” எனக்கு இந்தியா ஜெர்சி வேணாம் சி.எஸ்.கே ஜெர்சி தான் வேணும் ” எனக் கேட்ட பாகிஸ்தான் வீரருக்கு நம்ம தல தோனி செய்த காரியம்

0
106
MS Dhoni

சிஎஸ்கே அணியின் ஜெர்சி வேண்டும் என்று கேட்ட பாகிஸ்தான் வீரருக்கு தனது கையெழுத்துடன் அனுப்பி வைத்திருக்கிறார் மகேந்திர சிங் தோனி.

இந்திய அணியில் தலைசிறந்த கேப்டன்களில் ஒருவரான மகேந்திர சிங் தோனி, அனைத்து வித ஐசிசி கோப்பைகளையும் வென்று வரலாறு படைத்தார். 2019 ஆம் ஆண்டு நடந்த உலகக்கோப்பை அரை இறுதிபோட்டிக்கு பிறகு, சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்ற மகேந்திர சிங் தோனி தொடர்ந்து சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடுகிறார்.

- Advertisement -

சிறந்த கேப்டன்ஷிப் இவரிடம் இருந்தாலும் இவரின் அமைதியான பண்பிற்காக ரசிகர்கள் பலர் இன்னும் இவரை பின்தொடர்ந்து வருகின்றனர். பல அணிகளில் உள்ள கிரிக்கெட் வீரர்களும் இவருக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். மகேந்திர சிங் தோனி ரன்கள் எதுவும் அடிக்க தேவையில்லை; அவர் கிரிக்கெட் மைதானத்திற்குள் நுழைந்தாலே போதுமானது, பல ஆயிரக்கணக்கான ரசிகர்கள் இவரைக் காண்பதற்கு மைதானத்திற்குள் வருவர். இதனை சமீபத்தில் நடந்த ஐபிஎல் தொடரிலும் நாம் கண்டிருப்போம்.

எதிரி நாடாக கருதப்படும் பாகிஸ்தான் நாட்டில் தோனிக்கு ஏராளமான ரசிகர்கள் இருக்கின்றனர். அதிலும் குறிப்பாக பாகிஸ்தான் அணியில் சில வீரர்கள் தோனிக்கு ரசிகர்களாக இருக்கின்றனர். 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற டி20 உலக கோப்பை தொடரின் போது, இந்திய அணிக்கு தோனி ஆலோசகராக இருந்தார். அப்போது அவரிடம் பேசுவதற்கு பாகிஸ்தான் வீரர்களும் காத்திருந்து அறிவுரைகளை பெற்றனர்.

அந்த சமயம் பாகிஸ்தான் அணியின் வேகப்பந்துவீச்சாளர் ஹரிஷ் ரவுப் என்பவர் தோனியிடம் ஜெர்ஸ்ஸியை கையெழுத்திட்டு கேட்டிருந்தார். அதிலும் குறிப்பாக இந்திய அணியின் ஜெர்சி வேண்டாம், சிஎஸ்கே அணியின் ஜெர்சி வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதற்கு செவி சாய்த்த தோனி அவருக்கு சிஎஸ்கே ஜெர்சியை கையெழுத்திட்டு அனுப்பி வைத்திருக்கிறார். இது குறித்து ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு இருந்த ஹரிஸ் ரவுப்,

- Advertisement -

“லெஜன்ட் கேப்டன் மற்றும் கேப்டன் கூல் தோனி, இந்த ஜெர்சியை எனக்கு பரிசளித்து அங்கீகாரம் கொடுத்திருக்கிறார். தோனியின் நம்பர் 7 இன்னும் ரசிகர்களின் மனதை வென்று கொண்டிருக்கிறது. இதனை எனக்கு பரிசளித்ததற்கு மிகவும் நன்றி.” என உருக்கமாக பதிவிட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.