இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 5 போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடர் தற்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. முதல் 3 போட்டிகளின் முடிவில், மூன்றிலும் ஆஸ்திரேலிய அணி மிக எளிதாகவே இங்கிலாந்து அணியை வீழ்த்தி மாபெரும் வெற்றி அடைந்து 2021-2022 ஆஷஸ் டெஸ்ட் தொடரை முன்பே கைப்பற்றி விட்டது.
இந்நிலையில் மீதமுள்ள இரண்டு போட்டிகள் தற்போது சம்பிரதாயமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. மீதமுள்ள 2 போட்டிகளிலாவது இங்கிலாந்து அணி ஆறுதல் வெற்றி அடையுமா என்கிற ஏக்கத்தில் அதனுடைய ரசிகர்கள் இருக்கின்றனர்.
நாளையுடன் 4வது டெஸ்ட் போட்டி நிறைவுபெற போகின்றது. இங்கிலாந்து அணி அதனுடைய 2வது இன்னிங்சில் ஆஸ்திரேலிய அணி நிர்ணயித்த வெற்றி இலக்கான 388 ரன்களை நோக்கி சேஸ் செய்து கொண்டிருக்கிறது. 4ஆம் நாள் ஆட்ட முடிவில் இன்று அந்த அணி எந்தவித விக்கெட் இழப்பின்றி 30 ரன்கள் குவித்து விளையாடி வருகிறது.
4வது டெஸ்ட் போட்டி நிறைவு பெறுவதற்கு முன்பாகவே, இங்கிலாந்து ரசிகர்களுக்கு ஒரு சோகமான செய்தி தற்போது வெளியாகியுள்ளது. இங்கிலாந்து அணியின் முன்னணி பேட்ஸ்மேன்களான ஜோஸ் பட்லர் ஜானி பேர்ஸ்டோ மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலக அதிக வாய்ப்புள்ளதாக தற்போது செய்தி உறுதியாகியுள்ளது.
காயம் காரணமாக ஓய்வு எடுக்க இருக்கும் பேர்ஸ்டோ பட்லர் மற்றும் ஸ்டோக்ஸ்
ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4வது டெஸ்ட் போட்டி நடைபெற்றுக் கொண்டிருக்கும் வேளையில், இங்கிலாந்து அணியின் முக்கிய வீரர்களான பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் மற்றும் ஜானி பேர்ஸ்டோ ஆகியோர் 5வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவது குறித்து தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.
4வது டெஸ்ட் போட்டியில் விளையாடி கொண்டிருந்த பொழுது பென் ஸ்டோக்ஸுக்கு சிறிய தசை பிடிப்பு ஏற்பட்டது உள்ளதாக தெரியவந்துள்ளது. மறுபக்கம் ஜோஸ் பட்லருக்கு இடது ஆள்காட்டி விரலும், ஜானி பேர்ஸ்டோவிற்கு வலது கட்டை விரலும் காயம் அடைந்து உள்ளது. இவர்கள் இருவருக்கும் எலும்பு முறிவு ஏற்பட்ட இருக்க அதிக வாய்ப்பு உள்ளதாகவே தற்பொழுது கூறப்படுகிறது.
எனவே கடைசி மற்றும் 5வது டெஸ்ட் போட்டியில் இவர்கள் மூவரும் பங்கெடுத்து விளையாடுவது மிகப்பெரிய கேள்வி தான். தற்பொழுது வெளிவந்த செய்தியின் அடிப்படையில் இவர்கள் மூவரும் 5வது டெஸ்ட் போட்டியில் இருந்து விலகவே அதிக வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இங்கிலாந்து அணியில் இளம் மாற்று வீரர்கள் களம் இறங்க அதிக வாய்ப்பு
ஸ்டோக்ஸ், பேர்ஸ்ட்ரோ மற்றும் பட்லர் 5வது டெஸ்ட் போட்டியில் விளையாட வில்லை என்றால் பேக் அப் விக்கெட் கீப்பிங் பேட்ஸ்மேன்கள் ரோரி பர்ன்ஸ் அல்லது ஒல்லி போப் அவர்களுக்கு பதிலாக இடம்பெற்று விளையாட அதிக வாய்ப்பு உள்ளது.
அதே சமயம் பேட்ஸ்மேனாக டேனியல் லாரன்ஸ்சும், ஆல்ரவுண்டர் வீரர் இடத்தில் கிறிஸ் வோக்ஸ் அல்லது கிரெய்க் ஓவர்ட்டன் அணியில் இடம் பெற்று விளையாடவும் அதிக வாய்ப்பு உள்ளது.
மாற்று வீரர்களாக இவர்கள் விளையாடினாலும் மிகவும் அனுபவம் உள்ள ஜானி பேர்ஸ்டோ ஜோஸ் பட்லர் மற்றும் பென் ஸ்டோக்ஸ் ஆகியோர் இங்கிலாந்து அணியில் இடம் பெறாமல் போனால் அந்த அணி சற்று வலுவிழந்தே காணப்படும். எனவே இங்கிலாந்து அணி நிர்வாகம் என்ன முடிவு எடுக்கப் போகிறது என்பதையும், 5வது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் வேகத்தை இங்கிலாந்து அணி எப்படி சமாளிக்கப் போகிறது என்பதையும் நாம் பொறுத்திருந்து பார்ப்போம்.