“அந்த இளம் வீரருக்கு இந்த முறையும் வாய்ப்பு கிடைக்காது” – இந்திய அணியின் முன்னாள் தேர்வு குழு தலைவர் பேட்டி!

0
366

ஒரு சிறிய இடைவேளைக்குப் பிறகு சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் மீண்டும் கலைக்கட்ட தொடங்கி இருக்கின்றனர். இங்கிலாந்து அணி டெஸ்ட் போட்டியில் தற்போது அயர்லாந்து அணிக்கு எதிராக விளையாடிக் கொண்டிருக்கிறது . இதனைத் தொடர்ந்து பாரம்பரியமிக்க ஆஷஸ் டெஸ்ட் தொடர் நடைபெற இருக்கிறது .

இதற்கிடையே இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றுவதற்காக பலப்பரீட்சை நடத்த இருக்கின்றன . இந்த இரண்டு அணிகளும் மோத உள்ள போட்டி இங்கிலாந்தின் ஓவல் மைதானத்தில் வைத்து நடைபெற இருக்கிறது .

- Advertisement -

இந்தப் போட்டிக்காக இரு அணி வீரர்களும் தீவிரமான பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றனர் . முன்னதாக நடைபெற்ற நான்கு டெஸ்ட் போட்டிகளைக் கொண்ட தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது . இதன் மூலம் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றது .

ஆஸ்திரேலியா அணியை பொறுத்தவரை அந்த அணி முழு பலத்துடன் இருக்கிறது . இங்கிலாந்தின் ஆடுகளங்கள் வேகப்பந்து வீச்சிக்கு சாதகமாக இருக்கும் என்பதால் ஆஸ்திரேலியா அணி பலம் வாய்ந்ததாக கருதப்படுகிறது . மேலும் இந்திய அணியை பொறுத்தவரை ரிஷப் பண்ட் மற்றும் பும்ரா ஆகியோரின் காயம் பின்னடைவாக அமைந்திருக்கிறது .

சமீபத்தில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிராக இந்தியாவில் வைத்து நடைபெற்ற டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டார் பரத் . அவரது பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் இரண்டுமே சராசரியாக இருந்தது . இது ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் இடையே பல விமர்சனத்தை உருவாக்கியது. உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராக பணியாற்ற வேண்டும் என்று முன்னாள் வீரர்கள் பலரும் கருத்து தெரிவித்து வந்த நிலையில் ஐபிஎல் தொடரின் போது ஏற்பட்ட காயம் காரணமாக அவர் இந்தப் போட்டியை தொடரில் பங்கேற்கவில்லை.

- Advertisement -

இந்நிலையில் இந்திய அணியின் இளம் விக்கெட் கீப்பர் இசான் கிசானுக்கு வாய்ப்பு அளிக்கப்படலாம் என்று ஒரு தகவல் பரவி வருகிறது . இதுகுறித்து தனது கருத்தை பதிவு செய்து இருக்கிறார் இந்திய அணியின் முன்னாள் தேர்வுக்குழு தலைவர் சபா கரிம் . இதுகுறித்து பேசி இருக்கும் அவர் ” இந்திய அணி இசான் கிசானுக்கு வாய்ப்பு அளிக்கும் என்று நான் நினைக்கவில்லை என்று தெரிவித்துள்ளார் . இந்திய அணியின் பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் ரோகித் சர்மா இவர்கள் இருவரும் ஒவ்வொரு வீரருக்கும் அதிகமான வாய்ப்புகளை வழங்குகின்றனர் . அதன் அடிப்படையில் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியிலும் பரத்துக்கே வாய்ப்பு வழங்கப்படும்” என்று தெரிவித்தார்,

மேலும் இதுபற்றி தொடர்ந்து பேசிய அவர் ” இந்திய அணி இசான் கிஷானுக்கு வாய்ப்பு வழங்குவதென்றால் அவருக்கு இந்தியாவில் நடைபெற்ற டெஸ்ட் போட்டியின் போது வழங்கி இருக்கும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போன்ற முக்கியமான போட்டியில் அணித் தேர்வில் எந்தவித மாற்றமும் இருக்காது என்று நான் நினைக்கிறேன்” எனக் கூறியிருக்கிறார் சபா கரீம்.