மும்பை இந்தியன்ஸ் அணி ஹர்திக் பாண்டியா தலைமையில் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல் மூன்று போட்டிகளை தோற்று, நான்காவது போட்டியில் சொந்த மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிக்கு எதிராக முதல் வெற்றியை பெற்றது. இந்த நிலையில் நாளை பெங்களூர் அணிக்கு எதிராக விளையாட இருக்கிறது. மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா பேட்டிங்கில் தங்களுக்கு மிக முக்கியமானவர் என்று டிம் டேவிட் கூறியிருக்கிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணி டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு எதிராக கடைசிப் போட்டியில் வெல்வதற்கு கடைசி கட்டத்தில் டிம் டேவிட் மற்றும் ரோமாரியோ செப்பர்ட் இருவரும் அதிரடியாக பேட்டிங் செய்தது மிக முக்கிய காரணமாக அமைந்தது. அந்தப் போட்டியில் ஹர்திக் பாண்டியா மிகவும் குறைவான ஸ்டிரைக் ரேட்டில் விளையாடி இருந்தார்.
கேப்டனாக அவர் மீது சில விமர்சனங்கள் இருந்து வந்தது. டெல்லி அணிக்கு எதிரான போட்டியின் போது அவர் மிகவும் மெதுவாக விளையாடியதால் பேட்ஸ்மேன் ஆகவும் அவர் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டது. ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணி போட்டியை வென்றதால் இந்த விமர்சனங்கள் அப்படியே நின்று விட்டது.
இந்த நிலையில் ஹர்திக் பாண்டியா குறித்து பேசி உள்ள டிம் டேவிட் கூறும் பொழுது “நாங்கள் கடைசி போட்டியில் எப்படி விளையாடினோம் என்பது குறித்து நாங்கள் ஆலோசித்தோம். பேட்டிங்கில் ஹர்திக் பாண்டியா எங்களுக்கு மிக முக்கியமான வேலையை செய்து வருகிறார். நீங்கள் கடந்த போட்டியில் எங்களை பார்த்தால் பின் இறுதியில் நாங்கள் ரன் வேகத்தை அதிகரிப்பதற்கு கடினமாக போராடி விளையாடினோம்.
ஹர்திக் சரியான இன்னிங்ஸ் விளையாடி எங்களுக்கு நல்ல அடித்தளத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அதன் காரணமாகவே எங்களால் இறுதியில் அதிரடியாக செல்ல முடிந்தது. மேலும் ஆட்டம் இழந்த பந்தில் சிக்ஸர் அடிக்க முயற்சி செய்து தான் ஆட்டம் இழந்தார். நீங்கள் எக்ஸ்ட்ரா பேட்ஸ்மேன் வைத்திருப்பது நீங்கள் அதிரடியாக விளையாடும் சுதந்திரத்தை தருகிறது. சிலர் அதை பயன்படுத்தி சுதந்திரமாக விளையாடுகிறார்கள். சிலர் எச்சரிக்கையாக விளையாடுகிறார்கள். கொல்கத்தா சுதந்திரமாக விளையாடுகிறது.
இதையும் படிங்க : ஜெய்ஸ்வால் தடுமாறுவது இதனால்தான்.. ஆனால் அவர் பேட் சீக்கிரமா பேச போகுது – கவாஸ்கர் கருத்து
அதே சமயத்தில் கொல்கத்தாவை எடுத்துக் கொண்டால் அதே சுதந்திரமான வழியில் பேட்டிங் செய்ததுதான் சிஎஸ்கே அணிக்கு எதிராக மொத்தமாக மிடில் வரிசை சரிந்தது. எனவே இப்படி சுதந்திரமாக விளையாடுவதால் இரண்டுமே நடக்க வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால் ஹர்திக் பொறுப்பாக விளையாடி நாங்கள் கடைசியில் அதிரடியாக விளையாடுவதற்கான இடத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். அதற்கு முந்தைய போட்டியில்முதல் இரண்டு பந்துகளில் இரண்டு பவுண்டர்கள் அடித்த ஹர்திக் பாண்டியாவையும் பார்த்தோம். அவர் எவ்வளவு சக்தி வாய்ந்தவர் சிறந்தவர் என்பது எங்களுக்கு தெரியும். அவருக்கான நேரம் வரும்பொழுது எங்களுக்காக ஆட்டத்தை வெல்வார்” என்று கூறி இருக்கிறார்.