மும்பை இந்தியன்ஸ் எதிராக வலிமையான சிஎஸ்கே உத்தேச பிளேயிங் XI.. பேட்டிங் பவுலிங்கில் 2 மாற்றங்கள்

0
650
CSK

நாளை 2 போட்டிகள் ஐபிஎல் தொடரில் நடக்க இருக்கும் நிலையில், இரண்டாவது போட்டியில் மும்பை வான்கடே மைதானத்தில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் நடப்பு சாம்பியன் சிஎஸ்கே அணிகள் மோதிக்கொள்ள இருக்கின்றன. இதில் சிஎஸ்கே அணிக்கு எது வலிமையான பிளேயிங் லெவனாக இருக்கும்? என்று பார்க்கலாம்.

சிஎஸ்கே அணி தனது முதல் இரண்டு ஆட்டங்களை சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் ஆர்சிபி மற்றும் குஜராத் அணிகளுக்கு எதிராக விளையாடி வென்றது. இதற்கு அடுத்த இரண்டு ஆட்டங்களை விசாகப்பட்டினம் மற்றும் ஹைதராபாத்தில் டெல்லி மற்றும் ஹைதராபாத் அணிகளுக்கு எதிராக தோற்றது. மீண்டும் திரும்ப சென்னை சேப்பாக்கம் வந்து ஐந்தாவது போட்டியில் கொல்கத்தாவை வென்றது. தற்பொழுது ஐந்தில் மூன்று போட்டிகளை வென்று புள்ளி பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது.

- Advertisement -

இந்த நிலையில் நாளை மிகப்பெரிய போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக அவர்களது சொந்த மைதானத்தில் சிஎஸ்கே விளையாட இருக்கிறது. சென்னை சேப்பாக்கம் மற்றும் வான்கடே, பொதுவான மைதானங்கள் என்று ஒட்டுமொத்த ஐபிஎல் வரலாற்றில் இரண்டு அடிகளும் மோதிக்கொண்டதில் மும்பை இந்தியன்ஸ் அணியின் கையே ஓங்கி இருக்கிறது.

கடந்த போட்டியில் கொல்கத்தா அணிக்கு எதிராக தீபக் சகர் இடத்தில் சர்துல் தாக்கூர் விளையாடினார். தீபக் சகர் நாளைய போட்டிக்கு திரும்புவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் மதிஷா தீக்சனா இடத்தில் மதிஷா பதிரனாவும் வருவார் என்று தெரிகிறது. எனவே நாளை இந்த இரண்டு மாற்றங்களும் அணியில் இருப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்.

சிஎஸ்கே முக்கிய இரண்டு மாற்றங்களைச் செய்யுமா?

அதே சமயத்தில் கடந்த போட்டியில் ரகானே கொஞ்சம் காயமடைந்ததால் மூன்றாவது இடத்தில் டேரில் மிட்சல் வந்தார். மும்பை வான்கடை மைதானம் ரன் குவிப்புக்கு சாதகமானது. மேலும் மும்பை அணியில் எல்லோரும் அதிரடி பேட்ஸ்மேன்களாக இருக்கிறார்கள். இந்த நிலையில் ரகானே இடத்தில் ஒரு அதிரடி வீரர் இறங்குவது சரியாக இருக்கும் என பார்க்கப்படுகிறது. இந்தக் காரணத்தினால் ரகானே அணியில் இருந்தால் கூட, மூன்றாவது இடத்தில் டேரில் மிட்சல் அல்லது சமீர் ரிஸ்வி களம் இறக்கப்பட வேண்டும் என பேச்சுக்கள் எழுந்துள்ளது.

- Advertisement -

எனவே தோனி மற்றும் அவரது குழுவினர் இந்த முடிவை எடுப்பார்களா? என்கின்ற எதிர்பார்ப்பு அதிகரித்து இருக்கிறது. அதே சமயத்தில் ரகானேவுக்கு மும்பை வான்கடே மைதானம் சொந்த மைதானம். மேலும் அவர் கடந்த ஐபிஎல் தொடரில் மும்பைக்கு எதிராக மும்பை வான்கடே மைதானத்தில் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்து சிஎஸ்கே அணி வெல்ல வைத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : பும்ரா சமி கிடையாது.. உலக கிரிக்கெட்டில் புதிய பந்தில் பெஸ்ட் பவுலர் இந்த இந்திய வீரர்தான் – டிரண்ட் போல்ட் தேர்வு

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே உத்தேச பிளேயிங் லெவன் :

ருதுராஜ், ரச்சின் ரவீந்தரா ரகானே, சிவம் துபே, டேரில் மிச்சல், சமீர் ரிஸ்வி, ரவீந்திர ஜடேஜா, தோனி, தீபக் சகர், துஷார் தேஷ் பாண்டே மற்றும் முஸ்தபிஷூர் ரஹ்மான். இம்பேக்ட் பிளேயர் மதிஷா பதிரனா.