ஐ.பி.எலில் ஷிக்கர் தவான் வீழ்த்திய 4 விக்கெட்டுகள்

0
129

ஐ.பி.எலில் அதிக ரன்கள் சேர்த்தவர்கள் பட்டியலில் இரண்டாவதாக நீடிப்பவர் ஷிக்கர் தவான். இடதுகை பேட்ஸ்மேனான இவர் இதுவரை 192 போட்டிகளில் 5784 ரன்கள் அடித்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக அவரின் ஆட்டம் பிரமாதமாக இருக்கிறது. தவானின் பேட்டிங் திறனைப் பற்றி அனைவரும் அறிவர். ஆனால் அவர் பந்துவீசுவார் என்பது பெரும்பாலானோருக்கு தெரியாது. வலதுகை ஆஃப் பிரேக் பவுலரான தவன், கடைசியாக 2013 ஐ.பி.எலில் பந்துவீசினார். ஐ.பி.எல் வரலாற்றில் அவரின் பெயருக்கு பின்னர் நான்கு ஜாம்பவான் விக்கெட்டுகள் பொறிக்கப்பட்டுள்ளது. அந்த 4 வீரர்களைப் பற்றி இக்கட்டுரையில் பின்வருமாறு பார்ப்போம்.

டேவிட் வார்னர் – 2011 ஐ.பி.எல்

வார்னரும் தவானும் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரர்களாக களமிறங்கி ஏராளமான சாதனைகள் படைத்துள்ளனர். அவர்கக்து பார்ட்னர்ஷிப் அணியின் முக்கிய அங்கமாக கருதப்பட்டது. எனினும், ஷிக்கர் தவானின் முதல் ஐ.பி.எல் விக்கெட், டேவிட் வார்னர் தான். 169 ரன்களை டெல்லி அணி சுலபகாம துரத்த ஆரம்பித்தது. வார்னர் சிறப்பான அரை சதம் விளாசி அணியை கரை சேர்கக் எண்ணினார். மிகவும் அவசியமான கட்டத்தில் அவ்விக்கெட்டை தவான் வீழ்த்தி, டெக்கான் அணியை வெற்றி பெறச் செய்தார்.

- Advertisement -

சவுரவ் கங்குலி – 2012 ஐ.பி.எல்

வார்னரின் விக்கெட்டை கைப்பற்றியதற்கு அடுத்த ஆண்டு, மிகப் பெரிய தாதாவாகிய சவுரவ் கங்குலியை ஆட்டமிழக்கச் செய்தார். நடப்பு பிசிசிஐ தலைவர் கங்குலி, தவான் சுழலில் கேமரான் ஒயிட்டிடம் பிடிபட்டார். புனே வாரிரோஸ் தொடக்க ஆட்டக்காரரின் விக்கெட் வீழ்ந்ததால், டெக்கான் அணி வெற்றிக் கனியை பறித்தது.

ஷான் மார்ஷ் – 2012 ஐ.பி.எல்

2012 ஐ.பி.எலின் 53ஆவது போட்டியில் டெக்கான் சார்ஜர்ஸ் அணி கிங்ஸ் லெவன் பஞ்சாப்பை எதிர்கொண்டது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர்கள் அதிரடியாக ஆடி 50 ரன்கள் சேர்த்தனர். உடனே கேப்டன் குமார் சங்கக்காரா, ஸ்பின்னர் தவானை பந்துவீச அழைத்தார். சிறப்பாக ஆடிக்கொண்டிருந்த ஷான் மார்ஷை ஸ்டெம்புகள் சிதற பெவிலியனுக்கு அனுப்பினார். ஆட்டத்தின் போக்கை இரண்டே ஓவர்களில் தவான் மாற்றினார்.

விரேந்தர் சேவாக் – 2012 ஐ.பி.எல்

2012 ஐ.பி.எல் தொடர் ஷிக்கர் தவானுக்கு அருமையாக அமைந்தது. தவானின் சுழலில் கடைசியாக ஆட்டமிழந்தவர், விரேந்தர் சேவாக் ஆவார். முதல் இன்னிங்சில் தவான் சிறப்பாக செயல்பட்டு 87 ரன்கள் விளாசி அணியை இமாலய இலக்கிற்கு அழைத்துச் சென்றார். 188 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் டெல்லி ஓப்பனர்கள் களமிறங்கினர். அனுபவம் இல்லாத சுழற்பந்து வீச்சாளர் என்றெண்ணி தவானை அட்டாக் செய்யும் முயற்சியில் சேவாக் தன் விக்கெட்டை பறிகொடுத்துவிட்டார். இருப்பினும், டேவிட் வார்னரின் அதிரடி சதத்தால் டெல்லி அணி அப்போட்டியை வென்றது.

- Advertisement -