உலக கோப்பை தொடரின் இறுதி நேரத்தில் காயம் காரணமாக விளையாட முடியாமல் போன மூன்று முன்னணி இந்திய கிரிக்கெட் வீரர்கள்

0
131

கிரிக்கெட் வீரர்களை பொறுத்தவரையில் ஒவ்வொரு வீரருக்கும் உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்கிற கனவு மற்றும் ஏக்கம் கண்டிப்பாக இருக்கும். உதாரணத்திற்கு இந்திய அணியின் லெஜெண்ட் கிரிக்கெட் வீரரும் கிரிக்கெட்டின் கடவுள் என்று அழைக்கப்படும் சச்சின் டெண்டுல்கருக்கு கூட அந்த ஆசை ஏற்பட்டது.

1983ஆம் ஆண்டு இந்திய அணி உலக கோப்பை தொடரை கைப்பற்றியதை வீட்டில் இருந்து கண்ட சிறிய சிறுவனது மனதில், தானும் இந்திய அணிக்கு இது போல உலக கோப்பை தொடரில் விளையாட வேண்டும் என்றும் உலக கோப்பையை வெல்ல வேண்டும் என்கிற கனவும் எழுந்தது. இன்று ஒட்டுமொத்த உலக கோப்பை தொடரில் அதிக ரன்கள் குவித்த வீரராக அவர் இருக்கிறார். இறுதியில் 2011ஆம் ஆண்டு அவரது கனவும் நிறைவேறியது.

- Advertisement -

இதுபோன்று ஒவ்வொரு வீரருக்கும் நிச்சயம் ஒரு லட்சியம் அல்லது கனவு இருக்கும். சிலருக்கு உலக கோப்பை தொடரில் விளையாடும் வாய்ப்பு கிடைத்துவிடும். ஆனால் கடைசி நேரத்தில் அவர்களால் விளையாட முடியாத சூழ்நிலை ஏற்படும். ஏதேனும் ஒரு காரணத்தினால் இஞ்சுரி அல்லது மற்ற காரணத்தினால் அதுபோன்ற இக்கட்டான சூழ்நிலை ஏற்படும். இது இந்திய அணியை சேர்ந்த 3 வீரர்களுக்கும் ஏற்பட்டுள்ளது, அவர்கள் யாரென்று தற்போது பார்ப்போம்.

  1. இஷாந்த் சர்மா (2015ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடர்)

2013ம் ஆண்டு எம்எஸ் தோனி தலைமையிலான இந்திய அணி சாம்பியன்ஸ் டிராபி தொடரை இங்கிலாந்தில் வென்றது. அத்தொடரில் அதிக விக்கெட்டுகளை (12 விக்கெட்டுகள்) கைப்பற்றிய பந்துவீச்சாளராக ரவீந்திர ஜடேஜா வலம்வந்தார். அவருக்கு அடுத்தபடியாக இந்திய அணியில் இஷாந்த் ஷர்மா 10 விக்கெட்டுகள் கைப்பற்றினார். அரையிறுதி போட்டியில் 3 விக்கெட்டுகள் மற்றும் இறுதிப் போட்டியில் 2 விக்கெட்டுகள் அவர் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது.

இதன் காரணமாக இரண்டு ஆண்டுகள் கழித்து ஆஸ்திரேலியாவில் நடந்த உலக கோப்பை தொடரில் அவர் இந்திய அணியில் விளையாட தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் கடைசி நேரத்தில் முழங்காலில் ஏற்பட்ட காயம் காரணமாக தொடரில் இருந்து வெளியேறினார். அவருக்கு பதிலாக அத்தொடரில் மோகித் சர்மா விளையாடியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
  1. பிரவீன் குமார் – 2011 உலககோப்பை தொடர்

2007-08 ஆண்டுக் இடையே நடந்த சிபி சீரியஸில் ஆஸ்திரேலிய அணிக்கு எதிராக இறுதிப்போட்டியில் அற்புதமாக இவர் வந்து வீசியதை அவ்வளவு எளிதில் நம்மால் மறந்துவிட முடியாது. அந்த குறிப்பிட்ட ஆண்டுகளில் அவர் தொடர்ச்சியாக மிகச் சிறப்பாக விளையாடி வந்தார் அதன் காரணமாகவும் 2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் இவர் அணியில் இணைக்கப்பட்டார்.

அதிர்ஷ்டவசமாக இறுதிநேரத்தில் முழங்கையில் ஏற்பட்ட காயம் குணமடைய சில நாட்கள் எடுத்துக்கொள்ளும் என தெரியவர தொடரில் இருந்து வெளியேறினார். இவருடைய இடத்தில் அத்தொடர் முழுக்க ஸ்ரீசாந்த் விளையாடியது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
  1. விரேந்திர சேவாக் – 2009 மற்றும் 2010 ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை தொடர்கள்

2007ஆம் ஆண்டு நடந்த உலகக் கோப்பை டி20 தொடரிலும் 2011ம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரிலும் சேவாக் அற்புதமாக விளையாடி நாம் பார்த்திருப்போம். ஆனால் இதற்கு இடையில் 2009 மற்றும் 2010ம் ஆண்டுகளில் நடந்த உலக கோப்பை டி20 தொடர்களில், காயம் காரணமாக இவரால் விளையாட முடியாமல் போனது.

2009ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை டி20 தொடரில் தினேஷ் கார்த்திக் இவரது இடத்தில் அணிக்குள் நுழைந்தார். அதேபோல 2010ஆம் ஆண்டு நடந்த உலக கோப்பை தொடரில் முரளி விஜய் இவரது இடத்தில் இந்திய அணியில் இடம் பிடித்ததும் குறிப்பிடத்தக்கது.