“உலக கோப்பை பாகிஸ்தான் மேட்ச்ல இந்த இளம் வீரர் உங்களுக்கு ஆட்டத்தை ஜெயிச்சு கொடுப்பாரு” – தினேஷ் கார்த்திக் உறுதி

0
644
Indvspak

ஐசிசி இந்தியாவில் நடைபெற இருக்கும் ஒருநாள் கிரிக்கெட் உலகக்கோப்பை தொடருக்கான முழு அட்டவணையை இன்று மதியம் வெளியிட்டது!

சில வாரங்களுக்கு முன்பாகவே வெளியாகி இருக்க வேண்டிய உலகக்கோப்பைக்கான அட்டவணை வெளியாகாமல் இருந்ததற்கான காரணம், பாகிஸ்தான் தனது மூன்று ஆட்டங்களை மாற்ற சொல்லிக் கேட்டது!

- Advertisement -

ஐசிசி மற்றும் பிசிசிஐ பாகிஸ்தான் கோரிக்கையை ஏற்காமல் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டபடி ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பைக்கான அட்டவணையை இன்று வெளியிட்டு இருக்கிறது.

இதில் அக்டோபர் 15ஆம் தேதி குஜராத் அகமதாபாத் மைதானத்தில் இந்திய அணி பாகிஸ்தான் அணியுடன் மோதும் போட்டி நடைபெற இருக்கிறது. குஜராத் அகமதாபாத் மைதானத்தில் பாகிஸ்தான் தாங்கள் விளையாட விரும்பவில்லை என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் குறிப்பிட்ட அதே மைதானத்தில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி நடப்பதால் வழக்கத்திற்கு மாறான எதிர்பார்ப்பு தற்போதே இந்தப் போட்டி குறித்து ரசிகர்களிடையே உருவாகி இருக்கிறது.

- Advertisement -

இதுகுறித்து தினேஷ் கார்த்திக் கூறும் பொழுது ” கடந்த ஆறு எட்டு மாதங்களில் அகமதாபாத் மைதானத்தில் சிலபல நல்ல ஆடுகளங்கள் இருந்திருக்கிறது. இந்தியா பாகிஸ்தான் இந்த மைதானத்தில் உலகக்கோப்பையில் மோதும் போட்டியில் சுப்மன் கில்தான் முன்னணியில் இருக்கப் போகிறார்.

அவர் அகமதாபாத்தில் விளையாடும் ஒவ்வொரு சர்வதேச போட்டியிலும் சதம் அடித்துக் கொண்டே இருக்கிறார். அவர் செல்லும் எல்லா இடங்களுக்கும் அகமதாபாத் ஆடுகளத்தை எடுத்து பாக்கெட்டில் வைத்துக் கொண்டு செல்கிறார்.

நான் ஒரு போட்டியைப் பற்றி பேச விரும்புகிறேன். அது உலகக்கோப்பையில் இந்தியா பாகிஸ்தான் மோதும் போட்டி. இது பிளாக்பஸ்டர் போட்டியாக இருக்கும்.

கடைசியாக இந்த இரண்டு அணிகளும் டி20 உலகக் கோப்பையில் சந்தித்தபோது நான் இந்திய அணியில் இருந்தேன். நான் அந்தப் போட்டிக்குப் பிறகு எப்பொழுது சிரித்தேன் என்று தெரியவில்லை. அந்த அளவிற்கு அந்தப் போட்டி ஒரு வாரத்திற்குத் தாக்கத்தை உண்டாக்கி இருந்தது. எனவே இந்த முறையும் இந்தப் போட்டி சாதாரணமானதாக இருக்காது!” என்று கூறியுள்ளார்!