச்சாளர் டாப்லி காயமடைந்து தற்போது தொடரில் இருந்து முழுவதுமாக வெளியேறி இருக்கிறார். இது போன்ற காயங்களால் அணி நிர்வாகம் மாற்று வீரர்களுக்கான முயற்சியில் தீவிரமாக இருந்து வருகிறது .

பஞ்சாப் கிங்ஸ் அணி இந்த தொடரில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது . விளையாடிய இரண்டு போட்டிகளிலும் அபாரமாக வெற்றி பெற்று நான்கு புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தில் உள்ளது . ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய நாளிலிருந்து சிறந்த அணியை கொண்டிருந்தாலும் பஞ்சாப் இதுவரை ஒரே ஒருமுறை மட்டுமே ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றிருக்கிறது. 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடர்களில் தான் முதல் முறையாக பஞ்சாப் அணி இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது . இந்த 16 ஆண்டுகளில் அதுதான் பஞ்சாப் அணியின் மிகச் சிறந்த சீசன் ஆகும் .

- Advertisement -

இந்த வருட ஐபிஎல் போட்டிகளில் சிறப்பான ஒரு துவக்கத்தை பஞ்சாப் அணி பெற்று இருக்கிறது முதல் இரண்டு போட்டிகளில் இரண்டு வெற்றிகள் உடன் 4 புள்ளிகளை பெற்றுள்ள அந்த அணி நிச்சயமாக இந்த வருடம் ஐபிஎல் போட்டியில் குறைந்தபட்சம் பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற முயற்சிக்கும் . இந்தப் போட்டி தொடர் தொடங்குவதற்கு முன்பாகவே பஞ்சாப் அணிக்கு பேரடியாக அமைந்த செய்தி இங்கிலாந்து அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜானி பேரிஸ்டோ இந்த ஆண்டு ஐபிஎல் போட்டிகளில் விளையாட மாட்டார் என்பதுதான் . காயத்திலிருந்து மீண்டு வந்த அவருக்கு நோ அப்ஜக்ஷன் கிளியரன்ஸ் சான்றிதழை வழங்க இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் மறுத்து விட்டது .

மற்றொரு இங்கிலாந்து அணியின் அதிரடி வீரரும் பஞ்சாப் கிங்ஸ் ஆட்டக்காரருமான லியாம் லிவிங்ஸ்டன். இவரும் குதிகால் காயம் காரணமாக இரண்டு மாதங்கள் கிரிக்கெட் விளையாடாமல் இருந்து வருகிறார் . தற்போது காயத்தில் இருந்து மீண்டு வந்த அவர் பயிற்சி களில் ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில் இங்கிலாந்து அணி அவருக்கு இந்த வார கடைசியில் என்ஓசி சான்றிதழ் வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் 13-ஆம் தேதி நடக்கும் குஜராத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் அவர் பங்கு பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது . இது குறித்து பேசி இருக்கும் லிவிங்ஸ்டன் ” கடந்த இரண்டு மாதங்கள் மிகவும் கடினமான காலம் ஒரு சிறு குழந்தையை போல் மீண்டும் கிரிக்கெட் விளையாட ஆவலுடன் காத்துக் கொண்டிருக்கிறேன்” என தெரிவித்துள்ளார் . ஏற்கனவே வெற்றி நடை போட்டுக் கொண்டிருக்கும் பஞ்சாப் அணிக்கு இவரது வருகை மேலும் உத்வேகத்தை கொடுத்துள்ளது.