பரபரப்பான முதல் டெஸ்டில் இலங்கையை சொந்த மண்ணில் வீழ்த்தியது பாகிஸ்தான் ; இனி இங்கிலாந்து பாதைதான் என அறிவிப்பு!

0
360
PakvsSl

பாகிஸ்தான அணி தற்பொழுது இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கை நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்று இருக்கிறது.

இந்த டெஸ்ட் தொடரின் முதல் டெஸ்ட் போட்டி சில நாட்களுக்கு முன்பு தொடங்கி நடைபெற்று வந்தது. இந்தப் போட்டிக்கான டாஸில் வென்ற இலங்கை முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

- Advertisement -

அந்த அணிக்கு மேல் வரிசையில் இருந்து பெரிய ரன் பங்களிப்புகள் கிடைக்கவில்லை. தனஞ்செய அருமையாக விளையாடி 122 ரன்கள் எடுக்க, இலங்கை தனது முதல் இன்னிங்ஸில் 312 ரன்கள் எடுத்தது.

அடுத்த தனது முதல் இன்னிங்ஸ் விளையாடிய பாகிஸ்தான் அணிக்கு முதல் ஐந்து விக்கெட்டுகள் 101 ரன்களுக்கு விட்டது. இதற்கடுத்து வந்த பேட்ஸ்மேன் களுடன் இணைந்து மிகச் சிறப்பாக விளையாடி பாகிஸ்தானின் சவுத் ஷகில் 208 ரன்கள் குவித்து ஆட்டம் இழக்காமல் களத்தில் நின்றார். இவரது அவ்வாறு ஆட்டத்தின் காரணமாக முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்று 461 ரன்கள் பாகிஸ்தான அணி குவித்தது.

இதற்கு அடுத்து பின்தங்கிய நிலையில் இருந்து விளையாடிய இலங்கை அணிக்கு மீண்டும் மேல் வரிசையில் இருந்து பெரிய பங்களிப்புகள் கிடைக்கவில்லை, இரண்டாவது இன்னிங்ஸிலும் தனஞ்செய டி சில்வா மட்டுமே தாக்குப் பிடித்து விளையாடி 82 ரன்கள் எடுக்க, இலங்கை இரண்டாவது இன்னிங்ஸில் 279 ரன்கள் எடுத்தது.

- Advertisement -

இதற்கு அடுத்து 130+ இலக்கை நோக்கி களம் இறங்கிய பாகிஸ்தான் அணிக்கு, இலங்கையின் ஐந்தாவது நாள் ஆடுகளம் பேட்டிங் செய்ய அவ்வளவு எளிதாக இல்லை, இந்த இலக்கை ஆறு விக்கெட்டுகளை இழந்து பாகிஸ்தான அணி எட்டியது. இதன் மூலம் நான்கு வித்தியாசத்தில் இலங்கை அணியை வென்று இந்த டெஸ்ட் தொடரில் தற்பொழுது பாகிஸ்தான் அணி முன்னிலை வகிக்கிறது.

மேலும் பேட்டிங் செய்ய சாதகமாக இருக்கும் ஆடுகளத்திலும் பாகிஸ்தான் பேட்டிங் என்பது மந்தமாகவே இருக்கும். ஆனால் இந்த முறை இலங்கைக்கு வந்து சுழற் பந்துவீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் அதிரடியாக விளையாடி பாகிஸ்தான் ரன்கள் சேர்த்து இருக்கிறது. மேலும் இனி டெஸ்ட் கிரிக்கெட்டில் வேகமாக விளையாடி ரன்கள் குவிப்போம் என்றும் பாகிஸ்தான் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது மட்டும் இல்லாமல் இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுழற்சியில் இங்கிலாந்து சென்று பாகிஸ்தான அணி விளையாட இருக்கிறது. இங்கிலாந்தின் பாதையில் திரும்பி இருக்கும் பாகிஸ்தான அணி, மிகச்சிறந்த வேகப்பந்து வீச்சு படையை வைத்திருப்பதால், இந்த முறை உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கான ஓட்டத்தில் பாகிஸ்தானும் சவாலாக இருக்கும் என்று எதிர்பார்க்கலாம்!