“இந்தூர் மைதானத்தில் இந்திய பேட்ஸ்மேன்களின் மூன்று சிறந்த டெஸ்ட் இன்னிங்ஸ்கள்”!

0
1190

இந்திய மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி வருகின்ற புதன்கிழமை மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூரில் வைத்து நடைபெற இருக்கிறது. முதல் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி வெற்றி பெற்று பார்டர் கவாஸ்கர் கோப்பை டெஸ்ட் தொடரில் முன்னிலையில் உள்ளது.

ஆஸ்திரேலியா அணி மீதம் இருக்கும் இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெற்று தொடரை சமன் செய்ய முயற்சி செய்யும். இதனால் இந்தப் போட்டிக்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடமும் கிரிக்கெட் விமர்சகர்களிடமும் அதிகமாகவே இருக்கிறது.

- Advertisement -

மூன்றாவது போட்டி நடைபெறும் இந்தூரின் ஹோல்கர் கிரிக்கெட் ஸ்டேடியம் இந்திய அணிக்கு ராசியான மைதானமாகவே இருந்திருக்கிறது. இதற்கு முன் நடைபெற்ற இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் இந்திய அணி மிகப்பெரிய அளவில் வெற்றியை பெற்றிருக்கிறது. 2016 ஆம் ஆண்டு இந்த மைதானத்தில் நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியா நியூசிலாந்து அணியை 326 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி வெற்றி பெற்றது. 2019 ஆம் ஆண்டு நடைபெற்ற பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 42 ரன்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தியது.

இந்திய அணியின் பேட்ஸ்மேன்கள் இந்தூர் மைதானத்தில் டேட்டிங் செய்வதை மிகவும் விரும்பியுள்ளனர். இதற்கு முன் நடைபெற்ற டெஸ்ட் போட்டிகளில் அவர்கள் எடுத்த ரண்களே அதற்கு சாட்சியாக இருக்கின்றன. இந்தூர் மைதானத்தில் இந்திய வீரர்களின் மிகச்சிறந்த மூன்று டெஸ்ட் இன்னிங்ஸ்களை பார்ப்போம்.

மாயங் அகர்வால்:
ஹோல்கர் மைதானத்தில் தனி நபராக அதிக ரன்கள் எடுத்தவர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் மாயங் அகர்வால். இவர் 2019 ஆம் ஆண்டு பங்களாதேஷ் அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் 330 பந்துகளில் 243 ரன்கள் எடுத்தார். இந்த மைதானத்தில் ஒரு தனி நபரால் எடுக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் இதுவாகும். இந்த ஆட்டத்தில் 28 பவுண்டரிகளையும் 8 சிக்ஸர்களையும் அடித்தார் அகர்வால். இந்திய அணி இந்தப் போட்டியில் ஒரு இன்னிங்ஸ் மற்றும் 42 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

விராட் கோலி:
இந்த மைதானத்தில் இரண்டாவது அதிகபட்ச ஸ்கோரை அடித்திருப்பவர் இந்திய அணியின் முன்னாள் டெஸ்ட் கேப்டன் விராட் கோலி. 2016 ஆம் ஆண்டு நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் கேப்டனாக இருந்த விராட் கோலி 211 ரன்கள் எடுத்தார். இதில் 20 பௌண்டரிகள் அடங்கும். இந்திய அணி 100 ரங்குக்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தபோது விராட் கோலி வந்து மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

அஜிங்கியா ரகானே:
நியூசிலாந்து அணிக்கு எதிராக ரகானே எடுத்த 188 ரன்கள் இந்த மைதானத்தில் அடிக்கப்பட்ட மூன்றாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில்
மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரகானே இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியுடன் இணைந்து நான்காவது விக்கெட்க்கு 365 ரன்கள் சேர்த்தனர். இந்தப் போட்டியில் இந்திய அணி 326 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி மிகப்பெரிய வெற்றி பெற்றது.