“கம்மின்ஸ் டீம் உண்மையில் ஸ்ட்ராங்கா இல்ல.. ரோகித் டீமை ஜெயிக்க முடியாது” – ஆஸி முன்னாள் கேப்டன் பேச்சு

0
314
Paine

நியூசிலாந்து சென்றுள்ள ஆஸ்திரேலியா அணி இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 2 போட்டிகளையும் வென்று தொடரை அபாரமாக கைப்பற்றி இருக்கிறது.

அதே வேளையில் ஆஸ்திரேலியா அணியின் டாப் ஆர்டர்கள் எதிர்பார்த்தபடி விளையாடவில்லை. டேவிட் வார்னர் ஓய்வு பெற்றதை அடுத்து ஸ்மித் துவக்க வீரராக மேலே சென்றார். இதற்குப் பிறகு அவர் ஒரே ஒரு இன்னிங்ஸ் மட்டுமே ஆறு டெஸ்ட் போட்டிகளில் குறிப்பிடும்படி விளையாடி இருக்கிறார்.

- Advertisement -

மேலும் மற்றுமொரு துவக்க ஆட்டக்காரர் உஸ்மான் கவாஜாவும் சமீப காலத்தில் ஏதாவது ஒரு இன்னிங்ஸில் மட்டுமே ஸ்கோர் செய்யக் கூடியவராக இருக்கிறார். லபுசேன் தற்பொழுது நடந்து முடிந்த நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்டில்தான் இரண்டாவது இன்னிங்ஸில்தான் 90 ரன்கள் எடுத்தார்.

ஆஸ்திரேலியா அணியின் டெஸ்ட் பேட்டிங்கொஞ்சம் சுமாராகவே இருந்து வருகிறது. உள்நாட்டில் வெஸ்ட் இண்டிஸ் அணிக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் தோற்று இருந்தது குறிப்பிடத்தக்கது. நியூசிலாந்து அணிக்கு எதிராகவும் கேமரூன் கிரீன் மற்றும் அலெக்ஸ் கேரி ஆகியோரது இன்னிங்ஸ்களால் மட்டுமே தொடரை வென்று இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தற்பொழுது இது குறித்து பேசி உள்ள ஆஸ்திரேலியா முன்னாள் கேப்டன் டிம் பெய்ன் ” நியூசிலாந்து அணிக்கு எதிராக ஆஸ்திரேலிய அணி விளையாடிய விதத்தில் நான் ஏமாற்றம் அடைகிறேன். நாங்கள் அவர்களை விட நல்ல அணி. போதுமான ரன்களை எடுக்காமல் எப்போதும் வென்று விடுவோம் என்று நம்ப முடியாது. இப்படித்தான் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக உள்நாட்டில் தோற்றோம். பயிற்சியாளர் குழு மற்றும் கேப்டன் ஆகியோரை கேட்டால் ‘ எங்கள் பேட்டர்களைப் பற்றி எந்த கவலையும் இல்லை’ என்று சொல்லி வருகிறார்கள்.

- Advertisement -

கடந்த நான்கு டெஸ்ட் போட்டிகளாக பதில்களை விட கேள்விகள்தான் மிக அதிகமாக பெருகிக்கொண்டே வருகிறது. அதே சமயத்தில் மேலும் சில புதிய பதில்களையும் நாம் கண்டறிய வேண்டும்.

நாங்கள் நியூசிலாந்துக்கு எதிராக சரியாக விளையாடவில்லை. வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக தோற்றோம். இங்கிலாந்து அவர்களது முழு பலத்தில் விளையாடினால் எங்களை வெல்லும்.

இதையும் படிங்க : “ஷூ வாங்க முடியாத வறுமை.. இவர்தான் உதவி செஞ்சார்.. மறக்க மாட்டேன்” – சர்துல் தாக்கூர் பேட்டி

அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியவுக்கு வருகின்ற வர இருக்கிறது. பும்ரா மற்றும் சமி உடன் வரும் இந்திய அணி நிச்சயம் ஆஸ்திரேலியாவுக்கு தொந்தரவு கொடுக்கப் போகிறது.மேலும் இந்திய அணியில் முகமது சிராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் ரவீந்திர ஜடேஜா போன்றவர்கள் இருக்கிறார்கள். இது ஆஸ்திரேலியாவுக்கு எளிதான ஒன்றாக இருக்காது” எனக் கூறியிருக்கிறார்