தென்ஆப்பிரிக்காவை சாய்க்க.. கில் ஸ்ரேயாசை வைத்து அஷ்வின் போடும் ஸ்கெட்ச்.. வெளியான தகவல்!

0
356
Ashwin

தற்போது இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் தென் ஆப்பிரிக்கா அணிவுடன் விளையாட அந்த நாட்டில் முகாமிட்டிருக்கும் இந்திய அணியில் முக்கியமான வீரராக முகமது சமி மட்டுமே இல்லாமல் இருக்கிறார்.

மற்றபடி தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் முக்கியமான வீரர்கள் எல்லோருமே இடம் பெற்றிருக்கிறார்கள். இந்த முறை எப்படியாவது தென் ஆப்பிரிக்கா மண்ணில் டெஸ்ட் தொடரை வென்றுவிட இந்திய அணி மும்முரமாக இருக்கிறது.

- Advertisement -

மேலும் இந்த முறை தென்னாப்பிரிக்கா மண்ணில் முதல்முறையாக இந்திய அணி டெஸ்ட் தொடரை வென்றால், உலகக் கோப்பை இறுதி போட்டியில் தோல்வி அடைந்ததற்கு கொஞ்சம் மருந்தாக அமையவும் வாய்ப்பு இருக்கிறது.

தென்னாப்பிரிக்கா மண்ணில் இந்திய நட்சத்திர சுழற்பந்துவீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின் 6 டெஸ்ட் போட்டிகளில் 10 விக்கெட் மட்டுமே எடுத்திருக்கிறார். மேலும் முதல் டெஸ்ட் போட்டியில் அஸ்வின் இல்லை சர்துல் தாக்கூர் இருவரில் ஒருவர் மட்டுமே இடம்பெற முடியும்.

இந்த நிலையில் தென் ஆப்பிரிக்க மண்ணில் வலது கை மற்றும் இடது கை பேட்ஸ்மேன்களுக்கு எப்படியான பந்துவீச்சை அமைக்க வேண்டும் என்பது குறித்து, ரவிச்சந்திரன் அஸ்வின் தனித்திட்டம் ஒன்றை உருவாக்கி வருகிறார்.

- Advertisement -

இதுகுறித்து அவர் கூறும் பொழுது “வலது கை பேட்ஸ்மேன் என்று வரும் பொழுது நான் தென் ஆப்பிரிக்க அணியின் மார்க்ரம் மற்றும் பவுமா ஆகியோர் பேட்டிங் செய்வது பற்றி கற்பனை செய்து பார்க்க வேண்டும். நான் பயிற்சியில் ஸ்ரேயாஸ் மற்றும் வில்லுக்கு எப்படி பந்து வீசுகிறேன் என்பது அவசியமற்றது.

நான் ஒரு மெதுவான பந்தை ஸ்டெம்புக்கு வெளியே வீசும் பொழுது ஸ்ரேயாஸ் அதை தடுப்பார். அதே சமயத்தில் கொஞ்சம் வேகமாக வீசும் பொழுது என்ன மாதிரி ஷாட் நினைக்கிறார்கள்? பந்தின் ட்ரிப்டை அவர்களால் கணிக்க முடிகிறதா என்பதைப் பார்க்க வேண்டும். நான் தற்பொழுது பழைய பந்தில் பந்து வீசி வருகிறேன். இதற்கு புதிய பந்தில்
வீசுவது சிறப்பாக இருக்கிறது.

எந்த ஒரு சுற்றுப்பயணத்திலும் பந்துவீச்சாளர்களுக்கு பயிற்சி போட்டிகள் மிகவும் முக்கியம். நான் என்ன லைனில் வீச வேண்டும் என்று முடிவு செய்கிறேன். மேலும் நான் இடது கை பேட்ஸ்மேனுக்கு திட்டமிடுகிறேன்.

நான் பயிற்சியில் எனது முதல் பந்தை ஜெய்ஸ்வாலுக்கு வீசினேன். ஸ்டம்ப் லைனில் வீசி ஆட வைப்பது எனது நோக்கம். ஆடுகளம் வரண்டு இருக்கும்பொழுது பந்து தேய்ந்து போக வாய்ப்பு இருக்கிறது. எனவே பந்து திரும்புகிறதா இல்லை நேராக வருகிறதா? என்று இடது கை பேட்ஸ்மேனுக்கு தெரியாது. எனவே ஷார்ட் லெக்கில் கேட்ச் பிடிக்க வாய்ப்பு இருக்கிறது!” என்று கூறியிருக்கிறார்!