கிரிக்கெட் ரசிகர்கள் பின்பற்றப்பட்ட 6 பவுலிங் ஆக்சன்

0
1124
Lasith Malinga and Zaheer Khan

இன்றைய உலகில், கிரிக்கெட் மிகவும் பிரபலமாக உள்ளது. நம் இந்தியர்கள், தேசிய விளையாட்டான ஹாக்கியை விட கிரிக்கெட்டையே அதிகம் விரும்புகின்றனர். பல வித தொடர்கள், புதிய சில விதிமுறைகள் என நாளுக்கு நாள் கிரிக்கெட் போட்டியின் தரமும் உயர்ந்து கொண்டே போகிறது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் வருகைக்குப் பிறகு, டெஸ்ட் கிரிக்கெட்டிற்கு ரசிகர்கள் பட்டாளம் கூடிவிட்டது.

கிரிக்கெட்டை தொலைக்காட்சியில் பார்ப்பதோடு யாரும் நிறுத்திக் கொள்வதில்லை. மைதானங்களில் அல்லது தெருக்களில் சிறுவர்கள் அனைவரும் தங்களது கையில் பேட் மற்றும் பந்தோடு சுற்றிக் கொண்டிருக்கின்றனர். அப்படி விளையாடும் போது, நம் அனைவரும் ஒரு முறையாவது சர்வதேச வீரரைப் போல் பந்துவீச முயற்சி செய்திருப்போம். இதை யாராலும் மறுக்க முடியாது. இக்கட்டுரையில், நம் பின்பற்றிய 6 பவுலிங் ஆக்ஷனைப் பற்றிப் பார்ப்போம்.

- Advertisement -

6.ஜஸ்பிரித் பும்ரா :

ஐ.பி.எலில் முதன் முதலில் பும்ரா பந்துவீசிய போது, பலர் அவரது ஆக்ஷனை கேலி செய்தனர். நாளைடைவில் அவரது பந்துவீச்சே மிகவும் பயங்கரமான ஒன்றாக மாறியது. பும்ராவின் பந்துவீச்சு பார்பதற்கு வித்தியாசமாகவும் கவர்ச்சியாகவும் இருக்கும். அது ரசிகர்களை வெகுவாக ஈர்த்தது. ஐ.பி.எலில் சிறப்பாக ஆடி, இந்திய அணிக்குள் நுழைந்தார். சர்வதேச கிரிக்கெட்டில், பல சாதனைகள் படைத்தார். இன்று இந்திய அணியின் முக்கிய பந்துவீச்சாளராக திகழ்கிறார்.

5.ஹர்பஜன் சிங் :

ஹர்பஜன் சிங், சர்வதேச கிரிக்கெட்டில் அறிமுகமான போட்டியில், அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். மற்ற ஸ்பின்னர்களைக் காட்டிலும் இவரது பவுலிங்கில் இரண்டு வித்தியாசங்கள் தென்பட்டன. முதலில் இவர் நீண்ட தூரம் ஓடி வந்து பந்து வீசுகிறார். இரண்டாவது இவரின் கையசைவு வேகமாகவும் அழகாகவும் இருக்கும். பலர் இவரைப் போல பந்து வீச முயற்சி செய்துள்ளனர். சென்னையில் நடந்த இந்திய – இங்கிலாந்து போட்டியில், ரோஹித் ஷர்மா கூட இவரைப் போல பந்து வீசினார்.

4.ஷோயப் அக்தர் :

அக்தர் என்றவுடன் நம் நினைவுக்கு வருவது சொல் ‘ வேகம் ‘ தான். பாகிஸ்தான் அணியில் தலைசிறந்த வேகப்பந்து வீச்சாளரான இவர் எதிரணி பேட்ஸ்மேன்களுக்கு சிம்ம சொப்பனமாக விளங்கினார். இவரைக் கண்டு நடுங்காத வீரரே இல்லை. கிரிக்கெட்டில் அதிவேக பந்து வீசிய வீரர் என்ற பெருமையும் பெற்றுள்ளார். இவரின் பவுலிங் ஆக்சன் எளிமையாகத் தான் இருக்கும். ஆனால் வேகம் அதிகமாக இருக்கும். அதனால் ரசிகர்கள் அனைவரும் அவரைப் பின்பற்ற தொடங்கினார்.

- Advertisement -

3.லசித் மலிங்கா :

மலிங்காவின் ஆக்சன், மிகவும் வித்தியாசமாக இருக்கும். ‘ ஸ்லிங் ‘ ஆக்சனை மலிங்கா தவிர ஒரு சில பந்து வீச்சாளர்கள் மட்டுமே முயற்சி செய்தனர். சர்வதேச கிரிக்கெட்டில் 5 ஹாட்டிரிக் மற்றும் 2 டபுள் ஹாட்டிரிக் எடுத்துள்ளார். ஐ.பி.எலில் அதிக விக்கெட்டுகள் வீழ்திய வீரரும் இவரே. இவரது பவுலிங் ஆக்சன், ரசிகர்கள் மத்தியில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. மேலும், இவரைப் போல ஹேர்ஸ்டைல் வைத்துக் கொண்டனர்.

2.முத்தையா முரளிதரன் :

இலங்கை, கிரிக்கெட்டுக்கு பல வழக்கத்திற்கு மாறான பந்து வீச்சாளர்களை கொடுத்திருக்கிறது. இப்பட்டியலில் மலிங்காவிற்கு அடுத்து இருக்கும் இலங்கை வீரர், முத்தையா முரளிதரன். சர்வதேச கிரிக்கெட்டில் லெஜன்ட்ரி ஸ்பின்ன்ராக இவர் திகழ்கிறார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 800 விக்கெட்டுகள் மற்றும் ஒருநாள் போட்டிகளில் 534 விக்கெட்டுகள் வீழ்த்தி உள்ளார். இவரது காலக் கட்டத்தில் ஆடிய பேட்ஸ்மேன்கள் அனைவரிடமும் இவர் ஆதிக்கம் செலுத்தினார். இவர் சிறப்பாக பந்து வீசியதைக் கண்டு பலர் இவரது ஆக்சனில் பிழை இருப்பதாக பொய்ப் புகார் அளித்தனர். இவரது பந்து வீச்சில் அதிக ஸ்பின் இருக்கும். அது ரசிகர்களை ஈர்த்தது.

1.ஜாகீர் கான் :

ரசிகர்களால் அதிகம் பின்பற்றப்பட்ட பவுலிங் ஆக்சன் இவருடையதே. இந்திய அணியின் சிறந்த இடதுகை பந்துவீச்சாளர், ஜாகீர் கான். இவர் பந்தை வலது கையில் வைத்துக் கொண்டு, பந்தை எறியும் முன் இடது கையிற்கு மாற்றி வீசுவார். இந்த ஆக்சன் ரசிகர்களை கவர்ந்தது. இவரைப் பல பந்துவீச்சாளர்களும் பின்பற்றினார். இவ்வாறாக ஜாகீர் கான் பிரபலமடைய தொடங்கினார். காலப் போக்கில் இந்திய அணிக்கு பல சாதனைகளை படைத்தார். தற்போது இவர், மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராக இருக்கிறார்.