உலக கோப்பை.. நாளை ஆஸி எதிரான வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் XI..!

0
9687

இன்று உலகக்கோப்பையின் மூன்றாவது நாளில் இரண்டு போட்டிகள் நடைபெறுகிறது. முதல் போட்டியில் ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் அணிகள் மோதுகின்றன. இந்தப் போட்டி காலை 10.30 மணிக்கு துவங்குகிறது. இரண்டாவது போட்டியில் இலங்கை மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி மதியம் 2 மணிக்கு துவங்குகிறது.

இந்த நிலையில் நடப்பு உலகக்கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் மோதிக் கொள்ளும் போட்டிக்கு அடுத்து, அதிக எதிர்பார்ப்பை கொண்டு இருக்கும் போட்டியாக, இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி அமைந்திருக்கிறது.

- Advertisement -

இந்த இந்தியா ஆஸ்திரேலியா அணிகள் மோதிக் கொள்ளும் போட்டி நாளை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் மதியம் 2 மணிக்கு நடக்கிறது. இந்தப் போட்டியில் இந்திய அணியின் வீரர் சுப்மன் கில் விளையாடுவது சந்தேகம்தான். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருக்கும் அவர் அடுத்து ஆப்கானிஸ்தான் போட்டிக்கு கிடைப்பது கூட சந்தேகம்தான்.

இந்திய அணி இந்த உலகக்கோப்பை தொடரை வலுவான ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இருந்து ஆரம்பிக்கிறது. இந்த போட்டியில் வென்றால் எந்த அளவிற்கு நம்பிக்கை அதிகரிக்குமோ, தோற்றால் அதே அளவு நம்பிக்கை குறைவதற்கும் அபாயம் இருக்கின்ற போட்டி அட்டவணையாக இது அமைந்திருக்கிறது.

சென்னை சேப்பாக்கம் ஆடுகளத்தைப் பொறுத்தவரை எடுத்துக் கொண்டால், சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளமாகவே இதுவரையில் இருந்து வந்திருக்கிறது. கண்டிஷன் உதவி செய்தால் மட்டுமே பந்து ஸ்விங் ஆகும்.

- Advertisement -

நாளை ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டிக்கு சுப்மன் கில் கிடைக்காவிட்டால் ரோஹித் சர்மா உடன் இஷான் கிஷான்தான் துவக்க வீரராக வருவார். மூன்றாவது இடத்தில் விராட் கோலி இருப்பார். நான்காவது இடத்தில் சுழற்பந்து வீச்சுக்கு சாதகமான மைதானம் என்பதாலும், சமீபத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சதம் அடித்திருக்கின்ற காரணத்தினாலும் ஸ்ரேயாஸ் இருப்பார்.

ஐந்தாவது இடத்தில் கட்டாயம் கே.எல்.ராகுல் விக்கெட் கீப்பராக இடம் பெறுவார். ஆறாவது இடத்தில் ஹர்திக் பாண்டியா மற்றும் ஏழாவது இடத்தில் ரவீந்திர ஜடேஜா உறுதியாக இருப்பார்கள். மேலேயே சுழற்சிக்கு சாதகமான ஆடுகளம் என்று பார்த்ததால், ரவிச்சந்திரன் அஸ்வின் இந்தப் போட்டியில் கட்டாயம் விளையாடுவார். அவர் எட்டாவது இடத்தில் இடம் பெறுவார்.

இந்திய அணியின் பிரதான சுழற் பந்துவீச்சாளராக ஒன்பதாவது இடத்தில் குல்தீப் யாதவ் இருப்பார். பத்தாவது மற்றும் பதினொன்றாவது இடத்தில் ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ் இருவரும் பிரதான இரண்டு வேகப்பந்து வீச்சாளராக இருப்பார்கள்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான உலகக்கோப்பை போட்டியின் வலிமையான உத்தேச இந்திய பிளேயிங் லெவன் :

ரோகித் சர்மா (கேப்டன்), இஷான் கிஷான், விராட் கோலி, ஸ்ரேயா ஐயர், கேஎல்.ராகுல் (வி. கீ), ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா மற்றும் முகமது சிராஜ்.