டேவிட் வார்னர் இல்லாத ஹைதராபாத் அணி காரணம் இதுதான் விளக்கிய டாம் மூடி

0
100
David Warner and Tom Moody

நேற்று சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணி நிர்வாகம் ஐதராபாத் அணியின் புதிய கேப்டன் கேன் வில்லியம்சன் என அறிவித்தது. இந்த தொடரில் டேவிட் வார்னர் மிக சிறப்பாக தலைமை தாங்கினார். ஆனால் இப்பொழுது நாங்கள் தலைமை பொறுப்பை கேன் வில்லியம்சன் இடம் கொடுக்க உள்ளோம் என்றும் இதுவரை தலைமை தாங்கிய டேவிட் வார்னர்க்கு நன்றி என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

டேவிட் வார்னரை தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கியதற்கு மிகப்பெரிய காரணம், இந்த தொடரில் அவர் சரியாக விளையாடததே. மேலும் தலைமை தாங்குவதிலும் அவர் கோட்டை விட்டுள்ளார். முதல் 6 போட்டிகளில் 5 போட்டிகளில் மிக மோசமாக அணியை தலைமை தாங்கி தோல்வி பெறச் செய்துள்ளார். இதன் காரணமாகவே டேவிட் வார்னர் தலைமைப் பொறுப்பில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

- Advertisement -

விளக்கம் அளித்துள்ள டாம் மூடி

இன்று நடந்து கொண்டிருக்கும் ஹைதராபாத் மற்றும் ராஜஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியில் டேவிட் வார்னர் முதல் முறையாக பல நாட்களுக்கு பிறகு அணியில் இடம்பெறவில்லை. கேப்டன் பொறுப்பிலிருந்து அவரை நீக்கி விட்டீர்கள் ஆனால் இதற்காக அவரை அணியில் இருந்து நீக்கி விட்டீர்கள் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.

அதற்கு விளக்கம் அளித்துள்ள ஹைதராபாத் அணியின் கிரிக்கெட் இயக்குனர் டாம் மூடி, நாங்கள் கடந்த இரண்டு நாட்களாகவே இது பற்றி விவாதித்து வந்தோம். டேவிட் வார்னர் மிகச்சிறந்த வீரராகவும் அதேசமயம் அணியை மிக சிறப்பாக தலைமை தாங்கியும் இத்தனை வருடங்கள் சிறப்பாக விளையாடினார். ஆனால் இன்று மே நேற்று நடந்ததை வைத்து இன்று முடிவு எடுத்து விட முடியாது, அது அனைவருக்கும் நன்றாகவே தெரியும்.

அந்த அடிப்படையில் இன்றைக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து கொண்டு நாங்கள் ஒரு முடிவெடுத்துள்ளோம். அதன்படி இனி வரும் போட்டிகளில் எங்களுக்கு இரண்டு பேட்ஸ்மேன்கள், ஒரு ஆல்ரவுண்டர் மற்றும் ஒரு பவுலர் தேவை. அந்த அடிப்படையில் தற்போது அணியில் மிகச் சிறந்த பார்மில் இருக்கும் ஜானி பேர்ஸ்டோ மற்றும் கேன் வில்லியம்சன் சரியான பேட்ஸ்மேன்கள் ஆக எங்களுக்கு தெரிந்தார்கள். அதேபோல ஆல்ரவுண்ட் இருக்கு நபி மற்றும் பவுலருக்கு ரஷித் கான் சரியென பட்டது.

- Advertisement -

இந்த அடிப்படையில் தான் இன்றைய போட்டியில் ஜானி பேர்ஸ்டோ, கேன் வில்லியம்சன், ரஷீத் கான் மற்றும் முகமது நபி விளையாடி வருகின்றனர். தவிர வேண்டும் என்றே நாங்கள் வார்னரை விளையாட வைக்க வில்லை. போட்டியில் வெற்றி பெறுவது மட்டுமே முக்கியம் அது எல்லோருக்கும் தெரியும் வார்னருக்கு கூட அது தெரியும். எனவேதான் இந்த மாற்றம் என டாம் மூடி தற்பொழுது விளக்கம் அளித்துள்ளார்.