கடந்த ஆண்டு சிறப்பாக ஆடியும் இந்த ஆண்டு வாய்ப்பை பெற முடியாமல் தவிக்கும் 3 முக்கிய இளம் வீரர்கள்

0
7541
Chetan Sakariya and KS Bharat

ஐ.பி.எல் பதினைந்தாவது சீசனில் சில புதிய இந்திய திறமைகள் வெளிப்பட்டு வருகிறது. குறிப்பாக லக்னோ அணியின் ஆயுஷ் பதோனி, கொல்கத்தா அணியின் ராசிக் சலம், ராஜஸ்தானின் குல்தீப் சென், பஞ்சாபின் வைபவ் அரோரா முதலியவர்கள்.

அதேசமயத்தில் சென்ற ஆண்டு ஐ.பி.எல்-ல் மிகச்சிறப்பாகச் செயல்பட்டு இந்த ஆண்டு விளையாட வாய்ப்பு பெறமுடியாத சில வீரர்களைப் பற்றித்தான் இந்தக் கட்டுரையில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -
கே.எஸ்.பரத்

சென்ற ஆண்டு பெங்களூர் அணிக்காக விக்கெட் கீப்பிங்கிலும், பேட்டிங்கில் நம்பர் 3 பொசிசனிலும் சிறப்பாகவே செயல்பட்டவர். டெல்லி அணியுடனான ஆட்டத்தில் 78 ரன்களோடு, ஆவேஷ்கானின் கடைசிப் பந்தில் சிக்ஸர் அடித்து அணியை வெற்றிபெற செய்திருப்பார். இவரை எப்படியும் பெங்களூர் திரும்ப ஏலத்தில் வாங்கும் என்று எதிர்பார்த்திருந்த நிலையில், டெல்லி அணி வாங்கியது. தற்போது டெல்லி அணியில் லலித், சப்ப்ராஸ்கான் வாய்ப்பு பெற்றுவரும் நிலையில் இவருக்கு இன்னும் வாய்ப்பு கிடைக்கவில்லை. விக்கெட் கீப்பராக ரிஷாப் பண்ட் இருப்பதும், லலித் நன்றாக தாக்குதல் பாணியில் ஆடுவதாலும், சர்ப்ராஸ் கான் மாடர்ன் கிரிக்கெட் ஷாட்ஸ் அதிகம் ஆடக்கூடியவர் என்பதாலும், இவரின் புறமாய் டெல்லி பயிற்சியாளர் மற்றும் கேப்டனின் பார்வை திருபாமல் இருக்கிறது. கடந்த ஆண்டு 8 ஆட்டங்களில் வாய்ப்பை பெற்று 191 ரன்கள் அடித்திருந்தார்.

ஷேத்தன் ஷக்காரியா

சென்ற ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக வேகப்பந்துவீச்சில் குறிப்பிடும்படியாகச் செயல்பட்ட இடக்கை வேகப்பந்து வீச்சாளர். புதிய பந்தில் ஸ்விங் செய்வதோடு, வேகத்தில் மாறுபாடு காட்டுவது, கட்டர்கள் வீசுவதென பந்துவீச்சில் வெரைட்டி காட்டக்கூடியவர். இதனால் இவருக்கு இந்திய அணியில் இடம்பெறும் வாய்ப்பும் கிடைத்தது. தற்போதைய டெல்லி அணியில் இடக்கை வேகப்பந்து வீச்சாளர்களான, கலீல் அகமதுவும், முஸ்தாபாசூர் ரகுமானும் நன்றாகவே செயல்படுவதால் இவருக்கான வாய்ப்பு அமையாமல் இருக்கிறது. கடந்த ஆண்டு 14 ஆட்டங்கள் வாய்ப்பு பெற்று 14 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்.

கார்த்திக் தியாகி

சென்ற ஆண்டு ராஜஸ்தான் அணிக்காக விளையாடிய இவரின் வேகப்பந்து வீச்சு மெருகேறி இருந்தது என்றே சொல்லலாம். பிலாக்ஹோல், யார்க்கர் பந்துவீச்சு வகைமையைச் சிறப்பாக்கி இருந்தார். பஞ்சாப் அணிக்கு எதிரான இவரின் கடைசி ஓவர் தந்த வெற்றி, ஐ.பி.எல் போட்டிகளில் சிறந்த போட்டியாக அந்தப் போட்டியை மாற்றி இருந்தது. ஆனாலும் காயம் காரணமாக அதிக ஆட்டங்களில் விளையாட முடியாமல் இருந்தார். கடந்த ஆண்டு 4 ஆட்டங்களில் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார்!

- Advertisement -