சிஎஸ்கேவுக்கு புது கோச் யார்?.. நாங்க இதை இப்படித்தான் டீல் செய்ய போறோம் – ருதுராஜ் வெளிப்படை பேச்சு

0
1

​சிஎஸ்கே அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த ஸ்டீபன் பிளெமிங்கிற்கு பதிலாக புதிய பயிற்சியாளரை நியமிப்பது குறித்து அணியின் கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் முக்கிய கருத்தைப் பகிர்ந்துள்ளார்.

​ஐபிஎல் தொடரில் கடந்த 2008 ஆம் ஆண்டு முதல் விளையாடி வரும் சிஎஸ்கே அணி இதுவரை பலமுறை கோப்பைகளை வென்று சாதனைகளைப் படைத்துள்ளது. இந்த அணி இவ்வளவு பெரிய வெற்றிப் பயணத்தை எட்டியதற்கு அதன் கட்டமைப்பு மற்றும் தொடர்ச்சியான செயல்பாடுகளே முக்கிய காரணமாக அமைந்தது.

- Advertisement -

​எனினும், கடந்த தொடரில் சிஎஸ்கே அணி 14 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகளில் மட்டுமே வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் எட்டாவது இடத்தை மட்டுமே பிடிக்க முடிந்தது. தொடர் வெற்றிகளைப் பெற்றுத் தந்த அணியின் நீண்ட கால பயிற்சியாளரான பிளெமிங்கும் சமீபத்தில் தனது பதவியில் இருந்து விலகினார்.

​அணியின் தற்போதைய சூழல் மற்றும் புதிய தலைமை பயிற்சியாளரைத் தேர்வு செய்வது குறித்து கெய்க்வாட் பேசும்போது “எங்களுக்கு நிச்சயம் ஒரு ஹெட் கோச் இருப்பார். இதுபற்றி மேனேஜ்மென்ட் ஏற்கனவே தீவிரமாக யோசித்து வருகிறது. ஆனால் அடுத்த ஐபிஎல் தொடர் தொடங்குவதற்கு இன்னும் நிறைய டைம் இருக்கிறது. அதனால் புதிய கோச்சை நியமிப்பதில் எங்களுக்கு எந்தவித அவசரமும் இல்லை” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -

​மேலும் தோனியிடம் இருந்து கேப்டன்சியை ஏற்றுக்கொண்டது பற்றி அவர் பேசும்போது “எம்எஸ் தோனியிடம் இருந்து கேப்டன்சியை வாங்கிய பிறகு என்னுடைய ரெஸ்பான்சிபிலிட்டி மிகவும் அதிகமாகிவிட்டது. அவருடைய பிரம்மாண்ட வெற்றிகளுக்குப் பிறகு மக்கள் புதிய கேப்டனிடம் நிறைய எதிர்பார்ப்பார்கள், ஆனால் நான் இந்த ரோலை என்ஜாய் செய்யும் வரை அதை மகிழ்ச்சியாகவே செய்வேன். 2008 ஆம் ஆண்டு முதல் ரசிகர்கள் எங்கள் சக்சஸை கொண்டாடி வருகிறார்கள், அதேபோல் இந்த டப் டைமிலும் அவர்கள் எங்கள் டீமிற்கு சப்போர்ட் செய்ய வேண்டும்” என்று கூறி இருக்கிறார்.

- Advertisement -