“ரொம்ப ஓவரா பேசிட்டிங்க.. வெறும் 22 வயசு பையன் மறந்துடாதிங்க” – அஷ்வின் பேச்சு!

0
156
Ashwin

இந்த ஆண்டுக்கான உள்நாட்டு டெஸ்ட் கிரிக்கெட் தொடர் ரஞ்சி டிராபி கடந்த வாரத்தில் துவங்கி நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்ளும் 38 அணிகளுக்கும் 19 போட்டிகள் நடைபெற்று முடிந்திருக்கிறது. எல்லா அணிகளும் தங்களின் முதல் போட்டியில் விளையாட விட்டன.

பெரும்பாலும் உள்நாட்டு கிரிக்கெட்டில் தற்பொழுது பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளங்கள் பெரும்பாலும் கொடுக்கப்படுகின்றன. இதன் மூலம் தரமான பேட்ஸ்மேன்களை உருவாக்கும் முயற்சி நடைபெறுகிறது.

- Advertisement -

உலக கிரிக்கெட் நாடுகளில் இந்தியாவில்தான் உள்நாட்டு கிரிக்கெட் தொடர்களின் கட்டமைப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது. இதன் காரணமாகவே மிகவும் தரமான வீரர்கள் மிக அதிகப்படியாக கிடைத்து வருகிறார்கள்.

நடந்து கொண்டிருக்கும் ரஞ்சித் டிராபி பற்றி பேசிய ரவிச்சந்திரன் அஸ்வின் “ஐபிஎல் தொடரில் ரியான் பராக்கின் ஆட்டத்தை பார்த்துவிட்டு, அவருடைய தகுதிக்கு மீறி அவர் வாய்ப்பு தருகிறார் என்று விமர்சிக்கப்படுகிறார். ஆனால் அவர் 22 வயதான இளைஞர் தான் என்பதை நாம் அடிக்கடி மறந்து விடுகிறோம். சையத் முஸ்ட்டாக் அலி டிராபி, விஜய் ஹசாரே டிராபி இரண்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டார். தற்பொழுது ரஞ்சி டிராபியில் சத்தீஸ்கர் அணிக்காக முதல் போட்டியில் 155 ரன்கள் அடித்திருக்கிறார்.

அந்த போட்டியில் அவர் 87 பந்தில் 155 ரன்கள் எடுத்தார். ஒரு டி20 பேட்ஸ்மேனாக தன்னை காட்டிக்கொள்ள வேண்டும் என்று அவர் அப்படி விளையாடவில்லை. அந்த நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். மறுமுனையில் ஈக்கள் போல விக்கெட்டுகள் விழுந்து கொண்டு இருந்தது. அந்த நேரத்தில் பொறுப்பை தன் கையில் எடுத்து அப்படி ஒரு அதிரடி ஆட்டத்தை விளையாடினார்.

- Advertisement -

குஜராத் ஆடுகளத் தயாரிப்பாளர் மேல் எனக்கு மிகுந்த மரியாதை இருக்கிறது. இந்த முறை குஜராத் தமிழ்நாடு அணிகள் மோதிய ரஞ்சி போட்டியில் சிவப்பு மண் ஆடுகளம் கொடுக்கப்பட்டது. இந்த ஆடுகளத்தில் பந்து பெரிதாக திரும்பவில்லை. ஆனால் தொடர்ச்சியாக நல்ல வேகத்துடனும் பவுன்ஸ் உடனும் சென்றது. இப்படிப்பட்ட ஆடுகளத்தை அமைப்பது கடினமானது மேலும் இப்படியான ஆடுகளங்கள் நிறைய மாறக்கூடியவை” என்று கூறியிருக்கிறார்!

தற்பொழுது இந்திய வீரர்களில் ஒரு பிரிவினர் ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரில் கவனம் செலுத்திக் கொண்டிருக்க, இன்னொரு பிரிவு இந்திய அணி ஜனவரி 25ஆம் தேதி துவங்கும் இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கு தயாராகி வருகிறது. இந்தத் தொடரில் மிக முக்கியமான வீரராக ரவிச்சந்திரன் அஸ்வின் இருப்பார்!