14ஆவது முறை.. இந்திய அணியும் வருண் சக்கரவர்த்தியும் சிறப்பு சாதனை.. 3-1 என பதிலடி.. தொடரை வென்றது இந்தியா

0
591
ICT

இன்று தென் ஆப்பிரிக்கா அணிக்கு எதிரான ஐந்தாவது டி20 போட்டியில் ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மேலும் ஐந்து போட்டிகள் கொண்ட டி20 தொடரை 3-1 எனக்கு கைப்பற்றியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்கா அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்திய அணியின் துணை கேப்டன் கில் காலில் ஏற்பட்ட காயத்தின் காரணமாக விளையாடவில்லை. அவருடைய இடத்தில் சஞ்சு சாம்சன் துவக்க வீரராக வாய்ப்பு பெற்றார்.

- Advertisement -

ஹர்திக் பாண்டியா சூறாவளி

இதைத் தொடர்ந்து முதலில் பேட்டிங் செய்ய வந்த இந்திய அணிக்கு அபிஷேக் ஷர்மா 21 பந்தில் 34 ரன்கள், சஞ்சு சாம்சன் 22 பந்தில் 37 ரன்கள் எடுத்தார்கள். இதற்கு அடுத்து நான்காவது இடத்தில் வந்த கேப்டன் சூரியகுமார் யாதவ் 7 பந்தில் 5 ரன்கள் மட்டும் எடுத்து ஆட்டம் இழந்து ஏமாற்றம் தந்தார்.

இதைத்தொடர்ந்து ஐந்தாவது இடத்தில் களம் இறங்கிய ஹர்திக் பாண்டியா 16 பந்தில் அரைசதம் அடித்து, 25 பந்துகளில் தலா ஐந்து பவுண்டரி மற்றும் சிக்ஸர்கள் உடன் 63 ரன்கள் குவித்தார். இவருடன் இணைந்து விளையாடிய திலக் வர்மாவும் அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் ஒரு சிக்ஸர் உடன் 73 ரன்கள் குவித்தார். 20 ஓவர்களில் இந்திய அணி ஐந்து விக்கெட் இழப்புக்கு 231 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இந்திய அணி வெற்றி

இதைத்தொடர்ந்து களம் இறங்கிய தென் ஆப்பிரிக்க அணிக்கு குயிண்டன் டி காக் 35 பந்துகளில் 9 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 65 ரன்கள் எடுத்து நல்லா ஆரம்பத்தை ஏற்படுத்தினார். இவருக்கு அடுத்து டிவால்ட் பிரிவியஸ் மட்டுமே தாக்குப்பிடித்து விளையாடி 17 பந்தில் 31 இடங்கள் எடுத்தார். மற்ற எந்த பேட்ஸ்மேன்களும் பெரிய பங்களிப்பு கொடுக்கவில்லை.

இதையும் படிங்க : 231 ரன்.. ஹர்திக் பாண்டியா ஸ்பெஷல் சாதனை.. திலக் வர்மாவின் தொடரும் அசத்தல்.. இந்திய அணி ரன் குவிப்பு

இறுதியில் 20 ஓவர்கள் முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி எட்டு விக்கெட் இழப்புக்கு 21 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதைத்தொடர்ந்து 30 ரன்கள் வித்தியாசத்தில் இந்திய அணி வெற்றி பெற்று தொடரையும் வென்றது. இந்திய பந்துவீச்சில் வரும் சக்கரவர்த்தி நான்கு மற்றும் பும்ரா இரண்டு விக்கெட்டுகள் வீழ்த்தினார்கள். மேலும் இந்திய அணி தொடர்ந்து 14வது டி20 தொடரை வென்றிருக்கிறது. இத்துடன் இந்த தொடரில் வருண் சக்கரவர்த்தி 10 விக்கெட் வீழ்த்தினார். இதை மூன்று முறை செய்த ஒரே பவுலராக சாதனை படைத்திருக்கிறார்.

- Advertisement -