தல தோனியின் 10 வருட கடப்பாரை சாதனையை உடைத்த டாம் கரன்.. இது ஒன்னும் போதுமே இவர ஐபிஎல்-ல அள்ளிட்டு போவ.!

0
3710

தி 100 என்று அழைக்கப்படும் 100 பந்துகளை கொண்ட கிரிக்கெட்டின் புதிய வடிவம் கடந்த ஆண்டு இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்தப் போட்டி தொடரின் இரண்டாவது சீசன் நேற்றுடன் முடிவடைந்தது . மான்செஸ்டர் ஒரிஜினல் மற்றும் ஓவல் இன்விசிபிள் அணிகள் மோதிய போட்டியில் ஓவல் அணி 14 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று கோப்பையை கைப்பற்றியது.

8 அணிகள் கலந்து கொண்ட இந்தத் தொடரின் இறுதிப் போட்டியில் ஜோஸ் பட்லர் தலைமையிலான மான்செஸ்டர் அணி தான் வெற்றி பெறும் என அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால் சாம் பில்லிங்ஸ் தலைமையிலான ஓவல் அணியினர் கோப்பையை கைப்பற்றி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கின்றனர்.

- Advertisement -

இந்தப் போட்டியில் முதலில் ஆடிய ஓவல் அணியினர் முதல் 36 பந்துகளில் 34 ரன்கள் மட்டுமே எடுத்து ஐந்து விக்கெட்டுகளை இழந்திருந்தது . இதனால் இந்த போட்டி ஒரு தலை பட்சமாக முடியும் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். இதனைத் தொடர்ந்து ஆட வந்த ஜேம்ஸ் நீஷாம் மற்றும் டாம் கரண் ஜோடி மிகச் சிறப்பாக ஆடி ஓவல் அணியினர் 161 ரன்களை எடுக்க உதவியது .

இவர்கள் இருவரும் இணைந்து ஆறாவது விக்கெட் இருக்கு ஜோடியாக 65 பந்துகளில் 127 ரன்கள் சேர்த்தனர். இதில் நியூசிலாந்து அணியின் ஆல் ரவுண்டரான ஜேம்ஸ் நீசாம் மிகச் சிறப்பாக விளையாடி 33 பந்துகளில் 7 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்சர் உடன் 57 ரன்கள் எடுத்து ஆட்டம் இழக்காமல் இருந்தார். இவருடன் அதிரடியாக விளையாடிய இங்கிலாந்து அணியின் ஆல்ரவுண்டர் டாம் கரன் 34 பந்துகளில் 4 பவுண்டரிகள் மற்றும் 5 சிக்ஸர்களுடன் 67 ரன்கள் எடுத்து ஆட்டம் விளக்காமல் இருந்தார் சமீபகாலமாக காயம் காரணமாக இங்கிலாந்து அணியில் இடம் பெறாமல் இருந்த டாம் கரன் இந்தத் தொடர் முழுவதும் மிகச் சிறப்பான ஆட்டத்தை பேட்டிங்கில் வெளிப்படுத்தி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதன் மூலம் எம்எஸ். தோனியின் 10 வருட சாதனையை முறியடித்திருக்கிறார் டாம் கரண். 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது இறுதிப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக சிஎஸ்கே அணியின் கேப்டன் எம்எஸ் தோனி 45 பந்துகளில் 63 ரன்கள் எடுத்திருந்தார். இது டி20 கிரிக்கெட் போட்டியில் ஏழாவது இடத்தில் களமிறங்கும் வீரர் அல்லது அதற்கு கீழாக களமிறங்கும் வீரர் எடுத்த அதிகபட்ச ஸ்கோர் ஆக இருந்தது.

- Advertisement -

இந்த சாதனையை தான் தற்போது டாம் கரன் மான்செஸ்டர் ஒரிஜினல் அணிக்கு எதிரான போட்டியில் முறியடித்திருக்கிறார். நேற்றைய போட்டியில் அவர் ஏழாவது இடத்தில் களம் இறங்கி 67 ரன்கள் எடுத்ததன் மூலம் மகேந்திர சிங் தோனியின் 10 வருட சாதனையை முறியடித்திருக்கிறார் டாம் கரன். நேற்றைய அவரது அதிரடி ஆட்டத்தின் மூலம் அவருக்கு ஆட்ட நாயகன் விருதும் வழங்கப்பட்டது.

மேலும் டாம் கரண் எடுத்து 67 ரன்களின் மூலம் அவரது அணி வெற்றி பெற்று இருக்கிறது. ஆனால் தோனி 63 ரன்கள் எடுத்த போட்டியில் சிஎஸ்கே அணி மும்பைக்கு எதிராக தோல்வியை தழுவியது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இந்த இரண்டு வீரர்களும் இறுதிப் போட்டியில் இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. சிஎஸ்கே மற்றும் மும்பை அணிக்கு எதிரான போட்டியில் முதலில் ஆடிய மும்பை அணி 148 ரன்களுக்கு 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது . இதனைத் தொடர்ந்து ஆடிய சிஎஸ்கே அணி 125 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது அந்த அணியின் கேப்டனான தோனி மட்டும் 63 ரன்கள் எடுத்திருந்தார்.