எப்படி அவர் அதை பண்றாரு?.. தோனி இந்த விஷயத்துல பெரிய புதிர்.. என்னால நம்பவே முடியல – டாம் மூடி பேச்சு

0
254
Moody

கடந்த ஐபிஎல் தொடரில் தோனி கால் முட்டியில் காயம் அடைந்திருந்த காரணத்தினால் பேட்டிங் செய்வதற்கு மிகவும் சிரமப்பட்டார். அவரால் விக்கெட்டுகளுக்கு இடையில் வேகமாக ஓட முடியவில்லை. இதனால் அவர் கடைசி சில ஓவர்களுக்கு மட்டுமே பேட்டிங் வந்தார். நடப்பு ஐபிஎல் சீசனிலும் அதே தொடர்கிறது. ஆனால் அவர் காட்டும் அதிரடிக்கு டாம் மூடி போன்ற முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் வியந்து போயிருக்கிறார்கள்.

நடப்பு ஐபிஎல் சீசனில் தோனி டெல்லிக்கு எதிரான போட்டியில் அன்றிச் நோர்க்கியா வந்து வீச்சில் நம்ப முடியாத கிரிக்கெட் ஷாட்களை விளையாடினார். அந்த போட்டியில் சிஎஸ்கே அணி தோல்வி அடைந்திருந்தாலும் கூட, அவர் வேகமாக அடித்த 36 ரன்கள் ஆச்சரியப்படுத்தும் வகையில் இருந்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து மும்பைக்கு எதிரான போட்டியில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் வெறும் நான்கு பந்துகளை சந்தித்து, அதில் ஹாட்ரிக் சிக்ஸர்கள் அடித்து, மொத்தம் 20 ரன்கள் குவித்து பிரமாதப்படுத்தினார். நேற்றும் லக்னோவா அணிக்கு எதிராக 8 பந்துகளை மட்டுமே சந்தித்து 28 ரன்கள் குவித்து அசத்தினார்.

தோனியின் சிக்ஸர் ஹிட்டிங் நான்கைந்து வருடங்களுக்கு முன்பு இருந்ததை விட இன்னும் சிறப்பாக இருக்கிறது என்று தான் கூற வேண்டும். அவர் உள்ளே வந்த முதல் பந்து அவருக்கான இடத்தில் இருந்தால் பந்து கேலரிக்கு பறந்து விடுகிறது. இதில் ஆச்சரியமான விஷயம் என்னவென்றால் அவரை ஐபிஎல் தொடர் தவிர வேறு எங்கும் கிரிக்கெட் விளையாடுவது கிடையாது என்பதுதான்.

இதுகுறித்து ஆஸ்திரேலியா லெஜெண்ட் டாம் மூடி பேசும் பொழுது ” அவருக்கு தற்பொழுது 42 வயதாகிறது. ஆனால் உடல் தகுதியில் செலுத்தும் கவனம், கிரிக்கெட்டில் அவருக்கு இருக்கும் பசி இன்னும் அப்படியேதான் இருக்கிறது. இதில் புதிரான விஷயம் என்னவென்றால் அவர் ஐபிஎல் தவிர வேறு எங்கும் கிரிக்கெட் விளையாடுவது இல்லை. வெளியில் இருந்து நேராக வந்து இவ்வளவு சிறப்பாக ஐபிஎல் தொடரில் விளையாடுவது கடினம். ஐபிஎல் மாதிரியான ஒரு உயரடுக்கு தொடரில் இப்படி விளையாடுவது சாத்தியமற்றது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -

இதையும் படிங்க : தோனிக்கு சிறப்பு மரியாதை தந்த கேஎல்.ராகுல்.. களத்தில் நெகிழ்ந்து போன ரசிகர்கள்.. அற்புதமான சம்பவம்!

இதுகுறித்து வாசிம் ஜாஃபர் கூறும் பொழுது “தோனி விளையாடும் வரை நம்ப முடியாதது. சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடும் பந்துவீச்சாளர்களுக்கு எதிராக டெத் ஓவர்களில் இப்படி அடிப்பது மிகவும்கடினமான ஒன்று. அவர் எந்தவிதமான போட்டி பயிற்சியும் இல்லாமல் இதை செய்வது ஆச்சரியமானது” என்று கூறியிருக்கிறார்.