ஆஸ்திரேலிய அணிக்குத் தேர்வாகியுள்ள தமிழக கிரிக்கெட் வீரர் – ரசிகர்கள் பெருமிதம்

0
436
Nivethan Radhakrishnan

தமிழ்நாட்டில் பிறந்த நிவேதன் ராதாகிருஷ்ணன் என்ற வீரர் தற்போது ஆஸ்திரேலிய அணிக்காக விளையாட தெரிவு செய்யப்பட்டுள்ளார். 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடர் நெருங்குவதால் ஆஸ்திரேலிய அணி அந்த தொடரில் தங்கள் நாட்டு சார்பாக விளையாட போகும் வீரர்களின் பட்டியலை அறிவித்து உள்ளது. அதில் தமிழ்நாட்டை சேர்ந்த நிவேதன் ராதாகிருஷ்ணன் என்ற வீரரின் பெயரும் இடம்பெற்றுள்ளது. ஆஸ்திரேலிய அணியில் தமிழ் பெயர் இடம் பெற்று இருப்பதால் யார் இந்த வீரர் என்று அணி அறிவிப்பு வந்த உடனேயே ரசிகர்களை தேட ஆரம்பித்துவிட்டனர். அதற்கான விடை தற்போது கிடைத்துள்ளது.

நடந்து முடிந்த ஐபிஎல் தொடரில் இவர் டெல்லி அணிக்காக
நெட் பவுலராக இருந்துள்ளார். மேலும் இரண்டு முறை தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் விளையாடி உள்ளார். இவரின் தனித்துவம் என்னவென்றால் இவரால் இரண்டு கைகளிலும் சுழற்பந்து வீச்சு முறையை பயன்படுத்தி பந்து வீச முடியும். இந்த வித்தியாசமான ஆடை முறையை ஆஸ்திரேலிய அணியில் அவருக்கு இடத்தை பெற்றுக் கொடுத்துள்ளது.

- Advertisement -

இது குறித்து இவர் பேசும் பொழுது நான் விளையாடும் போது சென்னையிலோ அல்லது ஆட்டங்களை தொலைக்காட்சியில் பார்க்கும் போது இரண்டு கைகளிலும் பந்துவீசும் போது யாருமே பின்பற்றுவது கிடையாது. இடதுகை பேட்டிங் வீரருக்கு வலதுகை சுழற்பந்து வீச்சு வழங்குவதற்கு இடது கை சுழற்பந்து வீச்சு என்று இருவேறு முறைகளில் வீசி பேட்டிங் வீரர்களை நிலைகுலைய வைப்பதில் இவர் வல்லவர். மேலும் இப்படி வீசுவதால் மற்றவர்கள் என்ன பேசுவார்கள் என்பது குறித்த பயம் தனக்கு இல்லை என்றும் கூறியுள்ளார். எவ்வளவு முடியுமோ அவ்வளவு தூரம் முயற்சி செய்வேன் என்றும் தோல்விகளை குறித்து கவலைப்படுவது இல்லை என்றும் கூறியுள்ளார்.

மேலும் இந்திய அணியின் சீனியர் சுழற்பந்து வீச்சாளரான அஸ்வின் உடன் டெல்லி அணியில் இருந்த போது அனுபவங்களை பகிர்ந்து கொண்டது மிகவும் மகிழ்ச்சிகரமான விஷயம் என்று கூறியுள்ளார். மற்றொரு தமிழக அணியில் சிறந்த வீரரான சுப்ரமணியம் பத்ரிநாத் உடன் தமிழ்நாடு பிரீமியர் லீக் தொடரில் ஆடும் போது நன்கு அனுபவங்களை கற்றுக் கொண்டுள்ளார். இந்த அனுபவம்தான் தனக்கு மிகவும் உதவிகரமாக இருக்க போகிறது என்றும் அவர் கூறியுள்ளார். அடுத்த ஆண்டு ஜனவரி 13-ஆம் தேதி முதல் இந்த 19 வயதுக்குட்பட்டோருக்கான உலக கோப்பை தொடர் தொடங்க உள்ளது. தமிழக வீரரின் திறமையை இந்த தொடரில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.