ஒரு விஷயத்தை சூர்யா பாய் கேட்டா நல்லது.. இந்த போட்டிக்கு என்னுடைய பிளான் இதுதான் – திலக் வர்மா பேட்டி

0
9
Tilak

இன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரையும் கைப்பற்றியது. இந்த போட்டியில் தான் அதிரடியாக விளையாடி அரைசதம் அடித்தது குறித்து திலக் வர்மா பேசியிருக்கிறார்.

இந்த போட்டியில் டாஸ் தோற்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 20 ஓவர்களில் 231 ரன்கள் குவித்தது. இந்திய அணியின் தரப்பில் திலக் வர்மா 42 பந்துகளில் 73 ரன்கள், இவருடன் இணைந்து விளையாடிய ஹர்திக் பாண்டியா 25 பந்தில் 63 ரன்கள் குவித்தார்கள். இந்த ஜோடியின் அதிரடியே இந்திய வெற்றிக்கு முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

என் திட்டம் இப்படித்தான்

இந்த போட்டியில் திலக் வர்மா தான் களம் இறங்கிய முதல் பந்திலேயே இறங்கி வந்து பவுண்டரி அடித்து ஆரம்பித்தார். மேலும் தொடர்ந்து அந்த இன்டென்ட்டை விட்டுவிடாமல் எல்லா ஓவர்களிலும் பவுண்டரி அடிப்பதற்கு முயற்சி செய்தார். இதன் காரணமாக இந்திய அணி எதிர்பார்த்த ஸ்கோரை அடித்தது.

இதுகுறித்து திலக் வர்மா பேசும் பொழுது “இந்த அகமதாபாத் விக்கெட் எப்படி இருக்கும் என்று எனக்கு நன்றாகவே தெரியும். மேலும் இன்று ஆரம்பத்தில் சஞ்சு மற்றும் அபிஷேக் இருவரும் விளையாடிய விதத்தை பார்த்த பொழுது ஆடுகளம் பேட்டிங் செய்வதற்கு சாதகமாக இருப்பது தெரிந்தது. எனவே நான் தொடர்ந்து நல்ல ஸ்ட்ரைக் ரேட்டை வைத்துக் கொள்ள முடிவு செய்தேன். அந்த இன்டென்ட்டை தொடர்ந்து காட்ட முயற்சி செய்தேன்”

- Advertisement -

சூர்யா பாய்க்கு தெரிந்தால் நல்லது

“ஹர்திக் பாய் பேட்டிங் சிறப்பாக இருந்தது. அதை எதிர்முனையில் இருந்து பார்ப்பது அற்புதமான விருந்தாக அமைந்தது. அவர் மிகவும் கிளீனாக ஹிட் செய்தார். அவர் தற்போது சிறந்த நிலையில் இருக்கிறார். நான் பேட்டிங் செய்யும்பொழுது என் மனதில் எந்த இலக்கும் இல்லை. தொடர்ந்து ஸ்கோர் செய்ய விரும்பினேன். நாங்கள் 230 முதல் 240 ரன்கள் எடுக்க நினைத்தோம். இறுதியில் நாங்கள் அந்த இலக்கை அடைந்தோம்”

இதையும் படிங்க: 14ஆவது முறை.. இந்திய அணியும் வருண் சக்கரவர்த்தியும் சிறப்பு சாதனை.. 3-1 என பதிலடி.. தொடரை வென்றது இந்தியா

“நான் தொடர்ந்து என்னுடைய பந்துவீச்சில் உழைத்து வருகிறேன். அடுத்தடுத்த போட்டிகளில் நான் பந்து வீசவும் செய்யலாம். இதை சூர்யா பாய் கேட்டால் நல்லது. ஆனால் வரும் ஆட்டங்களில் நான் பந்து வீசுவதற்கு நிறைய வாய்ப்புகள் இருக்கிறது” என்று கூறியிருக்கிறார்.

- Advertisement -