பிரித்வி ஷா கிட்ட இத மட்டும் எதிர்பார்க்காதிங்க.. அவர் அவ்வளவுதான் – டாம் மூடி விளக்கமான பேச்சு

0
49
Prithvi

நடப்பு ஐபிஎல் தொடரில் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேப்பிட்டல் அணி ஆறாவது போட்டியில் விளையாடி இரண்டு போட்டிகளில் வென்று புள்ளி பட்டியலில் ஒன்பதாவது இடத்தில் இருக்கிறது. அந்த அணியில் முக்கிய வீரர்களுக்கு ஏற்பட்ட காயம் பெரிதாக பாதிப்பை உருவாக்கி இருக்கிறது. அதே சமயத்தில் பிரிதிவி ஷா நடப்பு ஐபிஎல் தொடரில் ஓரளவுக்கு நல்ல முறையில் விளையாடுகிறார். அவர் குறித்து முக்கிய கருத்து ஒன்றை டாம் மூடி பேசி இருக்கிறார்.

இந்த முறை பிரித்திவி ஷாக்கு ஐ பி எல் தொடரின் ஆரம்பத்திலேயே வாய்ப்புகள் கொடுக்கப்படவில்லை. இரண்டு போட்டிகள் அவர் பெஞ்சில் அமர வைக்கப்பட்டார். அவர் வலைப்பயிற்சியில் எப்படி செயல்படுகிறார் என்பதை பார்த்து தான் வாய்ப்பு தர முடியும் என்று ரிக்கி பாண்டிங் கூறியிருந்தார்.

- Advertisement -

இப்படியான சூழ்நிலையில் கடைசி நான்கு போட்டிகளில் விளையாடியிருக்கும் அவர் இரண்டு அரை சதங்களுடன் 151 ரன்கள் எடுத்திருக்கிறார். சென்னை மற்றும் லக்னோ அணிகளுக்கு எதிராக வெற்றி பெற்ற ஆட்டங்களில், அவர் அரைசதம் அடிக்கவில்லை என்றால் கூட, நல்ல தாக்கத்தை உண்டாக்கக்கூடிய வகையில் 40 மற்றும் 30 ரன்களுக்கு மேல் எடுத்திருந்தார்.

கடந்த சில வருடங்களாக அவருக்கு ஐபிஎல் தொடர் மிக மோசமாக அமைந்து வந்த சூழலில், இந்த முறை அவருக்கு முதல் இரண்டு போட்டிகளில் வாய்ப்பு கிடைக்காமல் இருந்தால் கூட, கடைசி நான்கு போட்டிகளில் அவர் செயல்பட்டு இருக்கும் விதம் நம்பிக்கை அளிப்பதாக இருக்கிறது.

இந்த நிலையில் டாம் மூடி பிரித்திவி ஷா பற்றி கூறும் பொழுது ” என்னை பொருத்தவரை அவர் 15, 20 பந்துகளில் 30, 40 ரன்கள் எடுத்தால் அவருடைய வேலையை அவர் செய்துவிட்டார் என்று நினைத்துக் கொள்வேன். அவர் அரை சதம் மற்றும் சதம் அடிப்பார் என்று எதிர்பார்க்கக் கூடாது. அவர் உங்களுக்கு ஆட்டத்தில் ஒரு இம்பாக்ட் தருவார்.

- Advertisement -

நான் சொல்வது என்னவென்றால் அவர் உங்களுக்கு துவக்கத்தில் வந்து ஒரு நல்ல தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய ரோல் செய்பவர். அவர் துவக்க இடத்தில் வந்து எதிரணி பந்துவீச்சுக்கு ஒரு சேதாரத்தை உண்டு செய்து, அவர்களை போட்டியில் பின்னோக்கித் தருவதுதான் அவருக்கான முக்கிய வேலை.

இதையும் படிங்க : மும்பை இந்தியன்ஸ் எதிராக வலிமையான சிஎஸ்கே உத்தேச பிளேயிங் XI.. பேட்டிங் பவுலிங்கில் 2 மாற்றங்கள்

அவர் வந்து இப்படி அதிரடியாக ஆரம்பத்தில் விளையாடிவிட்டு செல்லும் பொழுது, அவர் கொடுக்கும் துவக்கத்தை பெரிதாக எடுத்துச் செல்வதற்கு நல்ல வீரர்கள் டெல்லியில் இருக்கிறார்கள். தற்போது டெல்லிக்கு ஒரு மாதிரி நல்ல பிளேயிங் லெவன் கிடைத்திருப்பதாக தெரிகிறது” என்று கூறியிருக்கிறார்.