ஐபிஎல்.. 2024 ஏலத்தில் வாங்கப்பட்டாலும் .. இந்த ஆண்டுடன் நடையை கட்ட வாய்ப்புள்ள 3 வீரர்கள்

0
4962

17 வது ஐபிஎல் தொடரானது வரும் மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நடைபெற உள்ளது. இதற்கான மினி ஏலம் டிசம்பர் மாதம் நடைபெற்று முடிந்திருக்கிறது. ஐபிஎல்லில் கலந்து கொள்ளும் 10 அணிகளும் தங்களுக்குத் தேவையான வீரர்களை எடுத்துள்ளனர்.

ஐபிஎல்லைப் பொறுத்தவரை ஒரு வருட ஒப்பந்தம் என்பது பொதுவானவை. வீரர்களின் பங்களிப்பைப் பொருத்தே அணிகளின் ஒப்பந்த நீட்டிப்பு நடைபெறும். ஒரு அணி வேண்டுமானால் எந்த ஒரு வீரரையும் தக்க வைத்துக் கொள்ளலாம் அல்லது விடுவித்தும் கொள்ளலாம். எனவே சில வீரர்களுக்கு இந்த ஐபிஎல் தொடர் கடைசி சீசனாகவும் இருக்க வாய்ப்புண்டு. அவர்களில் மூன்று முக்கிய வீரர்களை பற்றி காண்போம்.

- Advertisement -

1.முகமது நபி

ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஆன இவர், உலகக்கோப்பையில் முன்னணி அணிகளை வீழ்த்தி ஆச்சரியம் அளித்தார். இவர் தலைமையில் ஆப்கானிஸ்தான அணி நல்ல முன்னேற்றங்களைக் கண்டு வருகிறது. ஐபிஎல் இல் இவர் சன்ரைசர்ஸ் அணிக்காக விளையாடினார். நல்ல சுழற்பந்துவீச்சாளரான இவர் அவ்வப்போது பேட்டிங் பங்களிப்பும் அளிக்கக் கூடியவர்.

இவரைத் தற்போது மும்பை அணி ஏலத்தில் எடுத்துள்ளது. தற்போது 39 வயதான இவர் மும்பை அணிக்காக விளையாடும் கடைசி ஐபிஎல் ஆக கூட இருக்கலாம். எனவே 2025 சீசனில் இவர் விளையாட வாய்ப்பில்லை. எனவே அடுத்தடுத்த சீசன்களில் இவரை மும்பை அணி பயிற்சியாளராக நியமிக்கவும் வாய்ப்புள்ளது.

- Advertisement -

2.உமேஷ் யாதவ்

போன சீசனில் அறிமுகப்படுத்தப்பட்ட இம்பாக்ட் பிளேயர் என்னும் விதி உமேஷ் யாதவ் போன்ற பேஸ் ஸ்பெஷலிஸ்ட்களை தொடர்ந்து பயன்படுத்த வாய்ப்பளிக்கிறது. சமீபத்திய ஏலத்தில் உமேஷ் யாதவ் இவ்வளவு பெரிய தொகைக்கு வாங்கப்பட்டது இதுவும் ஒரு முக்கிய காரணம்.

இவர் கொல்கத்தா மற்றும் பெங்களுர் அணிகளுக்காக விளையாடி இருக்கிறார். இவரின் வயதும் அதிகரித்து வருகிறது. எனவே இவர் விளையாடும் கடைசி தொடராகவும் இது இருக்கலாம். இவர் தற்போது குஜராத் அணிக்காக விளையாடவிருக்கிறார்.

3.சாய் ஹோப்

சாய் ஹோப் விளையாடும் கடைசி ஐபிஎல் சீசன் ஆக இது இருக்கும். இவரைத் தற்போது டெல்லி கேப்பிடல்ஸ் அணி ஏலத்தில் எடுத்துள்ளது. ஆனால் டெல்லி அணியில் ஏற்கனவே டிரிஸ்டன், ஸ்டப்ஸ் மற்றும் குமார் குஷாக்ரா ஆகியோர் பேக்கப் கீப்பர்களாக இருக்கும் பொழுது இவரை ஏலத்தில் எடுத்தது ஏன் என்று புரியவில்லை. இவரது சமீபத்திய செயல்பாடு சிறப்பாக இருக்கும் பட்சத்தில் அடுத்தடுத்த சீசனங்களில் மற்ற அணிகள் இவரை ஏலத்தில் எடுக்க ஆர்வம் காட்டும். இல்லையெனில் இது இவருக்கு கடைசி சீசனாகவும் அமைய வாய்ப்புள்ளது.